மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள் தானா இவள் தானா இவள் தானா
மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர் தானா இவர் தானா இவர் தானா
வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா
உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்
இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்
உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்
சந்தன சிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
காதலே காதலே புது கவிதையா தாய்மடி
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே
படம்: இனியவளே
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
Friday, October 3, 2008
737. மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment