Friday, October 10, 2008

758. சத்யம் சாம்ராஜ்யம் - அன்பே சகியே எனை ஆள வந்த ரதி நீயே


Anbey Sagiye - BoomeranX feat Dhillip

இதயத்தில் அதி வேகம்
அழகே அருகே முழு நிலவே
என்னை கிறுக்கிய பேனாவே
கண்ணில் நுழைந்த நுன்னுயிரே
கனவாய் கையில் ஏந்தி
என்னை சிரிப்பாய் சிரிப்பவளே..

அன்பே சகியே
எனை ஆள வந்த ரதி நீயே
அன்பே சகியே
நெஞ்சில் நீந்துகின்ற நைல் நதியே

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

இரு விழியில் தோன்றிய காதல்
கைகளிலிருந்து கலைவது ஏனோ?
இரு மனங்களில் வசிக்கிற காதல்
இரு திசைகள் இன்று பிரிந்தது ஏனோ?
ஒரு முறை உன்னை பார்த்ததும் காதல்
ஒரு கணத்தில் தோற்றது ஏனோ?
ஒரு மொழியில் வாழ்ந்தது காதல்
ஒரு பிழையில் கால் சரிந்தது ஏனோ?
வெள்ளி நிலவில் ஒளிதான் காதல்
தேய்பிறையில் ஒழிந்தது ஏனோ?
இதயம் இதயம் வலிக்கிறதே...

மழை துளியில் உந்தன் முகம் தெரிகிறதே
அதை சேமிப்பேன் உள்ளங்க் கையிலே
வெயில் பட்டு தரையில் நிழல் வீழ்குமுன்
உடன் பட்டு உனை நிதமும் தாங்குவேன்

யார் தீண்டினால் தீ மூழுமோ
காதல் தீண்ட தீண்ட தீ நீழுமோ
உயிரும் உயிரும் உருகியதே
ஊடுருவி இரவில் கரைகிறதே
அன்பே நீ நானாகிறாய்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
ரெண்டுக்கு புகுந்து நிறம் தந்தாள்
கல்லுக்குள் புகுந்து சிலை தந்தாள்
சொல்லுக்குள் புகுந்து மொழி தந்தாள்
இறைவனை போல் மறந்துக் கொண்டாள்

ஒன்று சொல்லி விட்டு போ போ
சொல்லி விட்டு போ போ
நீ போ போ போ
இனத்துக்குள் புகுந்து கவி டஹ்ந்தாள்
இரவுக்குள் புகுந்து ஒளி தந்தாள்
நிறத்துக்குள் புகுந்து பை தந்தாள்
மனதுக்கு மட்டும் வலி தந்தாள்

தனித்தீவின் அலைகளில் நீதான்
நீதானே நான்
நான் அங்கு வேண்டும்
கடல் நீரில் விழித்திட கூடும்

புயல் கடலிலே மையம் கொண்டதால்
நீர் மெல்ல மெல்ல மேல் எழும்புதே
காதல் என்னுள்ளே மையம் கொண்டதால்
நான் மெல்ல மெல்ல மேல் எழுகிறேன்

உன் பார்வை தந்த சாபத்தினால்
பிரணவாயு காற்றில் தீர்ந்ததடி
உன் மௌனம் தீட்டிய ஜாலத்தினால்
ஒரு வார்த்தை சொல்ல என்னுயிர் கசியுதே
(அன்பே சகியே..)

ஆல்பம்: சத்யம் சாம்ராஜ்யம்
இசை: பூமெராங்-X
பாடியவர்கள்: திலீப் வர்மன், பூமெராங்-X

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam