ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
(ஏதோ நினைவுகள்..)
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
(ஏதோ நினைவுகள்..)
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...
(ஏதோ நினைவுகள்..)
படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஷைலஜா
விரும்பி கேட்டவர்: முத்துலெட்சுமி
Friday, January 18, 2008
202. ஏதோ நினைவுகள் கனவுகள்...
பதிந்தவர் MyFriend @ 6:14 PM
வகை 1970's, KJ ஜேசுதாஸ், SP சைலஜா, இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
ஆகா மைபிரண்ட் உன்பாசத்துக்கு அளவே இல்லையம்மா.. நன்றி நன்றி.. உடனுக்குடன் தந்துவிட்டாயே..
Post a Comment