Friday, October 3, 2008

739.ரகசியமாய் ரகசியமாய் .....

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓஹோ
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.
ஓ ஓ ஓஹோ

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உளறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளைத் திரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்




திரைப்படம் : டும் டும் டும்
பாடலைப்பாடியவர்: சாதனா சர்கம் , ஹரிஹரன், இராமநாதன்
இசையமைத்தவர் : கார்த்திக் ராஜா

6 Comments:

கானா பிரபா said...

அருமையான பாட்டு, மணிரத்னம் தயாரிப்பு என்பதாலோ என்னவோ ரஹ்மான் சாயலில் கார்த்திக் ராஜா கொடுத்த இசை விருந்து. கார்த்திக் ராஜா, யுவனை விடத் திற்மை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர் என்பதற்கு இப்பாடலே ஓர் சான்று

pudugaithendral said...

அருமையான பாட்டு//

aamam. nan valimozigiren.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சுனாமியாக மை ப்ரண்ட் போட்டு தாக்கிட்டிருக்கும்போது என்ன செய்யலாம்ன்னு தேடிகிட்டிருந்தேன்.. தானா வந்து மாட்டியது இந்த பாட்டு.. நன்றி கானா.. நன்றி புதுகைத்தென்றல்..

வல்லிசிம்ஹன் said...

சென்னையில் இல்லாத குறையை இன்னிக்குப் பூரணமா அனுபவிச்சுட்டேன். அவ்வளவு பிடிக்கும் இந்தப் பாட்டு.
இனிமையோ இனிமை.
ஜோவும் மாதவனும்,பாட்டும்,நடிப்பும் அள்ளிக் கொண்டு போகும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
நன்றி கயலம்மா,முத்தம்மா!!!

ராமலக்ஷ்மி said...

இனிமையான இசையும் அருமையான படமாக்கமும் கொண்ட அற்புதமான பாடல். நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி , புதுப்பாட்டோ பழயப்பாட்டோ எல்லா வயதினருக்கும் இனிமையா இருந்தா பிடிக்கும்ன்னு நிரூபிக்கிறீங்க ..நன்றி..

---------
மறுமொழிக்கு நன்றி ராமலக்ஷ்மி..அற்புதமான பாடல்வரிகள் கூட...

Last 25 songs posted in Thenkinnam