Friday, January 25, 2008

214. கீரவாணி



ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி

ஆண்: கீரவாணி
இரவிலே கனவிலே பாடவா நீ
இதயமே உருகுதே

அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ

(கீரவாணி)

ஆண்: கரிஸ பமக பாநி ஸரிகரிகஸ நீ பா
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி பூப்பூத்தது பூங்கொடி

பெண்: தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
ஒருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

(கீரவாணி)
(அடி ஏனடி)

ஆண்: புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண்: இந்த வனமெங்கிலும் ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன்
மனதில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்

(கீரவாணி)
(அடி ஏனடி)

படம்: பாடும் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி

6 Comments:

ஜே கே | J K said...

அருமையான பாடல்.

நன்றி இம்சை.

ILA (a) இளா said...

கீரவானி //
கீரவாணி-சரியா?
கீரவானி -சரியா?

ரசிகன் said...

//ஸா நிஸரீ ஸா நீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பதஸா நிஸரீ ஸநீ
ஆ ஹா ஹா ஆ
ஸா நிஸமகாம ரீ
அ அ அ அ அ அ அ அ அ
பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா
ஸா நீ த ப ம க ரி ஸ நி//

ஹா,..ஹா... பிட் அடிக்கறதுல இம்புட்டு எக்ஸ்பர்ட்டா.. பேக்ரவுண்டுல வர்ர அஅஅஆ கூட விட்டு வைக்கலைல்ல..:)))

ஆமாம்,அது என்ன கீரவாணி?. ஒருவேளை (மனம்)இறங்கி "கீழ"வா நீன்னு பாடறாரோ?..:P
வித்தியாசமா இருக்கு...:)

M.Rishan Shareef said...

கீரவாணி எனக்குப் பிடித்த பாடல்.
கேட்கலாமென்ற ஆவலோடு ஓடி வந்தேன்.
ப்ளே பட்டனைக் காணோமே மைபிரண்ட்...?

M.Rishan Shareef said...

ரிப்ரஷ் பண்ணேன்..இப்ப ஓகே :)

நிலாக்காலம் said...

ரசிகன் said...
//ஆமாம்,அது என்ன கீரவாணி?. ஒருவேளை (மனம்)இறங்கி "கீழ"வா நீன்னு பாடறாரோ?..:P
வித்தியாசமா இருக்கு...:)//

இந்தப் பாடல் அமைந்த ராகம்-கீரவாணி :-)

Last 25 songs posted in Thenkinnam