Friday, October 31, 2008

764. தீக்குருவியாய் தீங்கனியினை

ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன வழியில்லையா
ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன முடியலையா

கனவுல இவதான் சில்லுன்னு பட்டா
காதலாய் இவதான் சுள்ளுன்னு சுட்டா

தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே

பூ மந்திரத்தீ தூண்டுகிறாய்
தீயினைத் தீநதியினில் தேடுகிறாய் தந்திரா

(தீக்குருவியாய்)


சில்லிடவா சிக்கிடவா கிறங்கிடவா கிறுக்கிடவா
கை தொடு தந்திரா
அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுரையாய் மறையாதா
விறைத்திடு நந்திதா

இடையோர மூன்றாம்பிறையே முத்தம் ஏந்தி வா வா
இமையோரத் தூவல் சிறையே துயில் தூக்கிப் போ போ


(தீக்குருவியாய்)


இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா
சொல்லிடு நந்திதா
காலடியிலே வான்நிலவது பனியாய்ப் படராதா
தேடிடு தந்திரா

மழைநேரக் காற்றே காற்றே மனம் தின்ன வா
குடையோர ஊற்றே ஊற்றே குணம் சொல்லித் தா தா

(தீக்குருவியாய்)


படம்: கண்களால் கைது செய்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: தேன்மொழி
பாடியவர்கள்: ஹரிணி, முகேஷ், ஜான்சன்

Wednesday, October 29, 2008

763சிந்திக்கவைக்கும் சீர் அந்தாதிசிந்திக்கவைக்கும் சீர் அந்தாதி

தேன்கிண்ணம் அன்பு நேயர்களூக்கு இந்த ஒலித்தொகுப்பின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதோ? உண்மை தான் எனது பண்பலை நேயர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களின் அற்புதமான ஆக்கம் தான் இவை. (இவரின் ஏற்கெனவே ஓர் ஆக்கம் நாதஸ்வரம் இசைக்கருவி திரையிசை பாடலில் பங்களிப்பு என்ற ஒலித்தொகுப்பை இந்த தேண்கிண்ணத்தில் வழங்கியிருக்கிறார்,) அதேபோல இந்த ஒலித்தொகுப்பின் தலைப்பை பற்றி என்னவாக இருக்கும் என்று சிந்திக்கிறவர்களூக்கு கீழே உள்ள பாடல்களின் பெயர்களை படித்தாலே ஓரளவுக்கு புரியும் என்று நினக்கிறேன் அப்போதும் புரியாதவர்களூக்கு வேறு வழியில்லை. நேராக ஒலிக்கோப்பிற்க்கு சென்று கேளூங்கள். தலைப்பை பற்றி விரிவான விளக்கம் நான் எழுதப்போவதில்லை ஏனென்றால் பண்பலை அறிவிப்பாளர் ”டிஜ்ஜிடல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களின் அதிரடி குரலில் அவரின் அழகான வர்ணனையில் கேட்டுமகிழுங்கள்.ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் உணர்வுகளையும் வாழ்த்துக்களையும் மிக ஆர்வமுடன் முயற்சி செய்து ஆக்கம் செய்த அன்பு நண்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்களூக்கு உங்கள் அன்பன வாழ்த்துக்களையும் தெரிவித்து அவரின் முயற்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்துங்கள். தேன் கிண்ணம் நேயர்கள் சார்பாகவும் என் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பு: ஒலியின் அளவு தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளவும். ஒலிக்கோப்பு இறக்குமதி செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. நேரம இல்லாதவர்கள் இறக்குமதி செய்து கேட்டு தங்களின் உணர்வுகளை எழுதுங்கள்.சீர் அந்தாதி ஆக்கத்தை உருவாக்கியவர்.

திரு. அகிலா விஜயகுமார்
வீரப்பசெட்டியார் தோட்டம்
தண்ணீர் பந்தல்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் வட்டம்1. நீ இல்லாத - முகமது பின் துக்ளக், எம்.எஸ்.விஸ்வநாதன்
2. இல்லாத பிள்ளைக்கு - அப்பா டாட்டா, சூலமங்கலம் ராஜலக்‌ஷ்மி
3. பிள்ளைக்கு தந்தை - பார்த்தால் பசி தீரும், டி.எம்.சவுந்திராஜன்
4. தந்தை நான் - நீதிபதி, டி.எம்.சவுந்திராஜன்
5. நான் என்ன - பலேபாண்டியா, டி.எம்.சவுந்திராஜன்
6. என்ன ஆனந்தம் - ராஜமுக்தி, எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எல்,வசந்தக்குமாரி
7. ஆனந்தம் என் - சகுந்தலை
8. என் காதல் - தாய்க்கு பின் தாரம் - ஏ.எம்.ராஜா, பானுமதி
9. காதல் நிலவே - ஹலோ மிஸ்டர் ஜமிந்தார், பி.பி.ஸ்ரீனிவாஸ்
10. நிலவே நீ இந்த சேதி - பட்டினத்தார், டி.எம்.சவுந்திராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 23, 2008

762. ச்சூ ச்சூ மாரி - பூ
தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி

ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி


அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி


சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி

வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி


தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி


பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி

தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி

ச்சூ ச்சூ மாரி


படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமதி

Tuesday, October 21, 2008

761திரை மொழியாளுனர் ஸ்ரீதர் அஞ்சலிதிரை மொழியாளுனர் ஸ்ரீதர் அஞ்சலி

நேற்று 20.10/2008 அன்று காலை 10 மணியளவில் பழம்பெரும் திரை பட இயக்குநர் ஸ்ரீதர் காலாமானார். அன்னாரின் நினைவுகள் அனைத்து இசைப் பிரியர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கலந்தவை. அவரைப் பற்றி ஓர் சிறிய ஒலிக்கோப்பு இவை.

திரை உலகில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்திய இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் படப்பாடல்களில் யாரும் மனதை லயிக்காமல் இருக்க முடியாது அவரின் படைப்புக்கள் அனைவரின் உள்ளத்தையும் ஆக்கிரமித்தவை. ரசிகர்களீன் கண்களில் கண்ணீரை வரவழைத்தவர் இவர் ஒருவராக இருக்க முடியும். இதோ நேற்று பண்பலையில் இனிய இரவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நமது ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களீன் அமைதியான குரலில் அவரின் படைப்பாக கோவை ரசிகர்கள் சார்பாக ஒட்டு மொத்தமான அஞ்சலியாக இயக்குநர் ஸ்ரீதரின் பழைய பாடல்கள ஒலிப்பரப்பி பண்பலையின் நேயர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் உசுப்பிவிட்டார். நேற்று இரவு கேட்ட அனைவரின் கண்களூம் கலங்கியிருக்கும் என்பது உண்மை. அவரைப் பற்றி அதிகம் எழுத விருப்பம். இருந்தாலும் ஏதோ ஒரு வித அழுத்தம் மனதை அழுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் ஒலிக்கோப்பில் அவரின் ஆக்கத்தையும் கேட்டுவிட்டு உங்கள் அஞ்சலிகளையும் தெரிவியுங்கள்.
இந்த ஒலிக்கோப்பை அவரின் அஞ்சலியாக ஒலிப்பரப்பிய சூரியன் பண்பலை நிறுவனத்தாருக்கும், ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயான அவருக்கும் பெரிதும் உதவியாக இருந்த திரு. ரவிவர்மா அவர்களூக்கும், கோவை எஸ்.பி.பி ரசிகர்கள் சார்பாகவும், தேன்கிண்ணம் பதிவாளர்கள், நேயர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன். இயக்குநர் ஸ்ரீதர் அவரின் ஆன்மா சாந்தியடையவும் அண்ணாரின் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இசைப்பிரியர்கள்
கோவை ரவி, கோவை எஸ்.பி.பி ரசிகர்கள், மற்றும் தேன்கிண்ணம் இசைப்ப்ரியர்கள்.

ஒலிக்கோப்பில் மனதை கலங்கடிக்கும் பாடல்கள்.

1. ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன்
2. காதலிலே தோல்வியுற்றாள்
3. சொன்னது நீதானா
4. மலரே மலரே தெரியாதோ
5. நெஞ்சம் மறப்பதில்லை
6. ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
7. கண்ணீலே நீர் எதற்க்கு
8. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, October 13, 2008

760.வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்

வானம் என்ன வானம்
தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்

நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்

விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் ( வானம் என்ன வானம்)

நெஞ்சிலே இந்த நெஞ்சிலே
கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே
வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட
கற்றுத் தந்திடலாம்

பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி
பறக்கச் சொல்லிடலாம் (வானம் என்ன )


சொந்தமாய் ஒரு சூரியன்
அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய்
ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே
என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே!
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே! (வானம் என்ன)திரைப்படம்: பிரியமான தோழி
பாடியவர்: ஹரிஹரன்
இசையமைத்தவர்: எஸ். ஏ. ராஜ்குமார்
பாடல் வரிகள்: பா.விஜய்

759சரக்கு இருந்தா அவிழ்த்துவிடு
கோவை கே.பி. சிவகுருநாதன் அவர்களின் ஆக்கத்தில் தேனினும் இனிமையான பாடல்களின் தொகுப்பு வழக்கம் போல் சூரியன் பண்பலையின் அறிவிப்பாளர் டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா குரலில் கேட்க கேட்க எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்களின் ஒலித்தொகுப்பு இது. கேளுங்கள் ஆக்கத்தை உருவாக்கிய அன்பருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவரின் முயற்சியை உங்களூடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

குறிப்பு: ஒலித்தொகுப்பு பெரிதாக இருப்பதால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. காற்றலையில் பதிவு செய்யப்பட்டது ஒலியின் தரம் சற்று குறைவாக இருப்பினும் கேட்பதற்க்கு மனதிற்க்கு நிறைவு தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

என்றும் அன்புடன் உங்கள் கோவை ரவி.

திரு.கே.பி.சிவகுருநாதன்
1/4 பூங்கா நகர்
குறிச்சி அஞ்சல்
சுந்தராபுரம்
கோவை

1. ஆசை வைத்தாள், பி.பி.ஸ்ரீனிவாஸ், தங்கமலர்
2. செந்தமிழ் நாட்டு சோலையிலே, சுகம் இங்கே, கண்ணதாசன்
3. குட்டி ஆடு தப்பி வந்தா, சிதம்பரம் ஜெயராமன். பாசவலை, எம்.எஸ்.வி, ராமமூர்த்தி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
4. சரக்கு இருந்தா அவிழ்த்துவிடு காயமே பொய்யடா, குமுதம், எஸ்.இ.கிருஷ்னன், ஏ.எல்.ராகவன்.
5. சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, சிவகவி, எம்.கே.தியாகராஜ பாகவதர்
6. நெஞ்சம் இதோ, வைரமாலை
7. தென்னங்கீற்று சோலையிலே, பாதை தெரியுது பார், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி
8. இக்கரைக்கு அக்கரைப்பச்சை, டி.எம்.எஸ். அக்கரைப்பச்சை,எம்.எஸ்.விஸ்வநாதன்
9. ஒரே கேள்வி உன்னை கேட்பேன்,

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, October 10, 2008

758. சத்யம் சாம்ராஜ்யம் - அன்பே சகியே எனை ஆள வந்த ரதி நீயே


Anbey Sagiye - BoomeranX feat Dhillip

இதயத்தில் அதி வேகம்
அழகே அருகே முழு நிலவே
என்னை கிறுக்கிய பேனாவே
கண்ணில் நுழைந்த நுன்னுயிரே
கனவாய் கையில் ஏந்தி
என்னை சிரிப்பாய் சிரிப்பவளே..

அன்பே சகியே
எனை ஆள வந்த ரதி நீயே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...

மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்

யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறந்துக் கொண்டாள்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி டஹ்ந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்

தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

ஆல்பம்: சத்யம் சாம்ராஜ்யம்
இசை: பூமெராங்-X
பாடியவர்கள்: திலீப் வர்மன், பூமெராங்-X

757. நவீனம் - யார் சொல்வது அன்பே யார் சொல்வது

Yaar Solvathu Anbe - Rogkwave

அன்பே உன்னை கண்டதும் இதயம் புதிதாகும்
வார்த்தை சொல்ல நினைக்கவும் அதுவும் கடிதமாகும்
காதல் என்பதோ என்று ஒரு வார்த்தை சொல்லவே
அதை நான் அறிந்து பார்க்கயில் என் ஆயுள் முடியுமே..

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

நெஞ்சம் மறந்து போனதோ
ஏனோ உணர்வில்லை
ஆசை அதிகமாகவும்
அதற்கும் தடைகள் இல்லை
கனவே கலைந்து போக
சம்மதம் தர வேண்டும்
அதை நான் எண்ணி பார்க்கவே
நீயும் சொல்ல வேண்டும்

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

விழியோடு ஒரு ஓவியம்
இதழோடு ஒரு காவியம்
உனை பார்த்ததும் உருவாகுமே
என்னில் கலந்து உயிர் ஆகுமே
அந்த வரம் ஏனோ கொடுத்தாய் பெண்ணே
நானும் உறங்காமல் தவித்தேன் கண்ணே
நம் காதல் ஒரு கீதமே
நீயும் சொன்னாய் அதுவும் வேதமே

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

பல உலகம் கடந்தால் என்ன
எந்த புதுமையும் நிகழ்ந்தால் என்ன
இந்த உலகத்தில் வானம் எல்லை
நம் காதலில் அதுவும் இல்லை
வான் மழையோடு சேரும் நேரம்
அதன் போலேதான் உந்தன் சிநேகம்
தினம்தோறும் என்னில் தோன்றி
என் மனதில் இசையாய் வாழ்கிறாய்

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது
யார் சொல்வது அன்பே யார் சொல்வது
நீ சொல்லவே அன்றி யார் சொல்வது

ஆல்பம்: நவீனம்
இசை: சசி Rogkwave
பாடியவர்: சசி Rogkwave

756. The Keys - அக்கா மக

The Keys-akka maga -


அக்கா மக அக்கா மக எனக்கொருத்தி இருந்தாளே
காதலுக்கு ரெடி சொல்லி பாச முத்தம் தந்தாளே
காதலிச்ச சந்தோஷத்தில் ஆகாயத்தில் பறந்தேன்டா
வில்லன் ஒன்னு இருந்தாண்டா மாமன்காரன் அவந்தான்டா

அழகிய கொடியே நீ என்னோடு வாம்மா
உன் அப்பனை நம்பாதே என் பின்னாடி வாம்மா
(அழகிய கொடியே..)
நான் காதலுக்கு காவல்காரன்
சண்டை வந்தா வேட்டைக்காரன்
(அக்கா மக..)

பொண்ணே உனக்கிருக்கு ஆசை மனசு எனக்கிருக்கு
சம்மதம் நீ தந்தால் கொடுத்துடுவேன் முத்தம் ஒன்னு
பாதி வயசாச்சு வீராப்பு உனக்கெதுக்கு
மீசை நரைச்சாச்சு கோபங்கள் உனக்கெதுக்கு
வம்பு சண்டை நமக்கெதுக்கு
பொண்ணை என்கிட்ட அனுப்பிடு விடு

ஒதுங்கிடு மாமா
உன் பொண்ணு வேணும் ஆமா
ஒதுங்கிடு மாமா
உன் பொண்ணு வேணும் ஆமா
அட ஆத்தங்கரை ஒரத்துல
காத்திருப்பேன் வாடி புள்ள
(அழகிய கொடியே..)
(அக்கா மக..)

வாழ வயசிருக்கு உழைச்சு போட மனசிருக்கு
உறங்கும் நேரத்துல கட்டியணைக்கும் தெம்பு இருக்கு
தாத்தா தாத்தான்னு என் பிள்ளை கூப்பிடுது
பேத்தி பேத்தின்னு கொஞ்சலாம்ன்னு ஆசை உனக்கிருக்கு
அந்த நேரம் எப்போ வரும்
எல்லாம் இங்கே நல்ல நேரம்

வழி கொடு மாமா
நீ வாழ விடு மாமா
வழி கொடு மாமா
நீ வாழ விடு மாமா
அட நீயும் நானும் ஜோடிப்புள்ள
காதலிப்போம் வாடி புள்ள
(அழகிய கொடியே..)
(அக்கா மக..)

ஆல்பம்: அக்கா மக
இசை: Darkkey
பாடியவர்கள்: The Keys

விரும்பி கேட்டவர்: இளா

Thursday, October 9, 2008

755. The Journey Begins - வா வா அன்பே நீயில்லையேல் நான்வா வா அன்பே நீயில்லையேல் நான்
என்னை விட்டு செல்ல மனம் ஏது சொல்ல வா
வா வா அன்பே நீயில்லையேல் நான்
என்னை விட்டு செல்ல மனம் ஏது சொல்ல வா

இந்த பிரிவு வாழ்க்கை எனக்கு பெரிய துன்பமே
என்னை வெறுத்த காரணம் என்னவென்று சொல்லடி
நான் செய்த பாவம் என்ன என்று கூறடி
உன் நினைவினாலே வாழ போறேன் காதலி
மறு ஜென்மம் இருந்தால் மீண்டும் என்ன ஆதரி
(வா வா அன்பே..)

நகரத்து வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்றேன்
என் கண்கள் கண்ணீர் தொட்டியாக இல்லையே
என் வீட்டுக்கு முன்பு காதல் சொல்லி தந்தாய்
ஒரு பொய்யை சொல்லி என்னை விட்டு போனாயடி
நோ நோ நோ நோ..
(வா வா அன்பே..)

ஆல்பம்: The Journey Begins
இசை: ப்ரித்வி, Funky ஷங்கர்
பாடியவர்: Funky ஷங்கர்

754. இவந்தாண்டா ஹீரோ - இவந்தான் ஹீரோன்னு கூச்சல் கேட்கும் ஹீரோ வந்தால்


Ivanthanda hero - jooraga pattu paade.mp3 - Boy Radge

இவந்தான் ஹீரோன்னு கூச்சல் கேட்கும் ஹீரோ வந்தால்
Steven Spielberg-உம் Scotch கேட்டவண்டா

நடந்தால் சூப்பர் ஸ்டாரு
சிரிச்சால் ஷூட்டிங் ஸ்டாரு
நடிச்சா ஒரு பாகம் ரெண்டா போகும் நூறு
அழகில் எம்.ஜி.ஆரு
குணத்தில் நம்பியாரு
இவன் போல் பில்-அப்புதான் யாரு?
குடிச்சா ஏப்பள் ஜூஸு
அதில் ஓர் எக்ஸ்ட்ரா ஐஸு
பௌடர் போட்டாக்கா செத்தாண்டா ப்ரோடியூஸரர்
ஆனால் ஹீரோ வந்தால்
கலேக்‌ஷன் பாக்ஸ் ஆஃபிஸ்டா

Jennifer Lopez என் ஸ்டைலை பார்த்தாக்கா
இங்க்லீஷ் முத்தம் கொடுப்பா
Jackie Chan என் ஃபைக்ட்டை பார்த்தாக்கா
நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்பார்
அட மேட்னி இல்லா சின்ன ஊரில் கூட
இந்த ஹீரோ போஸ்டர் இருக்கும்டா
நாங்க பறந்து உதைக்கும் அந்த ஸ்டைலை பார்த்து
அந்த கேப்டன் கூட மிரண்டாண்டா

நடந்தால் சூப்பர் ஸ்டாரு
சிரிச்சால் ஷூட்டிங் ஸ்டாரு
நடிச்சா ஒரு பாகம் ரெண்டா போகும் நூறு
அழகில் எம்.ஜி.ஆரு
குணத்தில் நம்பியாரு
இவன் போல் பில்-அப்புதான் யாரு?
குடிச்சா ஏப்பள் ஜூஸு
அதில் ஓர் எக்ஸ்ட்ரா ஐஸு
பௌடர் போட்டாக்கா செத்தாண்டா ப்ரோடியூஸரர்
ஆனால் ஹீரோ வந்தால்
கலேக்‌ஷன் பாக்ஸ் ஆஃபிஸ்டா

BBC சேனல் என் இண்டர்வியூ போட
வாசல் கியூல நிப்பான்
ஹாலிவூட்டில் கூட என்னை zoom பார்த்து
ஜோரா விசில் அடிப்பான்
அட சல்மான்கான் ஷாருக்கான் ஆக்டிங் எல்லாம்
இந்த ராம்கான் முன்னால் பாப்கார்ண்டா
இங்கே சிட்டி உள்ள கூட்டம் எல்லாம் கேட்க
ஆட இவந்தாண்டா ஹீரோ சொல்லுடா

நடந்தால் சூப்பர் ஸ்டாரு
சிரிச்சால் ஷூட்டிங் ஸ்டாரு
நடிச்சா ஒரு பாகம் ரெண்டா போகும் நூறு
அழகில் எம்.ஜி.ஆரு
குணத்தில் நம்பியாரு
இவன் போல் பில்-அப்புதான் யாரு?
குடிச்சா ஏப்பள் ஜூஸு
அதில் ஓர் எக்ஸ்ட்ரா ஐஸு
பௌடர் போட்டாக்கா செத்தாண்டா ப்ரோடியூஸரர்
ஆனால் ஹீரோ வந்தால்
கலேக்‌ஷன் பாக்ஸ் ஆஃபிஸ்டா

படம்: இவந்தாண்டா ஹீரோ
இசை: Boy Radge

753. நவீனம் - இரு கண்கள் பேசும் வேளை


Iru Kangal -

இரு கண்கள் பேசும் வேளை
காதல் சொன்ன வார்த்தை
காதலான ஆசைகள் உள்ளம் எங்கும் கூடுதே
உனை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ
அந்த சொர்க்கம் காணவே மௌனமாகி தேய்கிறேன்

என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட தென்றலாகி வா வா
என் ஸ்வாசமே என் ஸ்வாசமே
ஒரு முறை தாலாட்டிட வெண்ணிலவே நீ வா

உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே
ஆ.....

ஒவ்வொரு துடிப்பும் உந்தன் ஸ்வாசமாய்
ஒவ்வொரு விழிப்பும் உந்தன் காணலாய்
மாற்றி சென்ற அந்த பெண்மை எந்த தேவதை?
எங்கு என்று நானும் தேட உன்னில் காண்கிறேன்
உன்னில் காண்கிறேன்... அவளை உன்னில் காண்கிறேன்
உண்மை காதலும் இன்று என்றும் மறைந்திடுமா?

நீ எங்கு சென்றாலும் நிலவாக நான் வருவேன்
இரவில் தோன்றும் அந்த மென்மையான நேரத்தில்

உன்னில் என்னை காண்பதே
என்னில் உன்னை காண்பதே
காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம்
கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில் தோன்றுதே

ஆல்பம்: நவீனம்
இசை: சசி Rogkwave
பாடியவர்: திலீப் வர்மன்

Wednesday, October 8, 2008

752. OG நண்பா - நிம்மதியில்லை நிம்மதியில்லை நண்பா

Nimathi Illai - Www.Sukravathanee.Tk

நிம்மதியில்லை நிம்மதியில்லை நண்பா
இன்று நீ மறைந்தவுடன் நிம்மதியில்லை நண்பா
நிம்மதியிலலை நிம்மதியில்லை நண்பா
இன்று நீ மறைந்தவுடன் நிம்மதியில்லை நண்பா

எங்கேயோ பிறந்து ஒன்றாய் சேர்ந்தோம் நண்பா
இன்று நீ மறைந்தவுடன் நிம்மதியில்லை நண்பா
நிம்மதியிலலை நிம்மதியில்லை நண்பா
இன்று நீ மறைந்தவுடன் நிம்மதியில்லை நண்பா

ஆடி அடங்கும் வாழ்க்கை சொன்னாய் அன்று
ஆறடி மண்ணே சொந்தமாச்சு
ஆடி அடங்கும் வாழ்க்கை சொன்னாய் அன்று
ஆறடி மண்ணே சொந்தமாச்சு
ஆறடி மண்ணே சொந்தமாச்சு
நீயில்லை என்றாலும் தாங்காத உள்ளங்கள்
இனி போகும் சோகங்கள்
(நிம்மதியில்லை..)

பெண்மை உயர்த்தி காட்டும் அவளது கற்பு
கற்போட நட்பும் நீளமாச்சு
பெண்மை உயர்த்தி காட்டும் அவளது கற்பு
கற்போட நட்பும் நீளமாச்சு
கற்போட நட்பும் நீளமாச்சு
மறைந்தாலும் நீ இன்னும்
நினைவாலே வாழ்கின்றாய்
அது போதும் என்னாளும்
(நிம்மதியில்லை..)

ஆல்பம்: நிம்மதி இல்லை
இசை: OG நண்பா
பாடியவர்கள்: OG நண்பா

751. ஆரம்பம் - காதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலேகாதல் பூக்கும் நொடியில் பேசடி பார்வையாலே
மாலை வேளை தினமும் தவிக்கிறேன் காதலாலே
உன்னாலே நான் கண்டேனே
உயிராலே நான் அணைத்தேனே
(காதல் பூக்கும்..)

நெஞ்சோடு நானே தாலாட்டுவேனே
என்னோடு நீ வந்தால் பெண்ணே
விழியோடு நானே உறவாகினேனே
முதல் பார்வை மறவேனே கண்ணே
ஓர் வார்த்தை சொல்லாமல் நீயும்
வழியொன்று தெரியாமல் நானும்
மழையில் குடையாக வந்தேன்
விழுந்தால் நிலமாக நின்றேன்
(காதல் பூக்கும்..)

கனவில்லை பூவே
நிஜம்தானே நீயே
நான் பாடும் புது ராகம் நீயே
சோகங்கள் இன்றே சுகமாகும் முன்னே
என்னை தீண்டி உறவாடு அன்பே
உன் ஜீவன் என் ஆயுள் அன்பே
உன் மூச்சில் நான் வாழ்வேன் இங்கே
இது போதும் இது போதும் நெஞ்சே
என் காதல் எங்கே நீ எங்கே
(காதல் பூக்கும்..)

படம்: ஆரம்பம்
பாடியவர்: திலீப் வர்மன்

Tuesday, October 7, 2008

750. Emergency - Sudahkah Belum?Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியா பார்ப்போம்
போடு..

Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

Sudahkah Belum?
பதிலை சொல்ல
கட்டி வச்ச பல்லூன் பறக்குது மேலே
Oil palm மரத்துல பார் தொங்குது மட்ட
உனக்காக வாங்கி தரேன் பூப்பூ சட்டை
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

ஊசி மிளகாய் கடிச்சு பார்த்தேன் காரம்
தூசி பட்டு கண்ணெல்லாம் ஈரம்
காரம் என்ன ஈரம் என்ன
வேருக்கு மரமா பாரம்?

தண்டவாளம் மேலே போகுது ரயிலு
கண்டவங்க பார்ப்பது ஃபிகரு
வந்தா ஃபிகரு போனா தவறு
நீதானே என்னோட உறவு

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

ஆடு மாடு ஒதுங்குது பாரு இக்கரை ஓரம்
குளிக்கும்போது வாங்கி தாரேன் புது சுவக்காரம்
அஞ்சுல நாலு போனா மிச்சம் ஒன்னு
பொன்னாங்கன்னி கீரை தாரே சமைச்சு தின்னு

மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

தண்டவாளம் மேலே போகுது ரயிலு
கண்டவங்க பார்ப்பது ஃபிகரு
வந்தா ஃபிகரு போனா தவறு
நீதானே என்னோட உறவு

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

Sudahkah Belum?
பதிலை சொல்ல
கட்டி வச்ச பல்லூன் பறக்குது மேலே
Oil palm மரத்துல பார் தொங்குது மட்ட
உனக்காக வாங்கி தரேன் பூப்பூ சட்டை
மாம்பழ மரமே மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே
Rambutan கொட்டாத மாம்பழ மரமே

Sudahkah Belum? Sudahkah Belum?
தன்னந்தனியாக பார்ப்போம்
Sudahkah Belum? Sudahkah Belum?
தனியாக ஏங்கி நிப்போம்

ஆல்பம்: Sudahkah Belum?
இசை: Emergency
பாடியவர்கள்: Emergency

749. சரண் - ஒரு பார்வை போதுமேஒரு பார்வை போதுமே
என் பாடல் வாழுமே
ஒரு பார்வை போதுமே
அன்பே..

காலைத் தென்றல் தூக்கம் கலைக்க
இனி ஒரு பொழுதும் தொடங்க
கண்கள் மெல்ல சோம்பல் அழுக
கடிகாரம் மணி என்னை விரட்ட
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஏதோ மின்னல் நெஞ்சை தாக்க
காரணமும் என்ன சொல்ல
உந்தன் முகவரி அறிந்துக்கொள்ல
நீயும் எந்தன் தோழி அல்ல
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஒரு பார்வை போதுமே
என் பாடல் வாழுமே
ஒரு பார்வை போதுமே
அன்பே..

மீண்டும் அவளை தேடிச் செல்ல
இது ஒரு காதல் அல்ல
பொய்கள் நிறந்த பாடல் வாழ்க
நான் ஒரு கவிஞன் அல்ல
தனிமையினில் நடந்துச் செல்ல
சாலையில் யாரும் இல்லை
தேவதைப்போல் கண் முன் தோன்ற
விழியால் மனதை பறித்துக்கொள்ள

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை
பார்வை பார்வை பார்வை
ஒரு பார்வை பார்வை பார்வை

ஆல்பம்: பார்வை
இசை: சரண்
பாடியவர்: சரண்

Monday, October 6, 2008

748 - Goyang Goyang Goyang Kepala GoyangGoyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

உன்னை நீயும் நம்பு உனக்கு ஒரு நல்லது நம்பு
வாழ்க்கையில நீயும் நல்ல பாதை தேடு
உன்னை நீயும் நம்பு உனக்கு ஒரு நல்லது நம்பு
வாழ்க்கையில நீயும் நல்ல பாதை தேடு

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வட்டம் போட்டு ஆடுங்கடா
ஒன்று கூடி பாடுங்கடா
வட்டம் போட்டு ஆடுங்கடா
ஒன்று கூடி பாடுங்கடா

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
வேணா வேணா கெட்ட வாழ்க்கை வேணா
அடிதடி போனா வாழ்க்கை அழியுமடா
Giyang Goyang Goyang...

Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
goyang kepala goyang
Goyang goyang
Goyang goyang

ஆல்பம்: Goyang Goyang
இசை: தமிழா பாய்ஸ்
பாடியவர்கள்: தமிழா பாய்ஸ்

747. செல்வா The Gift - உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன்


oru parvey - Local artist ( malaysia )

ஒரு பார்வை பார்க்கும்போது
உன் காதல் எதிர்ப்பார்த்தேன்

உன் விழியில் என் உருவம் பார்த்துவிட்டேன்
அன்பே ஏன் ஏங்குகிறாய்
உன் காதலை சொல்லிவிடு
(உன் விழியில்..)

மறைக்கின்ற காதல் மலராதம்மா
சொல்லாத காதல் வாழாதம்மா
துணிந்து நின்று சொல்லிவிடு காதல் வாழ்கவே
துணிந்து நின்று சொல்லிவிடு தூய்மையாகவே..
(உன் விழியில்..)

காதல் வருவது தவறு அல்ல
ஜாதி வேதமும் பார்ப்பதல்ல
உள் மனதை நீ பூட்டி வைத்தால்
யாருக்கும் அதனால் லாபம் அல்ல
சின்ன விழி பூ மானே
உன் காதலை சொல் மானே
சின்ன விழி பூ மானே
உன் காதலை சொல் மானே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
(உன் விழியில்..)

இருபது வயதிலும் வாருமம்ம்மா
அறுபது வயதிலும் சீண்டுமம்மா
காதல் வயதை பார்ப்பதல்ல
மனமே சேர்ந்தால் போதுமம்மா
காதல் கொண்ட தேவியே
உன் மனதை தா இங்கே
காதல் கொண்ட தேவியே
உன் மனதை தா இங்கே
மனதை திறந்து சொல்லிவிடு உந்தன் காதலே
துணிந்து நின்று சொல்லிவிடு தூய்மையாகவே
(உன் விழியில்..)

ஆல்பம்: செல்வா The Gift
இசை: Rogkwave
பாடியவர்: சசி Rogkwave

விரும்பி கேட்டவர்: விக்னேஷ்வரன் அடைக்கலம்

746. காதல் வேண்டும் - உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ..


Uyire Tholethen -

உயிரை தொலைத்தேன்..
அது உன்னில்தானோ..
இது நான் காணும் கனவோ நிஜமோ..
மீண்டும் உன்னை காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே..
விழியில் விழுந்தால்.. ஆஆஆஆஆ..
என்னில் எனதாய் நானே இல்லை..
எண்ணம் முழுதும் நீதானே
என் கண்ணே..
(உயிரை..)

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை..
தாலாட்டுதே பார்வைகள்..
(அன்பே..)
உனை சேரும் நாளை..
தினம் ஏங்கினேனே..
நானிங்கு தனியாக அழுதேன்..
விடியும் வரை..
கனவின் நிலை..
உனதாய் இங்கு..
தினம் ஏங்குது..
மனம் உருகிடும்..
நிலை இது..
எந்தன் முதல் முதல் வரும்..
உயிர் காதலில்..
(உயிரை..)

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே..
உன்னோடு நான் மூழ்கினேன்..
(நினைத்தால்..)
தேடாத நிலையில்..
நோகாத வழியில்..
கண் பார்க்கும் இடம் எங்கும் நீதான்..
(விடியும்…)
(உயிரை..)
ஓஓஓஓஓ..

படம்: காதல் வேண்டும்
இசை: ஜெய்
பாடியவர்: திலீப் வர்மன்

Sunday, October 5, 2008

745. வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனேமுன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரஷாந்தினி
வரிகள்:

Saturday, October 4, 2008

744. நாக்க முக்க நாக்க முக்க
மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சி மேளம் கட்டி
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க

நாக்க முக்க நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க

(மாடு செத்தா)

பந்தாட்டம் உலகம் வச்சான்
ராட்டினம் போல் சுத்த வச்சான்
ஏற வச்சான் இறங்க வச்சான்
சுழலவிட்டு மயங்கவச்சான்
மயங்கனவன எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா

மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
கூத்து கட்டுடா

(லேரி சோனா லேரி சோனா)

பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவை வச்சான்
கருவை வச்சான் கற்பை வச்சான்
கற்புக்குள்ள தீயை வச்சான்
தீயை வச்சு எரிய வச்சான்
எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா

மாடு செத்தா மனுசன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
கூத்து கட்டுடா

(லேரி சோனா லேரி சோனா)


அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க நாக்க முக்க


படம்: காதலில் விழுந்தேன்
இசையமைத்து பாடியவர்: விஜய் ஆண்டனி

743தேனமுதமும் திரை இசைசெய்திகளூம்தேனமுதமும் திரை இசைசெய்திகளூம்

நமது தேன்கிண்ண நேயர்களூக்கு மற்றுமொரு இசைப்போதை ஏற்படுத்தும் மலை தேன் போன்ற இனிய பழைய பாடல்களின் வானொலி தொகுப்பு இவை. வழக்கம் போல் இனிய இரவு - அறிவிப்பாளர் திரு.கோபாலகிருஷ்னன், பாடல் ராகங்களும், செய்திகளோடு திரை வரலாற்று செய்திகளூம்.

பெஸ்ட் சிவசாமி ஜெயந்தி
கோவை - 13.

1. என்னை யாரென்று - பாழும் பழமும், எம்.எஸ்.வி, ராமமூர்த்தி
2. தனிமையிலே இனிமை - கே.டி.சந்தானம்
3. மாசிலா நிலவே நம்- அம்பிகாவதி, கோ.மா.பாலசுப்ரமணியம், ஜி,ராமனாதன்
4. காசேதான் கடவுளடா - டி.எம்.எஸ், சக்கரம், வாலி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு
5. மதுரை அரசாலும் மீனாட்சி, திருமலை தென்குமரி, குன்னக்குடி வைத்தியநாதன், சீர்காழி கோவிந்தராஜன்.
6. அமுதும் தேனும் எதற்கு, தைபிறந்தால் வழி பிறக்கும், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன்
7. இசைகேட்டால் புவி அசைந்தாடும், தவப்புதல்வன், எம்.எஸ்.வி, கண்ணதாசன்,
8. சித்திரம் பேசுதடி, டி.எம்.எஸ், சபாஷ் மீனா,
9. நாட்டிய கலையே, சிவகவி,ஹரிதாஸ், எம்.கே.தியாகராஜ பாகவதர்
10. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,

Get this widget | Track details | eSnips Social DNA

742. காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்


<p><a href="undefined?e">undefined</a></p>

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ..ஆ..ஆ....

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானதா
உன்னால் இன்று ருதுவானவ
நானதை சோதிக்கும் நாள் வந்தது..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
போவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்
தன்னன்னானன...தன்னன்னானன..
தன்னன்னானன...தன்னன்னானன..

படம்: பூவெல்லாம் உன் வாசம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சாதனா சர்கம், KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஜெமினி

741. காதலில் விழுந்தேன் - உனக்கென நான் எனக்கென நீ


<p><a href="undefined?e">undefined</a></p>

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறூப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: விஜய் ஆந்தோனி, ரம்யா
வரிகள்: தாமரை

விரும்பி கேட்டவர்: மங்களூர் சிவா

740. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: மங்கை

Friday, October 3, 2008

739.ரகசியமாய் ரகசியமாய் .....

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓஹோ
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
ஓ ஓ ஓஹோ

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உளறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளைத் திரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்
திரைப்படம் : டும் டும் டும்
பாடலைப்பாடியவர்: சாதனா சர்கம் , ஹரிஹரன், இராமநாதன்
இசையமைத்தவர் : கார்த்திக் ராஜா

738. தென்றல் வரும் வழியை


<p> <a href="undefined?e">undefined</a></p>

தென்றல் வரும் வழியை
பூக்கள் அறியாதா ?
தென்றலுக்கு மலரின் நெஞ்சம்
தெரியாதா ?

அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கோடியை
கொள்ளையடிக்காதே நீ

தென்றல் வழியை
ந ந ந ந நா ந
தென்றலுக்கு மலரின்
ந ந ந ந நா ந

நீயா அட நானா
நெஞ்சை முதல் முதல் இழந்தது யார் ?
காதல் என்னும் ஆற்றில்
இங்கு முதல் முதல் குதித்தது யார் ?

என்னில் உன்னை கண்டேன்
நம்மை இரண்டென பிரிப்பது யார் ?
தேகம் அதில் ஜீவன்
ஒன்று பிரிந்திட இருப்பது யார் ?

துன்பம் நீ கொடுக்கும் துன்பம்
கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம்
என்றும் தொடரவேண்டும்

குண்டி மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

காதல் உன் காதல்
அது மலையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம்
அதில் சுட சுட நனைகிறதே

வானம் என் வானம்
ஒரு வானவில் வருகிறதே
மௌனம் என் மௌனம்
ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின்
விதைகள் உன் கண்ணில்
வளர்த்தேன் முட்கள் பூக்கும்
செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரினி
வரிகள்: பழனிபாரதி

737. மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா

<p><a href="undefined?e">undefined</a></p>

மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள் தானா இவள் தானா இவள் தானா
மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர் தானா இவர் தானா இவர் தானா
வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா

உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்
இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்
சந்தன சிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புது கவிதையா தாய்மடி
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

படம்: இனியவளே
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து

Thursday, October 2, 2008

736. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

படம்: கண்டுகொண்டேண் கண்டுகொண்டேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்
வரிகள்: வைரமுத்து

735. ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
அம்மாவை வாங்க முடியுமா நீயும்?
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா?
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..
(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா
இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவை பிடிக்க வைப்பா
பிஞ்சி விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
பல்லு முளைக்க நில்லு முனையால்
மெல்ல மெல்லதான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

மண்ணில் ஒரு செடி முளைச்சா
மண்ணுக்கு அது பிரசவம்தான்
உன்னை பெற துடி துடிச்சா
அன்னைக்கு பூகம்பம்தான்
சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா
பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா
கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
என்ன வேண்டும் இனி உனக்கு?
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
(ஆசைப்பட்ட..)

படம்: வியாபாரி
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

734. உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு


<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Bombay.html?e">Listen to Bombay Audio Songs at MusicMazaa.com</a></p>

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

Wednesday, October 1, 2008

733. எல்லோரும் கொண்டாடுவோம்...!

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி


கல்லாகப் படுத்திருந்து களிப்பவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்


நூறு வகைப் பறவை வரும் கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா


கருப்பில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்


ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?


படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்துவைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
மண்ணிலே வெண்ணெய் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்

732. பச்சை நிறமே பச்சை நிறமே


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் முளையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்,க்ளிண்டன்
வரிகள்: வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam