Sunday, September 30, 2012

பிஞ்சு தென்றலே என்



பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ளவா


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


விழித்து கொண்டேதான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஒரு பூவில் தொட்டில் கட்டி உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்டபோதே
முழுசாய தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்ட கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கின்றதா

படம்: மஜ்னு (2001)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: MG ஸ்ரீகுமார், சந்தியா

வரிகள் : வைரமுத்து

உன் மதமா என் மதமா



ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்னதெல்லாம் போதலையா
மொத்தமாக காதுல தான் ஏறலையா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளுடா
அந்த ஆண்டவன் தான் கிருஸ்துவனா
முஸ்லிமா இல்லை இந்துவா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பண்ணு
சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதான் நம்புறேன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மம்மடா
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்லப்பொழுது
அடியே ஞான தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதை பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்
அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது

உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்

படம்: ராமன் அப்துல்லா (1997)
இசை: இளையராஜா
பாடியவர்: நாகூர் ஹனீஃபா
வரிகள்: வாலி

Saturday, September 29, 2012

உன் பேரை நான் சொல்லும் வேளை



(1) உன் பேரை நான் சொல்லும் வேளை
உதடும் இனிக்கின்றதே

ஆஹா ஆஹா

ஏ கள்ள கலர் மைனா
நீ பேசும் மொழி தேனா
அடி இத்தாலியின் வைனா
என் பக்கம் வாடி குவினா

ஆஹா ஆஹா

நீ சொல்லும் வார்த்தை சாட்டை
அது செய்யும் ரொம்ப சேட்டை
உனக்கு இப்ப நல்ல வேட்டை
என்னை தூக்கு உப்பு மூட்டை

ஆஹா ஆஹா

நீ வைகை நதியானா
நான் நீந்திடுவேன் மீனா
நீ வஞ்சித்து போனா
கருவாடு ஆகுவேனா

ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

நீ சீட்டுக்கட்டு ராணி
நான் உன்னை சுத்தும் தேனீ
அட பட்டர் போல மேனி
நான் உன்னை அணைக்க வா நீ

ஆஹா ஆஹா

ஏ உனக்கு பிடிச்ச கிறுக்கு
அது எனக்கும் புடிச்சு இருக்கு
நான் கார வடை முறுக்கு
நீ இஷ்டம் போல நொறுக்கு

அடி நிலவு பெத்த மகளே
நீ நடக்கும் இரவு பகலே
பனி மலையில் செய்த சிலையே
என் வாழ்க்கை உனக்கு விலையே
ஆஹா ஆஹா ஆஹா

(2) ஏ பெண்ணே ஒரு கோடி கொலுசு ஒலியில்
அறிவேன் உன் கொலுசு ஒலியே

பேபி
உன் சீனி சக்கரை பேச்சு
மன மந்திரிச்சு போச்சு
எனை மயக்கும் உன் மூச்சு
அது மகுடி ஆகி போச்சு

அடி கூடு விட்டு கூடு
நான் பாயும் சேர்ந்து ஆடு
நீ நின்னுக்கிட்டே ஓடு
அட எனக்குள் உன்னை தேடு

நீ பேசுகிற பாஷை
அது நூறு வயலின் ஓசை
உன் மேல கொள்ள ஆசை
அடி துள்ளுது பார் மீசை

ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

நான் குட்டிக்கரணம் போட்டு
அடி உனக்கு போட்டேன் ரூட்டு
நீ கொஞ்சம் கருணை காட்டு
உன் மனசில் என்ன பூட்டு

ஆஹா ஆஹா

நீ விஷயம் உள்ள ஆளு
அட உனக்கு ரொம்ப லொள்ளு
நீ போடும் ஆட்டம் தூளு
அட எங்கு போச்சு வாலு

நான் காதலிச்சேன் பாபி
அடி அடிமையாச்சு ஆவி
நீ மறுத்துவிட்டால் தேவி
உடையாகி போகும் காவி
ஆஹா ஆஹா

(3) ஏ பெண்ணே என் கண்ணை மயக்காமல்
உன்னை பார்த்திருப்பேனே

ஆஹா ஆஹா

ஏ ஜன் ஜனக்கா ஜிக்கா
நான் ஜொள்ளு விடும் கொக்கா
நீ சிரிக்கும் பூசணிக்கா
என் கண்ணை பறிக்கும் அழகா

ஆஹா ஆஹா

ஏ ஜன் ஜனக்கா ஜிக்கா
உன் கண்ணில் குண்டு இருக்கா
நீ கண் அடிச்சாக்கா
என் உள்ளம் சிதறு தேங்கா

உன் மடிப்பு இடை சரக்கா
அதில் சறுக்கட்டுமா சோக்கா
உன்னை அணைக்க வேணும் ஒருக்கா
அந்த மச்சம் எனக்கு இருக்கா

இருக்கா
இருக்கா
ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

உனக்கு ஏத்த ஜோடி
இந்த சூரியன் தான் வாடி
அந்த வட்ட நிலா வெட்டி
நான் போடடுமா மெட்டி

நீ பார்க்கும் பார்வை ஆத்தி
அது பட்டாளத்தான் கத்தி
உன் கண்ணு ரெண்டும் குத்தி
அட மயங்கி போச்சு புத்தி

ஒரு உலக அழகி போட்டி
உன் ஒருத்தி அழகில் காட்டி
நீ ஓரக் கண்ணில் வெட்டி
அட பரந்து போச்சு மெட்டி

படம்: 123 (2002)
இசை: தேவா
பாடியவர்கள்: (1) கார்த்திக், (2) சுரேஷ் பீட்டர்ஸ் (3) உன்னி மேனன், மாதங்கி

வரிகள் : 

நீதானே என் பொன்வசந்தம் - சற்று முன்பு பார்த்த



சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்
ஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்று காண வாடா
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்
ஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : ரம்யா
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, September 28, 2012

இடிச்ச பச்சரிசி புடிச்ச



கல்யாண தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம் சிவந்திருச்சு

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்துருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ நெனச்சக் கனவு ஒண்ணு நெஜமா நடந்துடுச்சு
உன்னோட நான் சேருறது பலிச்சாச்சு

விதைச்ச விதையும் இங்கு செடியா முளைச்சிடுச்சு
பூவும் இல்ல காயும் இல்ல கனியாச்சு

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக் கூத்தாச்சு

ஏ கண்டாங்கி சேலைக் கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு வந்தாச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

ஏ தாங்கும் மரக்கிளையா போற வழி நீ துணையா
கூட வர என்ன கொறை அது போதும்

ஏ ஆலமரத்து மேல கூவும் ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு அது போதும்

என்னோட நீ சிரிச்சா கண்ணீர நீ துடைச்சா
வேறேதும் வேணாமே அது போதும்

வீடு திரும்பையிலே வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா அது போதும்

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

ஏ இடிச்ச பச்சரிசி புடிச்ச மாவிளக்கு
அரைச்ச சந்தனமும் மணக்க
மதுரை மல்லிகைப்பூ சிரிக்கும் செவ்வந்திப்பூ
செவந்த குங்குமப்பூ மயக்க

தை மாசம் வந்துடுச்சு கால நேரம் சேந்துடுச்சு
ஜோடி ஒண்ணா ஆயிடுச்சு மேளச்சத்தம் கேட்டுடுச்சு
மேகம் கருத்திருச்சு மாரி மழை பெஞ்சுடுச்சு
மண்ணில் மணம் ஏரிடுச்சு மஞ்சள் நிறம் கூடிடுச்சு

தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே
தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தணத் தந்தானன்னானன்னானே

படம் : உத்தமபுத்திரன் (2010)
இசை : விஜய் ஆண்டனி
பாடியர்கள் : ரஞ்சித், சங்கீதா, வினயா
வரிகள் : அண்ணாமலை

நீதானே என் பொன்வசந்தம் - வானம் மெல்ல கீழ்



வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருணம் தருணம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

அன்று பார்த்தது 
அந்த பார்வை வேறடி இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே 
உள்ளம் துள்ளி ஓடிடும் வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஓ
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

பாதி வயதிலே 
தொலைந்த கதைகள் தோனுது மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே 
பாதம் நான்கும் போனது மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருணம் தருணம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே
தூறல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுது இங்கே

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
வரிகள் : நா. முத்துக்குமார்

Thursday, September 27, 2012

ஓ திவ்யா ஓ திவ்யா



ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிப்பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

எனக்காக என்னை பற்றி யோசிக்க தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலையாகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும் போது எனக்கே தெரியாமல் தான்
உன் பெயரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எறும்பை போல
உன் காதல் ஏந்திச் செல்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளே மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கிக் கொண்டதே
மிருதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்காக திறந்தும் வைக்கிறேன்

ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
உன் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

படம் : மாசிலாமணி (2009)
இசை : D. இமான்
பாடியவர் : ஷான்
வரிகள் : பா. விஜய் 

இந்த பாடலை தன் உயிர் மூச்சாக கருதும் ஆதவனுக்காக நம் தேன் கிண்ணத்தில் 

புதுப் பெண்ணின் மனசை தொட்டு




புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க

புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே

உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்திலே சொல்லாமல்
இருட்டு வேளையிலே யாரும் காணாமலே
திருட்டுத் தனமாய் சத்தம் செய்யாமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்திருத்ததெல்லாம் சிந்தித்து பாராமலே


புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

என்னைச் சுற்றி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்பக் கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா

புதுப் பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க

படம் : பராசக்தி (1952)
இசை : R. சுதர்சனம்
பாடியர்கள் : MS ராஜேஸ்வரி
வரிகள் : T.N. ராமைய்யா நாயுடு



நீதானே என் பொன்வசந்தம் - என்னோடு வா வா




என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்க தானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பார்காதடி
சின்ன பிள்ளை போல நீ அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கனமே
காதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

Wednesday, September 26, 2012

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்



என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா

காணும் காட்சி தீப்புடிக்க கண்ணு ரெண்டும் நீரெரைக்க
மீலனானும் கர சேத்து போறேனே
சாமி மேல பாரம் போட்டு வாரேனே

ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ 
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பனமே
தூங்காம அண்ணங்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு எப்போதும் கூட இரு
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாலே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துப்புட்டோம்
வீட்டையும் தான் மாத்திப்புட்டோம்

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே 
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே 
செவந்த எடம் பொறந்த எடம்
உதிர்ந்த எடம் புகுந்த எடம்

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்

என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்க

படம் : திருப்பாச்சி (2005)
இசை : தினா
பாடியர்கள் : தினா, சுவர்ணலதா, ராம்கிரண்
வரிகள் : பேரரசு

நீதானே என் பொன்வசந்தம் - காற்றை கொஞ்சம்



காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க

மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சுனில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும்
ஒர் ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும்
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

நேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில்
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள்தொட்டு எண்ணம் ஓடும் தறிக்கெட்டு
இன்னும் என்ன செய்வாயோ  சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே
மீட்டதொடு மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க


படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு



கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா
தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே அம்மாளே

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே ஆஹா
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே அம்மாளே

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்து காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி ஆஹா
ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே அம்மாளே

பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
பொழுதோட கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே

ஆ என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே அம்மாளே
அம்மாளே அம்மாளே

படம்: ஒரு தலை ராகம்(1980)
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
வரிகள் : டி.ராஜேந்தர்

Tuesday, September 25, 2012

ராத்திரி நேரத்து பூஜையில்



ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹாங் ஹாங்  தினம் ஆராதனை
ஹாங் ஹாங் அதில் சுகவேதனை

ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹாங் ஹாங்  தினம் ஆராதனை
ஹாங் ஹாங் அதில் சுகவேதனை

யமுனா நதி கரையொரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்

யமுனா நதி கரையொரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹாங் ஹாங்  தினம் ஆராதனை
ஹாங் ஹாங் அதில் சுகவேதனை

தேகம் எங்கும் தேனுருது
காமன் அவன் தேரோடுது

தேகம் எங்கும் தேனுருது
காமன் அவன் தேரோடுது
தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது

ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹாங் ஹாங்  தினம் ஆராதனை
ஹாங் ஹாங் அதில் சுகவேதனை

படம் : ஊமை விழிகள் (1986)
இசை : மனோஜ் கியான்
பாடியவர் : சசிரேகா
வரிகள் : ஆபாவாணன்

நீதானே என் பொன்வசந்தம் - பெண்கள் என்றால் பொய்யா




பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா

இதற்கு தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே
இவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே
மதிக்கெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று
தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த அயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா. முத்துக்குமார்

நிலை மாறும் உலகில்



நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோ்றும் உணவு அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில் புது வாழ்வுக்கு எங்கே நினைவு

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

படம் : ஊமை விழிகள் (1986)
இசை : மனோஜ் க்யான்
பாடியவர் : KJ யேசுதாஸ்
வரிகள் : ஆபாவாணன்

Monday, September 24, 2012

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி



உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

பட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள் : புதுமைப்பித்தன்

நீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த




முதல் முறை பார்த்த  ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள் அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா அது காதலிக்கு அடையாளங்களா
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய் மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர் : சுனிதி சவுகான்
வரிகள் : நா. முத்துக்குமார்

துள்ளி எழுந்தது பாட்டு



துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல்
மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன
காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்
நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்

துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடு தான் அதை பாடணும்
இரவோடு தான் அரங்கேறணும்
துள்ளி எழுந்தது பாட்டு
சின்னக் குயிலிசை கேட்டு

படம் : கீதாஞ்சலி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : வாலி

Sunday, September 23, 2012

நீதானே என் பொன்வசந்தம் - சாய்ந்து சாய்ந்து




சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்
விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய் ஹேய் ஹேய்

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்

என் தந்தை தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்

அழகான உந்தன் மாக்கோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்

காலம் வந்து வந்து கோலம் இடும்

உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்

சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய் ஹேய்

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில்
மெய்யாகும் பொய்யும்

என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
ஏதேதோ செய்யும்

என் வீட்டில் வரும் உன் பாதம்
என்னாளும் இது போதும்

இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்

ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்

சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா
விழியோடு விழி பேச விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹேய்
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹேய்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, ரம்யா
வரிகள் : நா. முத்துகுமார்

Saturday, September 22, 2012

நீதானே என் பொன்வசந்தம் - புடிக்கல மாமு




புடிக்கல மாமு படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்
புடிக்கல மாமு படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்
வலிக்குது புக்ஸு அலறுது டீனேஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் மூடு
சிங்ககுட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ புக்ஸ அட எடைக்கு போடுடா லாபம்
நான் டென்ஷன் ஆயிட்டேன் பக்கெட்டு பக்கெட்டு
டூருக்கு எங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு ஹே ஹே

புடிக்கல மாமு படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்
புடிக்கல மாமு படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்

என் வார்த்தை நீ கேட்டு வெட்டு வெட்டு கல்வெட்டு
எங்கேயும் சில்அவுட்டு இல்லையின்னா கெட்அவுட்டு
கேல்ஸ் நம்ம கிளாஸில் இல்ல என்ற போதும் தப்பில்ல
சிங்கிள் ஆன பாய்ஸுக்கு தான் வொர்க் அவுட் ஆவும் மாப்பிள்ள
நான் எறிஞ்ச பால் எல்லாம் விக்கெட்டு விக்கெட்டு
இறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு ஹே ஹே

புடிக்கல மாமு படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலெட்ஜ்
வலிக்குது புக்ஸு அலறுது டீனேஜ்

உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடக்கி வாட்டும் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே
காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரியத் தான் அந்த வானம் பத்தாதே
மச்சி கடலுமீனுக்கு கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு வெறும் கனவு பத்தாதே
இந்த லைஃப் நீயும் அனுபவிக்க வயசு பத்ததே
   
அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே
காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே

தடக்கு தடக்கு ரயில போல வருஷம் ஓடும்டா
நீ படுத்து படுத்து எழுந்து பாரு நிமிஷம் ஓடும்டா

எடுக்கு மடுக்கு இல்லையின்னா இளமை எதுக்குடா
நீ குறுக்க நெடுக்க மடக்கலன்னா ஒடம்பு எதுக்குடா
படிக்கிற பாடம் போதாதுடா தெருவுல இறங்கி படிடா
கனவில் எதையும் ஓட்டாதாடா ஜெயிக்கும் இடத்த புடிடா
நம்ம திசையில பாத்து சுத்தி அடிக்குது காத்து ஹேய்
உலுக்கி உலுக்கி முறுக்கி முறுக்கி மேளம் அடிங்கடா

அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே
அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே

காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே
காலேஜ் பத்தாதே டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய தான் அந்த வானம் பத்தாதே

படம் : நீதானே என் பொன்வசந்தம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கார்த்திக், சுராஜ் ஜெகன்,
வரிகள் : நா. முத்துகுமார்

Friday, September 21, 2012

வேணாம் மச்சான் வேணாம்




வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி திறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு
வஞ்சரம் மீனு வௌவ்வாலு கிடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை இறாலு இறங்கி கலக்கு கோபாலு

பைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்
பீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்
பைக்ல தினமும் ஒண்ணா போனோம் பேக்குல இப்ப அவளை காணாம்
பீச்ல சுகமா கடலை போட்டோம் கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும்

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணை முழிச்சுகிட்டா அந்த காதல் கிடையாது
அவ போறாளே போறா தண்ணீரை விட்டு மீனா
நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் கானா

பிகரு சுகரு மாதிரி ஜனக்கு ஜனக்கு வௌவ்வாலு
நட்பு தடுப்பு ஊசிடா ஜனக்கு ஜானு கோபாலு
பிகரு சுகரு மாதிரி பசங்க உடம்பை உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசிடா உடைஞ்சா மனசை தேத்திடும்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு

பாதியில் வந்த பொண்ணை நம்பி ஆதியில் வளர்ந்த நட்பை விட்டேன்
தேதியை போல கிழிச்சுப்புட்டா தேவதை அவளை நம்பி கெட்டேன்
தோலு மட்டும் வெள்ளை உன்னை கவுத்துப்புட்டா
மெல்ல என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்னை திறந்து விடேண்டா
கண்ணில மைய வைப்பாடா அதில பொய்ய வைப்பாடா
உதட்டில சாயம் வைப்பாடா உனக்கு காயம் வைப்பாடா
கண்ணில மைய வைப்பாடா அதில பொய்யோ பொய்யையோ
உதட்டில சாயம் வைப்பாடா உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்னை கவுக்கும் குவாட்டரு
கடலை போல காதல் ஒரு சால்ட் வாட்டரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டிடு
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டினா டவுசர் அவுளும்டா
மம்மி சொன்ன பொண்ணை கட்டுனா டார்சர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ணை கட்டுனா டவுசர் அவுளும்டா
கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா

படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடியவர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன் 
வரிகள் : நா. முத்துக்குமார்

Thursday, September 20, 2012

அட்டகத்தி - ஆசை ஒரு புல்வெளி



ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு
யார் உடல் யாரோடு போனது
மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடியவர்கள் : பிரதீப், கல்யாணி நாயர் 
வரிகள் : கபிலன்

Wednesday, September 19, 2012

3 - போ நீ போ




போ நீ போ போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினால் வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலயா உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ

படம் : 3 (2012)
பாடியவர் : அனிருத், மோகித் சவுகான்
இசை : அனிருத்
வரிகள் : தனுஷ்

Tuesday, September 18, 2012

அட்டகத்தி - ஆடி போனா ஆவணி



ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா 
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
அவ பாவாடை ராட்டினமாக சுத்துரா
ஆடி போனா ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

வத்திக்குச்சி இடுப்பத்தான் ஆட்டி
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் முட்டி
ஐயோ அம்மா என்னை இவ வாட்டி வதைக்குரா
முட்டை முட்டை முழியதான் காட்டி
முன்ன பின்ன இரட்ட ஜடைய ஆட்டி 
மல்லிக பூ வாசமே காட்டி மயக்குரா
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேன்டி கேடி நீயில்லை ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பறந்தேன் 
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி வால் இல்லா காத்தாடி

ஆடி போனா ஆவணி ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி

படம் : அட்டகத்தி (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர் : கானா பாலா
வரிகள் : கபிலன்

Monday, September 17, 2012

அட்டகத்தி - நடுக்கடலுல கப்பல



நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன் 
பாடியவர் : கானா பாலா 
வரிகள் : கானா பாலா

கும்கி - எல்லா ஊரும்




எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே

படம் : கும்கி (2012)
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

Sunday, September 16, 2012

கும்கி - சொல்லிட்டாளே அவ காதல



சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும் 

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

படம் : கும்கி (2012)
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

கும்கி - ஒன்னும் புரியல




ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல

படம் : கும்கி (2012) 
இசை : D இமான் 
பாடியவர் : D இமான் 
வரிகள் : யுகபாரதி

Saturday, September 15, 2012

கும்கி - நீ எப்போ புள்ள



நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
வரிகள் : யுகபாரதி

Friday, September 14, 2012

கும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே



அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ 

உன்னை முதல் முறை கண்ட நொடியினில் 
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட 
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன் 
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

படம் : கும்கி (2012) 
இசை : இமான் 
பாடியவர் : ஹரிச்சரண் 
வரிகள் : யுகபாரதி

கும்கி - அய்யய்யய்யோ ஆனந்தமே (பெண்)



அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

படம் : கும்கி 
இசை : D. இமான் 
பாடியவர் : அதிதி பால் 
வரிகள் : யுகபாரதி

Monday, September 10, 2012

கும்கி - சொய் சொய்ங்




சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

படம் : கும்கி (2012) 
இசை : இமான் 
பாடியவர் : மகிழினி மணிமாறன் 
வரிகள் : யுகபாரதி

Last 25 songs posted in Thenkinnam