சிந்திக்கவைக்கும் சீர் அந்தாதி
தேன்கிண்ணம் அன்பு நேயர்களூக்கு இந்த ஒலித்தொகுப்பின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதோ? உண்மை தான் எனது பண்பலை நேயர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களின் அற்புதமான ஆக்கம் தான் இவை. (இவரின் ஏற்கெனவே ஓர் ஆக்கம் நாதஸ்வரம் இசைக்கருவி திரையிசை பாடலில் பங்களிப்பு என்ற ஒலித்தொகுப்பை இந்த தேண்கிண்ணத்தில் வழங்கியிருக்கிறார்,) அதேபோல இந்த ஒலித்தொகுப்பின் தலைப்பை பற்றி என்னவாக இருக்கும் என்று சிந்திக்கிறவர்களூக்கு கீழே உள்ள பாடல்களின் பெயர்களை படித்தாலே ஓரளவுக்கு புரியும் என்று நினக்கிறேன் அப்போதும் புரியாதவர்களூக்கு வேறு வழியில்லை. நேராக ஒலிக்கோப்பிற்க்கு சென்று கேளூங்கள். தலைப்பை பற்றி விரிவான விளக்கம் நான் எழுதப்போவதில்லை ஏனென்றால் பண்பலை அறிவிப்பாளர் ”டிஜ்ஜிடல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயாணா அவர்களின் அதிரடி குரலில் அவரின் அழகான வர்ணனையில் கேட்டுமகிழுங்கள்.
ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் உணர்வுகளையும் வாழ்த்துக்களையும் மிக ஆர்வமுடன் முயற்சி செய்து ஆக்கம் செய்த அன்பு நண்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்களூக்கு உங்கள் அன்பன வாழ்த்துக்களையும் தெரிவித்து அவரின் முயற்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்துங்கள். தேன் கிண்ணம் நேயர்கள் சார்பாகவும் என் வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
குறிப்பு: ஒலியின் அளவு தேவைக்கேற்ப கூட்டிக்கொள்ளவும். ஒலிக்கோப்பு இறக்குமதி செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. நேரம இல்லாதவர்கள் இறக்குமதி செய்து கேட்டு தங்களின் உணர்வுகளை எழுதுங்கள்.
சீர் அந்தாதி ஆக்கத்தை உருவாக்கியவர்.
திரு. அகிலா விஜயகுமார்
வீரப்பசெட்டியார் தோட்டம்
தண்ணீர் பந்தல்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் வட்டம்
1. நீ இல்லாத - முகமது பின் துக்ளக், எம்.எஸ்.விஸ்வநாதன்
2. இல்லாத பிள்ளைக்கு - அப்பா டாட்டா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
3. பிள்ளைக்கு தந்தை - பார்த்தால் பசி தீரும், டி.எம்.சவுந்திராஜன்
4. தந்தை நான் - நீதிபதி, டி.எம்.சவுந்திராஜன்
5. நான் என்ன - பலேபாண்டியா, டி.எம்.சவுந்திராஜன்
6. என்ன ஆனந்தம் - ராஜமுக்தி, எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எல்,வசந்தக்குமாரி
7. ஆனந்தம் என் - சகுந்தலை
8. என் காதல் - தாய்க்கு பின் தாரம் - ஏ.எம்.ராஜா, பானுமதி
9. காதல் நிலவே - ஹலோ மிஸ்டர் ஜமிந்தார், பி.பி.ஸ்ரீனிவாஸ்
10. நிலவே நீ இந்த சேதி - பட்டினத்தார், டி.எம்.சவுந்திராஜன்
2 Comments:
தொகுப்புக்கு நன்றி ரவி சார், நிச்சயம் கேட்டு மகிழ்வேன்
Really superb
Post a Comment