ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன வழியில்லையா
ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன முடியலையா
கனவுல இவதான் சில்லுன்னு பட்டா
காதலாய் இவதான் சுள்ளுன்னு சுட்டா
தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென
தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திரத்தீ தூண்டுகிறாய்
தீயினைத் தீநதியினில் தேடுகிறாய் தந்திரா
(தீக்குருவியாய்)
சில்லிடவா சிக்கிடவா கிறங்கிடவா கிறுக்கிடவா
கை தொடு தந்திரா
அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுரையாய் மறையாதா
விறைத்திடு நந்திதா
இடையோர மூன்றாம்பிறையே முத்தம் ஏந்தி வா வா
இமையோரத் தூவல் சிறையே துயில் தூக்கிப் போ போ
(தீக்குருவியாய்)
இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா
சொல்லிடு நந்திதா
காலடியிலே வான்நிலவது பனியாய்ப் படராதா
தேடிடு தந்திரா
மழைநேரக் காற்றே காற்றே மனம் தின்ன வா
குடையோர ஊற்றே ஊற்றே குணம் சொல்லித் தா தா
(தீக்குருவியாய்)
படம்: கண்களால் கைது செய்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: தேன்மொழி
பாடியவர்கள்: ஹரிணி, முகேஷ், ஜான்சன்
Friday, October 31, 2008
764. தீக்குருவியாய் தீங்கனியினை
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
சிறப்பான வரிகள் எழுதிய அக்கா தேன்மொழிக்கு வாழ்த்துகள்.
சிறப்பான வரிகள் எழுதிய அக்கா தேன்மொழிக்கு வாழ்த்துகள்!!தேன்கிண்ணத்துக்கு நன்றிகள்!!
Post a Comment