Wednesday, October 1, 2008

733. எல்லோரும் கொண்டாடுவோம்...!

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி


கல்லாகப் படுத்திருந்து களிப்பவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்


நூறு வகைப் பறவை வரும் கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா


கருப்பில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்


ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?


படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்துவைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
மண்ணிலே வெண்ணெய் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam