Thursday, January 31, 2008

228. நீ வருவாய் என நான் இருந்தேன்

Sujatha-NeeVaruvai...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..
(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்

விரும்பி கேட்டவர்: ஜெயராதாசிங்

227. மந்திரப் புன்னகையோ

Get this widget | Track details | eSnips Social DNA


மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே
(மந்திரப் புன்னகையோ)
தேவதைகள் தேரினில் போகிற நேரம்
தாமரைகள் ஆயிரம் பார்வையில் பூக்கும்
தேகம் தினம் பாடும் பாவம் அதில் போகும் நீ ஓடி வா
வாழ்க்கையென்னும் காவியம் காலம் அன்பின் ஆலயம் வா வா வா
(மந்திரப் புன்னகையோ)
ஆசைகள் இங்கே குதிரைகள் ஆனால்
ஏழைகள் கூட ஊர்வலம் போவார்
பூவும் மலர்ந்தாடும் நாளும் மணம் வீசும்
வாழ்வைப் பார்க்கிறோம்
பொம்மலாட்டம் ஆடலாம் கூடும் செய்துப் பார்க்கலாம்
என் வாழ்விலே
(மந்திரப் புன்னகையோ)
படம்: மந்திரப் புன்னகை
இசை: இளையராஜா

விரும்பிக் கேட்டவர் : நாமக்கல் சிபி

226. என் வீட்டுத் தோட்டத்தில்...



என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
உன் பேரைச் சொல்லுமே

உன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
உன் வீட்டுத் தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
என் நெஞ்சைச் சொல்லுமே

வாய்ப் பாட்டுப் பாடும் பெண்ணே மௌளனங்கள் கூடாது
வாய்ப் பூட்டுச் சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது
ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது
ஆசை துடிக்கின்றதே
(என் வீட்டுத்)

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போலே சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம்…அனுபவமோ
(உன் வீட்டுத்)

படம்: ஜென்டில்மேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம்

225. காற்றின் மொழி

பல்ராம் பாடியது:





சுஜாதா பாடியது:




காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
(காற்றின் மொழி)

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித் திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

(இயற்கையின் மொழிகள்)


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்

(இயற்கையின் மொழிகள்)


படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: பல்ராம் & சுஜாதா
பாடல்: வைரமுத்து

Wednesday, January 30, 2008

224. எங்கே அந்த வெண்ணிலா


Enge Antha Vennila...

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானய்யா.. உன்னால் தானைய்யா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானைய்யா.. உன்னால் தானைய்யா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுத்தது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அது உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தான் என்ன
நீதான் எந்தன் ஒளிவிளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளிவிளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
உருவத்தை காட்டிடும் கண்ணாடி
என் உள்ளத்தை காட்டிட கூடாதா?
பூவிடம் கதை சொல்லும் பூங்காற்று
என் காதலை உன்னிடம் சொல்லாதோ
உன்னை சேறும் அந்த திருநாள்
வெகு விரைவில் வந்து சேராதா?
என் காதல் கரை ஏறாதா?
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
காதல் வந்த நாளிலே வானில் வந்து பார்த்ததே
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா...

படம்: வருஷமெல்லாம் வசந்தம்
இசை: சிற்பி
பாடியவர்: சுஜாதா / உன்னிமேனன்

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

223. ஒரு கிளியின் தனிமையிலே



ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே சிறுகிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு

(ஒரு கிளியின் தனிமையிலே)

பெண்: முத்து ரத்தினம் உனக்கு சூட
முத்திரைக் கவி இசைந்துப் பாட
நித்தம் நித்திரைக் கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்துக் கூட
சிறு மழலை மொழிகளிலே
இனிமை தவழ இதயம் மகிழ
இரு மலரின் விழிகளிலே
இரவு மறைய பகலும் தெரிய
ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனைக் கொல்ல வேண்டும்
சேரும் நாள் இதுதான்

(ஒரு கிளியின் தனிமையிலே)

ஆண்: கட்டளைப்படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்குப் போதும்

பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்துப் புன்னகை எனக்குப் போதும்

ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை
புதிய கவிதை இனிய கவிதை

பெண்: கதை முடிவும் தெரிவதில்லை
இளைய மனதை இழுத்தக் கவிதை

ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பென்னும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இதுதான்

(ஒரு கிளியின் தனிமையிலே)

படம்: பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், சித்ரா

விரும்பிக் கேட்டவர்: நாமக்கல் சிபி

Tuesday, January 29, 2008

222. கேளடி கண்மணி



கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி கண்மணி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தானேம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி கண்மணி)

நீங்காத  பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி கண்மணி)

படம்: புது புது அர்த்தங்கள்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

221. இரு விழியோ சிறகடிக்கும்...


TamilBeat.Com - Ir...

இரு விழியோ.. சிறகடிக்கும்...

இரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதலால்தானே....

மணவெளிப் போல கிடக்கிற ஆசை
மழை துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற நெஞ்சம்
விசத்தறிப் போல அடிக்கிற நாளை..

நானும் இந்தத் தேதி
அடி காதல் தின்ற மீதி
தோழி நீயும் வாடி
இருத் தோளும் தானே தூளி
(இரு விழியோ..)
காதலால்தானே...

ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்

மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்
புயலாய் ஆனாயே..

சங்கில் ஓசைப் போலே
உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்ன்ல் போல கண்ணில்
உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச
அடிக் காதல் தானே பாஷை
இது வரமா...

மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்
வெறும் சுகமா...

சுகங்களைத் தேடும் இடங்களின் ஓரம்
படங்களைப் போடும் நகங்களில் சாயம்
(இரு விழியோ..)

கதை பேசிக் கொள்ள இதழ் தீயய் தூண்டு
அலை பேசிப் போலே காதோரம் சிந்து
உடும்பாய் ஆவேனே

இவள் கொண்ட மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால் மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே..

உறங்கும் எனது கனவு
அதில் உனது பெயரில் கனவு
மயங்கும் எனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
இதைக் காண வருமோடி
ஒரு கோடி வான நிலவு
இது குளிரா..

கொதிக்கிற தேகம் குலைகிற தேகம்
இருவரின் நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளம் கதிரா...

இளங்கதிர் வந்து உரசிடும் காலம்
இவர்களின் தேகம் உறங்கிடும் நேரம்
(இரு விழியோ..)

படம்: பிரிவோம் சந்திப்போம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: வினித், சைந்தவி

Monday, January 28, 2008

220. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா



கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா

(கல்லெல்லாம் மாணிக்க)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

(கல்லெல்லாம் மாணிக்க)

கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

(கல்லெல்லாம் மாணிக்க)

படம்: ஆலயமணி
பாடியவர்கள்: L.R.ஈஸ்வரி, T.M.சௌந்தராஜன்

219. இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே




இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

(இன்றைக்கு)

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்


(இன்றைக்கு)


மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

(இன்றைக்கு)


படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

Sunday, January 27, 2008

218. பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?


Nee Varuvai Ena - ...

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
பூங்காற்றே பிடிச்சிருக்கா?
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?
பனிக்காற்றே பிடிச்சிருக்கா?
(பூங்குயில்..)

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்..)

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?
மாசம் போகும் பிடிச்சிருக்கா?
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு

படம்: நீ வருவாய் என
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிணி, அருண்மொழி

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

217. ஹரிவராசனம்


Hariharasanam.mp3

சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா

ஹரிவராசனம் சுவாமி விஸ்வ மோஹனம்
ஹரித தீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரி விமர்த்தனம் சுவாமி நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே
(சரணம்..)

சரண கீர்த்தனம் சுவாமி சக்த மாணஸம்
பரண லோலுபம் சுவாமி நர்த்தனாலசம்
அருண பாஸுரம் சுவாமி பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே

ப்ரணய சத்யகம் சுவாமி பிராண நாயகம்
ப்ரணத கல்பகம் சுவாமி சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே
(சரணம்..)

துரஹ வாஹணம் சுவாமி சுந்தரானனம்
வரக தாயுதம் சுவாமி வேதவர்நிதம்
குரு க்ருபாகரம் சுவாமி கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே

த்ரிபுவனார் சிதம் சுவாமி தேவ தாத்மகம்
த்ரிநயனம் பிரபும் சுவாமி திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சுவாமி சிந்திதப் பிரதம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே
(சரணம்..)

பரபயாபஹம் சுவாமி பாவுகாவுஹம்
புவன மோகனம் சுவாமி பூதிபூஷணம்
தவள வாஹனம் சுவாமி திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேமாஸ்ரயே

கலம்ரு துஸ்மிதம் சுவாமி சுந்தரானனம்
களப கோமளம் சுவாமி காத்ர மோஹனம்
களப கேசரி சுவாமி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே
(சரணம்..)

சுருதனப்ரியம் சுவாமி சிந்திதப்ரதம்
சுருதி விபூஷணம் சுவாமி சாது சீவனம்
சுருதி மனோஹரம் சுவாமி கீதலாலயம்
ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஸ்ரயே
(சரணம்..)
(சரணம்..)

ஆல்பம்: சுவாமி ஐயப்பன்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

விரும்பி கேட்டவர்: சீனா

Saturday, January 26, 2008

216. அன்பே அன்பே


Sasi The Don - Anb...

அன்பே அன்பே என்..
எங்கேயே நீ எங்கே
உன் போல யார் இல்லையே

என் கண்கள்குள்ள நீதான்
என் நெஞ்சில்கூட நீதான்
உனை தானே நான் தேடினேன்
(அன்பே..)

கண்ணோடு கண்கள் பேச எப்போ வருவாய்
உயிரோடு உயிராக.. கலக்க..
முத்தங்களோட நீரில் எப்போ வருவாய்
உன்னை காணவே மனம் ஏங்குதே தினம் துடிக்குதே
இரவு நீளுதே பகலும் குறையுதே
தினம்தோறுமே..
என் அன்பே...
(அன்பே..)

கனவுகுள்ள
ஆடி பாடி
பேசி பேசி
சிரிச்சி சிரிச்சி
எங்கே நீ எங்கே

உன்னை தேடி தேடி
ஓடி ஓடி
வேர்வை சிந்தி தேடினேன்
அன்பே நீ இங்கே

மீண்டும் மீண்டும்
உனை நானும்
காண வந்தேன் என் அன்பே
எங்கே நீ எங்கே
(உன்னை தேடி..)

Me Looking Me Looking Me Looking all around
Looking Fe me love
Inna me heart
Inna me yard
Up from the north down to the south
Me could feel your vibes calling
out really loud..
Indian gal you are all about my world
Uptown gals or and the downtown gals
Stand Steady Wine Steady
While me do the Rocksteady
Stand Steady Wine Steady
While me do the Rocksteady

What I got to do
Gal What I got to do
To make you mine to make you whine
And take you for a dine
As I chat about
Chat about life
And Chat about you and me
Make we come together and sit and sata
As you would realize that me is a great lover
As me love would never favor like any
other preacher.
Take it from here me gal
Me love would brake any wall
InI search and search till me find me love.

(அன்பே..)

மலேசிய ஆல்பம்: AsianDancehall Revolution
பாடியவர்: சசி The Don, Apache Indian

விரும்பி கேட்டவர்: இளா

215. பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்...



மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி

அடியே உனக்கெனத்தானே நா...
அடிமேல் அடியென தொடர்வேன் நா...
அருகிலே என்றுமே இருப்பேன் நா...
அழகே அழுதிட விடுவேனா
அன்பது அழுதிடப் பொறுப்பேனா
கண்மணி என்றுமுன் காவல் நா...

விழியால் விழி நோக்கி விரசம் அதுபோக்கி அவளை உனில் தேக்கி காதல் செய்தாயா
உலகில் உயிர்போல உயிரில் மனம்போல மனதில் இளம்போல சேர்ந்தே இருப்பாயா
வறுமை வரும்போதும் முதுமை விழும்போதும் அவளே உயிரென்று காதல் கொள்வாயா
காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும் ஓடி ஒளியாமல் தேடி வருவாயா

இரவிலும் பகலிலும் எப்போதும் அவளது நினைவிலே இருக்கிறனே - ஐயோ
முன்னாலும் பின்னாலும் என்னாளும் அவளென நில்லாமல் வருகிறனே

காலம் கடந்தாலும் தடைகள் வளர்ந்தாலும்
ஓடி ஒளியாமல் தேடி வருவாயா

அவள் மழையில நனைகையில் நனைகிறனே - அந்த
வெயிலில அவளுடன் காய்கிறனே
அவள் சிரிக்கையில் அவளுடன் சிரிக்கிறனே
அவள் அழுகையில் எனக்குள்ள அழுகிறனே
என்னவளை என்னுடனே கண்ணின் மணிபோலே என்றும்
எண்ணி எண்ணி நெஞ்சில் வைச்சுக் காத்திடுவேன்

மஞ்சக்கிழங்கே மஞ்சக்கிழங்கே
என்னை எடுத்து நீ உடுத்துக்கடி
பூவாய்க் கொஞ்சம் பொட்டாய்க் கொஞ்சம்
நித்தம் நீ எடுத்துச் சூடிக்கடி

காதல் காதல்தான் இந்தக் காளை கொண்டதுண்மைக் காதல்தான்
காதல் காதல் என்று துடிக்கின்றான் - அவள்
பேரைச்சொல்லுகையில் சிலிர்க்கின்றான்
அவள் அழைக்கையில் தொலைபேசி விட்டுவிட்டுத் துடிக்கும்
இதைக் காண இவன் நெஞ்சம் நிக்காமலே துடிக்கும்
நண்பிதனைக் காதலித்துக் கஷ்டப்படுறான் - அவள்
வாழ்க்கைத் துணையாக இவன் இஷ்டப்படுறான்
காதலரை நண்பராக்கத் தவிப்பாரே பெண்ணே
நண்பன்தனைக் காதலிக்க மறுக்காதே

வாழ்விலும் தாழ்விலும் உன்னோடுதான் பெண்ணே என்னாளும் நான் வருவேன்
உயிர் நின்னாலும் போனாலும் உன்னோடுதான் பெண்ணே என்னாளும் நான் இருப்பேன்
உன் சுமையதனையும் நான் சுமந்திடுவேன்
உன் கவலைகள் அதனையும் கலைத்திடுவேன்
நீ தினம்தினம் மகிழ்ந்திட நான் இருப்பேன்
இந்த உலகமே இனித்திட வைத்திடுவேன்


அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G
இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G + திஷாந்தன்

Friday, January 25, 2008

214. கீரவாணி



ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி

ஆண்: கீரவாணி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

(கீரவாணி)

ஆண்: கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி

பெண்: தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

(கீரவாணி)
(அடி ஏனடி)

ஆண்: புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண்: இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவாணி)
(அடி ஏனடி)

படம்: பாடும் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி

213. சின்ன சின்ன ரோஜா பூவே





சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

(சின்ன சின்ன)

கண்ணில் உன்னைக் காணும்போது எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

(சின்ன சின்ன)


படம் : பூவிழி வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Thursday, January 24, 2008

212. எந்தன் வானமும் நீதான்


Enthan Vaanamum I....

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி ஓ...
(எந்தன் வானமும்..)

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆழம் கண்டு கலங்குதே
உன்னுடைய கால்த்தடத்தை மழை அழித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்
ஹ்ம்.. உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே
ஓ.. (உன் பேச்சிலே..)

ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்
ஹ்ம்.. என் பேரைத்தான் யாரும் கேட்டால் உன் பேர் சொல்கிறேன்
ஒரே ஒரு உடலில் இருதயம்
காதலெணும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லையேல் நானில்லையே நெஞ்சம் சொல்லுதே
(உன் பேச்சிலே...)
(எந்தன் வானமும்..)

படம்: வாழ்த்துக்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், மஹதி
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்

211. உண்மையில் ஆசைகள் வேறோன்றும் இல்லை...



எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை
உன்முகம் காண நாட்களை எண்ணி வாடுறேன்
அந்நாள் வருகையில் தொலையுமே தொல்லை
உண்மையில் ஆசைகள் வேறோன்றும் இல்லை
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாடுறேன்

பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் - உந்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் - அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்

தொலைவாய் தூரமாய் இருந்தாலும் - உன்
நினைவை என்னை விட்டுத் தொலைப்பேனா
நினைவை தொலைக்க நான் நினைத்தாலும்
உந்தன் நினைவு என்னை விட்டுத் தொலைந்திடுமா
தந்த முத்தம் என்றும் என்னுள் இனிக்கும்
உன்தன் வாசம் என்னை வந்து துளைக்கும்
உந்தன் வார்த்தைகள் அடிக்கடி ஒலிக்கிறதே
எந்தன் தூக்கத்தை உன்நினைவு தொலைக்கிறதே
உன்னைக் காண வரச்சொல்லி நான் வருவேன் - வந்து
மறைந்து காக்க வைத்து ரசிப்பேன்
பின்னர் அதனை உனக்கே சொல்லித் தொலைப்பேன் - நீ
அடிக்க வலி மறந்து சிரிப்பேன்

அடித்திடும் கைகள் அணைத்திடும் - அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை

பாத்து நின்றேன் வழி பாத்து நின்றேன் - உந்தன்
வாசல் வரும் வழி பாத்து நின்றேன்
காத்திருப்பேன் எதிர்பாத்திருப்பேன் - அந்த
நாளது வரையினில் பாத்திருப்பேன்

எனக்குள் இதயமது துடித்தாலும் - அது
உனக்காய் துடிப்பதை நீ அறிவாயே
துாக்கம் வந்து நான் படுத்தாலும் - உன்னை
கனவில் பார்க்க மனம் மறக்காதே
எந்தன் தலையணையுடன் இங்கு கதைப்பேன்
அன்பே நீயென்று செல்ல முத்தம் கொடுப்பேன்
பக்கம்வா வென்று மெல்லக் கட்டியணைப்பேனே
பின்னர் அதையெண்ணி நான் மெல்ல சிரிப்பேனே
அன்று வளையல் வாங்கித் தர அழைத்தேன் - நீயே
பணம்கொடு என்று சொல்லி மறைந்தேன் - உன்னை
ஒளிந்து பார்த்து நின்று சிரித்தேன் - பின்னர்
ஒடிவந்து உன்னைக் கட்டி அணைத்தேன்

அடித்திடும் கைகள் அணைத்திடும் - அங்கே
உள்ளம் ரெண்டும் ஒன்றாய் மாறும்
அந்த இன்பம் இங்கே இல்லையே
எல்லா நாளும் அதுபோல் இல்லை
அன்பே இங்கே என் மனம் இல்லை

இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G
இசை அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G

Tuesday, January 22, 2008

210. Tooting பக்கம் போற புள்ள...



டூட்டிங் பக்கம் போற பிள்ளை என்னக் கொஞ்சம் பாரன்
உத்தரவு தாறன் பிள்ளை முத்தம் ஒண்டு தாவன்
அண்ணனிட்டச் சொன்னா என்ன நானா ஒடிப்போவன்
அப்பரிட்டச் சொல்லு பிள்ளை நாளை வீட்ட வாறன்

பெண்ணே உன்தன் பின்னால் வந்தா காணம நீ போவாயோ
காணாமலே நானும் போனா பின்னால நீ வருவாயோ
கண்ணே என்னக் கனவில் கண்டா கிட்ட வந்து பேசாயோ
ஆனால் என்ன தெருவில கண்டா எட்டி எட்டி போறாயோ

கண்ணே போடும் நாடகம் என்ன என்னட்ட நீ சொல்வாயோ
என்னட்ட நான் சொல்லச் சொன்னா கொப்பரிட்டச் சொன்னாயோ

ஊருக்குள்ள என்னப் பற்றி எழு பேரைக் கேளாயோ
கேட்ட பின்னே என்ன தேடி அங்கே இங்கே ஓடாயோ
தேடி நீயும் என்னை வந்து கேப்சில காணாயோ
சிரிச்சு நீயும் பேசிய பின்னே சொப்பிங் போவம் என்பாயோ

ஷொப்பிங் எண்டு நானும் வந்தா ஷொப்பையே நீ வாங்குவியோ
காதல் செய்ய வேணும் எண்டா காசு வேணும் சொல்லுவியோ

நல்ல பெடியன் நானடி பிள்ளை நாயே பேயே ஏசாத
நக்கல் நான் அடிக்கிறதால நாசமாப்போ சொல்லாத
நீதான் என்ர உலகம் சொன்னா என்னை நீயும் நம்பாயோ
என்னப் பாத்துச் சொல்லடி பிள்ளை உண்மையிலயே நம்பெலயோ

பிம் ஒண்டை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்றி வந்திடுவம்
காசு கஷ்டம் வாந்தாச் சொல்லு மட்டை போட்டு வெண்டிடுவம்

=================================

அல்பம் : அடி மேல் அடி
பாடல் வரி : Sujeeth G
இசை : திஷாந்தன்
பாடியவர் : Sujeeth G

209. மீண்டும் பள்ளிக்கு போகலாம்

TamilBeat.Com - Me...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்

நீராடும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமென..

மீண்டும் பள்ளிக்கு போகலாம்
நம்மை நாம் அங்கே தேடலாம்
சிலேட்டு குச்சி கடன் வாங்கலாம்
சிலேட்டில் பேரெழுதி பார்க்கலாம்
கொட்டு வச்ச வாத்தியாரை தொட்டு வணங்கலாம்
முட்டிப்போட்டு நின்ன இடத்தை முத்தம் கொடுக்கலாம்
பள்ளிக்கூடத்தில் சொன்ன பாடத்தில்
இந்த உலகத்தை நாமறிந்தோம்
அன்னை மடி என நம்மை தாங்கிய
இந்த பள்ளியை ஏன் மறந்தோம்?
(மீண்டும்..)

ஏலேலோ ஏலேலோ லோ..
ஏலேலோ ஏலேலோ லோ..

உயிரும் உடலும் கருவறைக்குள்ளே உற்பத்தியாகிறது
உறவு நட்பு காதலை பள்ளி சொல்லித் தருகிறது
(உயிரும்..)
தலைக்கு மேலே வளர்ந்தால் கூட தாய்க்கு நீ பிள்ளைதான்
எத்தனை பெரிய மனிதனானாலும்
பள்ளிக்கு நீ மாணவன் தான்
உன்னை சுமந்த பள்ளிக்கூடம் கேட்பாரற்று கிடக்கிறதே
உந்தன் வரவை எதிர்ப்பார்த்து
ஊருக்குள் தனியாய் நிற்கிறதே
(மீண்டும்..)

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இருக்க வேண்டாம்

படித்தவன் எல்லாம் பள்ளியை மறந்து
எந்திர வாழ்வில் தொலைந்துவிட்டான்
படிக்காதவன் தான் பள்ளியை பார்த்து
ஏக்கத்தோடு தசிக்கிறான்
பத்து மாதம் சுமந்த தாய்க்கே
பணிவிடைகள் செய்கின்றோம்
பத்து வருடம் சுமந்த பள்ளிக்கு
என்ன செய்ய நினைக்கின்றோம்
இருக்கும் கோவில்கள் போதாதென்று
புதிதாய் கோவில்கள் கட்டுகின்றோம்
பள்ளிகள் எல்லாம் கோவில்கள் என்பதை
ஏனோ நாமும் மறக்கின்றோம்..
(மீண்டும்..)

படம்: பள்ளிக்கூடம்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்

208. அடி அனார்கலி...


Adi Anarkali.mp3

அடி அனார்கலி அடியே அனார்கலி
கனவு காட்சியில் வந்த காதல் தேவதை
என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை
(அடி அனார்கலி..)

தேன் என்ற சொல் தித்தித்திடுமா?
இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா?
அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்
பூ பூக்குதே ஆச்சர்யமா..

பால் என்ற சொல் பொங்கிவிடுமா?
இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா?
அட நம் காதலை நீ சொன்னதும்
நான் நனைகிறேன் சந்தோஷமா..

விழிகள் கடிதம் போடும்
அதை இதயம் படித்து ரசிக்கும்
இது மௌன ராகமா? மயக்க வேதமா?
காதல் கேள்வி கேட்கும்..
(அடி அனார்கலி..)

கை ரேகைகளை இடையில் வைத்தாய்
உன் கண் ரேகைகளை ஹ்ம்ம்.. வைத்தாய்
உன் போராடும் இதழ் சூடாற என்
கண்ணங்களில் நீந்த வைத்தாய்

ஈரடி வரை தங்கத்தை வைத்தான்
அந்த மூன்றடிக்கு அவன் சொர்க்கத்தை வைத்தான்
பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன்
வான் நிலவை வைத்து உன்னை செய்தான்

விலக்கு எதற்க்கு வேண்டும்
நாம் விளக்கம் காண வேண்டும்
அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கையா
பாலம் போட வேண்டும்
(அடி அனார்கலி..)

படம்: வருஷமெல்லாம் வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், கங்கா

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

Monday, January 21, 2008

207. கனவெல்லாம் பலிக்குதே...


TamilBeat.Com - Ka...

கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே
(கனவெல்லாம்..)

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், கார்த்திக்

Saturday, January 19, 2008

206. கோடை கால காற்றே...


PanneerPushpangal-...

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)

ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
(கோடை கால..)

படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்


ஜனவரி 16-இல் தன் பிறந்த நாளை கொண்டாடிய விவசாயி இளாவுக்காக இந்த பாடல் சமர்ப்பிக்கிறோம்..

205. அக்கம் பக்கம் யாருமில்லா


Kreedam - Akkam Pa...

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)

நீயும் நானும் சேரும்முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நிஜம்
இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துக்கொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதைத் தெரிந்துக்கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
(அக்கம் பக்கம்..)

படம்: கிரீடம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: சாதனா சர்கம்

விரும்பி கேட்டவர்: சினேகிதி

204. சற்றுமுன் கிடைத்த தகவல் படி...


SSitharamal-Satrum...

சற்றுமுன் கிடைத்த தகவல் படி
தொலைந்து போனது என் இதயமடி
உயிரே என் உயிரே உயிரே..
(சற்றுமுன்..)
உற்று பார்க்கும் தினம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே உயிரே..
நிலை மாறாமல் தலை சாயாமல்
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்
(சற்றுமுன்..)

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில்
நான் தினசரி அவதரிப்பேன்
தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்
தீண்டும் போது நேர்ந்திடும்
உன் தவறுகள் அனுசரிப்பேன்
முதல் நாள் எனை தீட்டினாய்
மறுநாள் உயிர் பூட்டினாய்
சங்கத்தமிழ் போல உன் மனம்
சங்கமிக்கும் போது சந்தனம்
இதழ் ஊறாமல் இமை சேராது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்
(சற்றுமுன்..)

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே
பாஷை கேட்கும் கேள்விகள்
அட நண்பகல் குளிர்கிறதே
ராத்திரிகள் என் ராத்திரிகள்
மிக ரகசியமாகிறதே
நாளும் பூக்கும் ஞாபகம்
அட வன்முறை பேசியதே
எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா
இமை மூடாமல் இறை தேடாமல்
உன் உறவால் உறந்திருப்பேன்
(சற்றுமுன்..)

படம்: சிந்தாமல் சிதறாமல்
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா

Friday, January 18, 2008

202. ஏதோ நினைவுகள் கனவுகள்...



ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
(ஏதோ நினைவுகள்..)

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
(ஏதோ நினைவுகள்..)

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
(ஏதோ நினைவுகள்..)

படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஷைலஜா

விரும்பி கேட்டவர்: முத்துலெட்சுமி

201. சின்னவளை முகம் சிவந்தவளை


MGR-PuthiyaBhoomi-...

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)

படம்: புதிய பூமி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தராஜன், P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: இளா

200. மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ...



மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு சுவரம்தான் பாடுமோ
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏனடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
(மண்ணில்..)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமின்றி
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடைய்யினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்
(மண்ணில்..)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் ழிவியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா
(மண்ணில்..)

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: பாவலர் வரதராஜன்

199. அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்


Appappa.mp3

அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம் பொன் முத்தம்
மோட்சங்கள் சிந்திக்கும் இங்கு நித்தம் என் வெட்கம்
ஆனந்தம் கிடைக்கட்டும்
பேரின்பம் பெருகட்டும்
இளமைக்கு செலவு இருக்கட்டும் ஹ
ஹேய் இனிமைக்கு வரவு கிடைக்கட்டும்
(இளமைக்கு..)
(அப்பப்பா..)

இந்திர உலகமும் சந்திர உலகமும் இதுதான் ஹே இதுதான்
மன்மத நிலவுகள் சம்மதம் தருவது சுகம்தான் ஹ சுகம்தான்
(இந்திர..)
மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள்
ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை
(அப்பப்பா..)

வாலிபம் இருப்பதும் வாழ்க்கையை ரசிப்பதும்
சில நாள் ஹே சில நாள்
அத்தகர் பூசிய சித்தர்கள் மறைப்பது
எதனால் ஹ எதனால்
காதலோ இதமானது காமனே வருக ததத..
வாழ்க்கையோ சுகமானது வாலிபம் வருக
இளமையின் பந்தி நடக்கட்டும் ஹே
எனக்கொரு பங்கு கிடைக்கட்டும் ஹ
(அப்பப்பா..)

படம்: ஜப்பானில் கல்யாணராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: கணேஷ்

198. வாராது போல் வந்து வீழ்ந்தானடா


Tamilmp3world.Com ...

வாராது போல் வந்து வீழ்ந்தானடா
வீழ்ந்தாலும் ஈயாகி வாழ்வானடா
மரணமே மரணமே மாண்டு போய்விடு
எங்கே உயிர் நீங்கினான்
இன்றே கொஞ்சம் தூங்கினான்
தோட்டாக்கள் தாலாட்டு பாட்டானதோ
நீ சிந்தும் ரத்தங்கள் வேட்டானதோ
புயலையும் எதுக்கும் உன் மூச்சுக் காற்றடா
உலகத்தை புரட்டும் நீ நெம்பு கோலடா

வாழ வேண்டுமே நாடு
ஒரு ஊழித் தாண்டவம் ஆடு
நீ காத்திருந்தே அவதாரம் எடுத்திடு
ஆயுதமே அறிவாகும்
அட வேர்வை சிந்தவும் வேண்டும்
அது வீணாய் போவது பாவம்
ஒரு போர்ப்படை ஆற்றிடு
பூமியை தோளில் தாங்கிடும் சக்தியுண்டாகும்
நீ தாக்க வேண்டியது யாரை
அட தாக்கும் ஏவுகணை நீயே
இது உன் இதயம் அடடா இமயம்
கடந்தால் தோன்றிடும் பாதை
மனம் துணிந்தால் தகர்ந்திடும் பாறை
கடந்தால் தோன்றிடும் பாதை
மனம் துணிந்தால் தகர்ந்திடும் பாறை

வழியும் கரடுமுரடு முழுதும் வடியும் கொடிய யுத்தம்தான்
புதிய உயிரும் ஜெபிக்கும் பொழுது
படைகள் நடுங்கும் சத்தம் தான்
இயற்கை உனது அடிமை விலங்கு தவற அதுவும் இங்கில்லை
அடைய பெரிய உலகமிருக்கு திரண்டு உழைக்கும் வர்க்கம்தான்
அழுது திரிந்த பொழுதும் உயர கசப்பை அறிந்து பிறந்த பிறவி
விஷத்தை அழிக்க விஷத்தை அருந்து நீ புதிய பிறவி எடுத்ததுறவி

அடடா அடடா யுத்தம் விடடா விடடா அச்சம்
கடலாய் கடலாய் பொங்கும் தோழா தோழா கொஞ்சம்
மனித மிருக தேவை அழிக்க
சிவந்து சிவந்து விதியை விலக்கவா
தோட்டாக்கள் தாலாட்டுப் பாட்டானதோ
நீ சிந்தும் ரத்தம் வேட்டானதோ

படம்: ஈ
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

விரும்பி கேட்டவர்: கதிர்

197. உன்னை கண்டேனே முதல் முறை


TamilBeat.Com - Un...

உன்னை கண்டேனே முதல் முறை நான்
என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
(உன்னை கண்டேனே..)
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹய்யோ ஹய்யயோ.. அச்சம் வருதே
தப்பிச் செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஹய்யோ ஹய்யயோ.. சீ என்னவோ பண்ணினாய் நீயே
(உன்னை கண்டேனே..)

எறிக்கிற மழை இது
குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது
அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது
இனமுள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே..

நிஜமுள்ள பொய் இது
நிறமுள்ள இருட்டு இது
மௌனத்தின் மொழி இது
மரணத்தில் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது
கட்டி வந்த கனவு இது
அஹிம்சைகள் சொல்வது கேள் பெண்ணே

ஏங்கினேன் நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள்
வானமும் இந்த பூமியும்
உந்தன் தோற்றமே
உன் பேர் சொன்னாலே
உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணைப் படிப்பேன்
புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ
மெய் சொல்லுதோ

ஓ.. காதல் எனை தாக்கிடுதே
சரிதான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே
(உன்னை கண்டேனே..)

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே

நான் உன்னால் தான் ஸ்வாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
உயிரை விடவும் உனை நேசிக்கிறேன் ஹேஹே
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்

(உன்னை கண்டேனே..)
(எறிகிற மழை..)
(நிஜமுள்ள..)
(ஏங்கினேன்..)
மனசுக்குள் ஏனோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜில் ஜில்
இது சரி தானா நீ சொல் சொல்

படம்: பாரிஜாதம்
இசை: தரன்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்ருதி

Wednesday, January 16, 2008

195. பேச்சி பேச்சி



பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி(2)


ஏழூரு சீமையிலும் உன் போல யாரும் இல்ல
எட்டாத ஊரிலெங்கும் உன் போல பேரும் இல்ல
எப்போதும் நன்றியுள்ள உன் போல சீவனில்லை
இந்தப் பாட்டுக்காரன் பாட்டு
கோவிக்காம கேட்டு
வாடி வாடி என்னுடையப் பேச்சி



படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

Tuesday, January 15, 2008

194. அரைச்ச சந்தனம்



செம்பவழ முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்

ஆண்: அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்ம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ

(அரைச்ச சந்தனம்)

பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி இவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ

(அரைச்ச சந்தனம்)

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ

(அரைச்ச சந்தனம்)

படம்: சின்னத் தம்பி
இசை: இளையராஜா

193. எந்தன் நெஞ்சில்



ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீதானா வா

(எந்தன் நெஞ்சில்)

ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெண்: உனக்கெனப் பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்

(எந்தன் நெஞ்சில்)

பெண்கள்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

ஆண்: உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

பெண்: நான் சூடும் நூலாடைப் போலே
நீ ஆடு பூமேனி மேலே


படம்: கலைஞன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S ஜானகி

192. தைப்பொங்கலும் வந்தது




Get Your Own Music Player at Music Plugin
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியில் போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள்
தென் நாட்டவருக்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்ற ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
(தைப்பொங்கலும்..)

முப்பாட்டன் காலம் தொட்டு
முப்பாகம் யாரால?
கல்மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோடு சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோட சேதி சொல்ல
காத்து வராதா?
செவ்வாழ செங்கரும்பு
சாதிமல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்கு
ஏதுமில்ல வாட்டம்தான்
நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
(தைப்பொங்கலும்...)

படம்: மஹாநதி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

Sunday, January 13, 2008

191. யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்


Yaarum Illatha.mp3

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
(யாரும்..)
(யாரும்..)

ஆகாயம் வெண்மேகம் பாயாக வேண்டும்
பாய் மீது விண்மீன்கள் பூவாக வேண்டும்
ஆதாமும் ஏவாளும் நாமாக உருமாறி
அகிலத்தை புதுப்பிக்க வேண்டும் வேண்டும்

என் விழியில் பிம்பம் என்றும் நீயாக வேண்டும்
உன் மொழிகள் ஒன்றே என்றும் என் காதில் வேண்டும்
உன்னுடைய பெயர் சொல்லி என் இதயம் துடிக்கின்ற
வரம் ஒன்று பெற வேண்டுமே
என் நாடி நரம்பெங்கும் உன் ஜீவன் குடி வந்து
ஸ்வரம் மீட்டும் சுகம் வேண்டுமே
நொடி கூட நில்லாத கடிகார முள்ளாக
மனம் உன்னை வலம் வந்து
உயிரோடு உயிர் சேர..
(யாரும்..)

காவிரியில் வந்து கங்கை கை சேர்க்க வேண்டும்
நாமும் அதில் சென்று காதல் நீராட வேண்டும்
ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை பூ பூத்து
நீ சூட தர வேண்டுமே
தீ எறியும் காஷ்மீரில் தென்றல் வரும் திருநாளில்
ஊர்கோலம் வரவேண்டுமே
வெடிகுண்டு பூச்செண்டு என மாறும் நாள் ஒன்று
மடி மீது தலை சாய்த்து சுகமாக துயில் மேகம்..
(யாரும்..)

படம்: ஞானப்பழம்
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்

விரும்பி கேட்டவர்: .:: மை ஃபிரண்ட் ::.

190. ஓம் முருகா


TamilBeat.Com - Om...

ஓம் முருகா ஓம் முருகா
உனக்கு நன்றி சொல்வேன்
(ஓம் முருகா..)
ஆகாய வெண்ணிலவை அறிமுகம் செய்தாய்
பார்வையால் காதல் செய்ய பரிந்துரை செய்தாய்
மீண்டும் நான் மறுபடி பிறந்திட செய்தாய்
உலகத்தில் உள்ளதெல்லாம் மறந்திட செய்தாய்
ஓ ஓ ஓ ஓ ஓ முருகா..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ முருகா..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(ஓம் முருகா..)

முதன் முறை உனை காணும்போது
உச்சி முதல் பாதம் வரை
கிறு கிறு என பித்தம் கொண்டு
ரத்தம் எல்லாம் சுண்டி போனேன்
விண்ணில் நீ முளைத்த தாமரை பூவாய்
வேரோடு நான் இங்கு வேகிறேன்
தெருவினில் நீ நடங்கும்போது
செருப்பின் ஓசை செவியை கிள்ள
அடிக்கடி எனை திரும்பி திரும்பி
காதல் கண்ணால் தீண்டும்போது
ஆனந்த மயக்கம் ஆனாலும் தயக்கம்
சொல்லாமல் உயிர் வலி நோகுதே
என்னுயிரே என்னுயிரே
காதலின் வேதனை அறிவாயோ
வெண்ணிலவே வெண்ணிலவே
வானத்தை நீ விட்டு வருவாயோ
கண் மூடி தூங்க போகிறேன்
கனவுக்குள் மீண்டும் சந்திப்பேன்

இரு விழிகளில் காதல் அறிக்கை
எழுதி நீதான் படிக்கும்போது
கட கடவென இதயம் என்னில்
வெளிநடப்பு செய்யுதம்மா
பேசாத உதடு துடிக்காத இதயம்
உன்னாலே என் ஜீவன் ஏங்குதே
தொடு தொடுவென விரல்கள் எல்லாம்
உன்னை பார்த்து சிணுங்கும்போது
தட தடவென உயிரின் ஓசை
தயக்கத்துடன் நடுங்குதம்மா
தாயோடு பிறந்தேன்
உன்னோடு வளர்ந்தேன்
நீ கொஞ்சும் நாய் குட்டி ஆனேனடி
காதலியே காதலியே
காதலை நான் இன்று முன்மொழிந்தேன்
தேவதையே தேவதையே
நெஞ்சுக்குள் நீ என்னை வழிமொழிவாய்
என்னோடு இதய கருவுக்குள்
அழகான காதல் குழந்தை
(ஓம் முருகா..)

படம்: பம்பர கண்ணாலே
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: ரஞ்சித்

Last 25 songs posted in Thenkinnam