Monday, January 7, 2008

174. வெண்ணிலாவின் தேரில் ஏறி...





வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்
[வெண்ணிலாவின்..]

அட கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
[அட கை நீட்டும்...]

நிறம் கண்டு முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே
நான் பாசம் கொண்டேன்
[வெண்ணிலாவின்..]

காலழகு மேலழகு கண்கொண்டு கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே
[அட கை நீட்டும்...]

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாததில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது

[அட கை நீட்டும்...]


படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: KJ யேசுதாஸ்

1 Comment:

MyFriend said...

wow.. Super song JK. :-)

asathiddeengga intha paaddai poddu. :-)

Last 25 songs posted in Thenkinnam