Get Your Own Hindi Songs Player at Music Plugin
உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்
மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்
கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம்
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ
புவியில் மறுப்படியும் பிறக்கிறேன்
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி
Monday, November 30, 2009
பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை
பதிந்தவர் MyFriend @ 2:03 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சபேஷ் - முரளி, பிரசன்னா, மஹதி
Sunday, November 29, 2009
பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின் முகவரி
Get Your Own Hindi Songs Player at Music Plugin
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)
வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா
பதிந்தவர் MyFriend @ 1:59 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சபேஷ் - முரளி, பிரசன்னா
Saturday, November 28, 2009
பொக்கிஷம் - ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஓஹோஹோ
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
ஓஹோஹோ
நானா நானனா நானனா
ஓஹோஹோ தீர்ந்ததே பெருங்கடல் தாகமே
ஓஹோஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே
அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே
இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே
ஓஹோஹோ மின்மினி பூச்சிகள் பூக்களாய்
ஓஹோஹோ வெண்ணிலா பார்வைகள் கூச்சமா
நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே
இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே
ஓஹோஹோ என்னிடம் சிறகில்லை பறக்கிறேன்
ஓஹோஹோ நெல்மணி போல நான் உழைக்கிறேன்
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
பதிந்தவர் MyFriend @ 1:50 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சபேஷ் - முரளி, விஜய் ஜேசுதாஸ்
Friday, November 27, 2009
பொக்கிஷம் - மொழி இல்லாமலே
மொழி இல்லாமலே இதை சொல்வார் இனி
உயிர் இல்லாமலே இதைக் காண்பான் இனி
வாசமே போனப்பின் பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே வந்தபின் மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன
வழி இல்லாமலே எங்கு செல்வான் இனி
உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஓடையே காய்ந்தப்பின் நீங்களே
வானமே வீழ்ந்தப்பின் உடல் ஏன் வாழ்வதேன்
அட பூலோகமே இனி அழிந்தால் என்ன
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 1:45 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Thursday, November 26, 2009
ஆயிரம் கோடி காலங்களாக
இசையுலக ஜாம்பவான் டாக்டர் மங்களம் பள்ளி பாலமுரளி கிருஷ்னா அவர்களின் திரையிசை தகவல்களுடன் அவரின் இனிமையான பாடல் தொகுப்பு தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திருமதி சாரதா ராமானாதன். தேன்கிண்ண நேயர்கள் சார்பாக அவருக்கு நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.பதிவிறக்கம் இங்கே உள்ளது
1.தங்கரதம் என்பது >> 2.மலையால பாடல் >> 3.ஆயிரம் கோடி காலங்களாக>> 4.கேட்டேன் கண்ணனின் கீத உபதேசம் >> 5.புத்தம் புதுமேனி >> 6.மௌனத்தில் விளையாடும்
7.அருள் ஜோதி தெய்வம் என்னை அளுகின்ற >> 8.ஒரு நாள் போதுமா
|
பதிந்தவர் Covai Ravee R @ 4:34 PM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை பாலமுரளி கிருஷ்ணா, வானொலி
"பையா"...துளி துளி துளி மழையாய்
துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...
பார்த்தால் பார்க்க தோன்றும் பேரை கேட்க தோன்றும், பூபோல் சிரிக்கும்போது காற்றாய் பறந்திட தோன்றும்....செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...அழகாய் மனதை பறித்து விட்டாளே.......துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...
தேவதை அவள் ஒரு தேவதை அழகிய பூமுகம் காணவே ஆயுள்தான் போதுமோ! காற்றிலே அவளது வாசனை அவளிடம் யோசனை கேட்டுத்தான் பூக்களும் பூக்குமோ! நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்...கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்...பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்...அழகாய் மனதை பறித்து விட்டாளே....செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
சாலையில் அழகிய மாலையில் அவளுடன் போகவே ஏங்குவேன் தோழ்களில் சாயுவேன்..பூமியில் விழுகிற வேளையில் நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன், நெஞ்சிலே தாங்குவேன், காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள், காயமின்றி வெட்டி போட்டாள்..உயிரை ஏதோ செய்தாள்...மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும் அங்கே வந்து ஒட்டு கேட்டாள்...கனவில் கூச்சல் போட்டாள்...அழகாய் மனதை பறித்து விட்டாளே...செல் செல் அவளுடன் செல் என்றே காள்கள் சொல்லுதடா...சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொள்ளுதடா...
துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...துளி துளி துளி மழையாய் வந்தாளே... சுட சுட சுட மறைந்தே போனாளே...
பதிந்தவர் K Prabu.... @ 10:29 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை பையா
பொக்கிஷம் - மூன்று நாள் ஆகுமே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
மூன்று நாள் ஆகுமே பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா என் மனம்
என் நினைவோடு நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில் வலிதொடராதடி
குரல் கேட்கும் வரை புவி சுழலாதடி
காலை நீ மாலை நீ காண்கிற காட்சி நீ
வேலை நீ வேழ்வி நீ வீட்டிலே யாவும் நீ
நீ பேசாமலே மொழிப் பகையானதே
குறையில்லாமலே மனம் இசைப்பாடுதேன்
ஒரு யுகமாயினும் இதை இரசிப்பேனடி
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 1:38 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, கார்த்திக் ராஜா, சபேஷ் - முரளி
Wednesday, November 25, 2009
பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக!
பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக! தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக...
பூத்தது பூத்தது மனது இது பூத்தது எதற்காக! தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் எதற்காக...
என் சுவாச காற்றில் உன் உயிரின் வாசம் கலந்தது அன்பே எப்படி.. மணிக்கொரு உடையை அணிந்தேன் எதற்காக...
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் எதற்காக
பூத்தது பூத்தது மனது இது பூத்தது உனக்காக..தூக்கத்தை துரத்துது கனவு இந்த கனவுகள் உனக்காக.. மணிக்கொரு உடையை அணிந்தேன் உனக்காக... மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக..
பதிந்தவர் K Prabu.... @ 4:33 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை பவதாரணி
பொக்கிஷம் - கனவு சில சமயம்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு
அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுதுவரை விழித்திரு
இது யூகிக்க முடியாகக் கணிதமே
ஒரு போருக்குப் போகும் பயணமே
இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகுடா
துன்பம் நீங்கிப் போகும் தோல்விகூட அழகுடா
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே
தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை
இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பைக் கூறலாம்
இன்றுப்போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்
ஒரு மெல்லிய கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: பிரசன்னா
பதிந்தவர் MyFriend @ 1:33 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சபேஷ் - முரளி, பிரசன்னா
Tuesday, November 24, 2009
காவலர் குடியிருப்பு - உயிரே என் உயிரில் வந்தாய்
உயிரே என் உயிரில் வந்தாய்
உயிருக்கு உயிரைத் தந்தாய்
யாரோடும் பேசாமல் எங்கேயும் போகாமல்
உன் பாதைப் பார்த்தேனே
இதயத்தில் ஏதோ செய்தாய்
இது தானே காதல் என்றாய்
கடிகாரம் பார்க்காமல்
நொடி நேரம் தூங்காமல்
உன்னைத்தான் கேட்டேனே
சிரிக்கிறேன் தவிக்கிறேன் கனவில் வாழ்கிறேன்
காதல் தீண்டித் துடிக்கிறேன் கொதிக்கிறேன்
தொலைந்து போகிறேன் உன்னுள் நானே
கண்ணாடிப் பார்க்கும்போதும் கை வீசி போகும்போதும்
உன் பேரைச் சொல்லிச் சொல்லிப்பார்த்தேன்
காதோடு ஏதோப்பாட காற்றோடு கேட்கும்போதும்
உன் காதல் எண்ணித்தானே கேட்பேன்
உனகருகே நான் இருந்தால் இரு விழி கோலம் போடும்
பகல் இரவின் பொழுது எல்லாம் திருவிழாக்கோளமாகும்
இது நிஜமா இது கனவா உனை நினைக்காத நாளே இல்லை
(சிரிக்கிறேன்..)
உன்னோடுப் போகும்போதும் என் சாலை ஓரம் மீது
எங்கெங்கும் பூக்கள் பூக்க பார்த்தேன்
உன் கைகள் தீண்டும் போது உன் பார்வைத் தாண்டும்
என் பெண்மை ஏதோ ஆகக் கண்டேன்
நினவுகளால் நினைவுகளால் தடம் புரண்டோடும் போதை
நெருக்கத்தினால் நெருக்கத்தினால் எனை தொலைந்தாலே ராதை
இது நிஜமா இது கனவா உனை நினைக்காத நாளே இல்லை
(உயிரே..)
படம்: காவலர் குடியிருப்பு
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: சின்மயி
பதிந்தவர் MyFriend @ 1:25 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, 2009, சின்மயி, ஜேம்ஸ் வசந்தன்
Monday, November 23, 2009
அதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னைப் பார்த்த போதே
முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே
நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே
(முதல் முறை..)
நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறிப்போகுதே
நீயும் நினைத்தால் வானவில் வந்துவிடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் தோண வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் இருமுறை இறக்கிறேன்
உனக்கென வேண்டுமடி உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும் வரமது என்னாளும் போதும்
நீ சூடும் போதும் வாடும் போது வலித்திடுமே
(முதல் முறை..)
நீ நடக்கும்போது வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமும்
தோள் இரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நெஞ்சில் தினமுமே
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
இனி மழைமேகம் யாவும்
இறங்கியே உனைத்தேட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போகமாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை..)
படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்
பாடியவர்கள்: ஹரிசரண், ஹரிணி, திப்பு
பதிந்தவர் MyFriend @ 1:15 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Sunday, November 22, 2009
ஜக்குபாய் - துரு துரு துரு கண்களே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
துரு துரு துரு கண்களே துளைத்தது இளநெஞ்சிலே
தொடத் தொடத் தொலைதூரமே
துரத்துது அந்த வாசமே
இருளுடன் ஒளி தாளம் போட
அரை மயக்கத்தில் பாட்டுப்பாட
இதைத்தான் அந்த இரவுகள் இனித்திடாதோ
(துரு..)
நீல நிலா நீந்தாத ஆகாயமாகிறேன்
ஈர மழைக்காணாத மேகமாய் ஏங்கினேன்
வாட்டுது தனிமை என் தனிமை வேதனை தீயிலே
பொங்கிய இளமை ஓர் இளமைப் பூத்தது முள்ளிலே
ஆதலால் அழைக்கிறேன் அணைப்பது எவரோ
காதலால் தவிக்கிறேன் தவிப்பதுத் தவறோ
(துரு..)
கோடி யுகம் ஓடியும் பூமியும் சுழலுதே
காதலெனும் சாட்டையால் அந்தரத்தில் அசையுதே
ஆசையைக் கணித்தால் நம் ஆயுளும் ஆறேழு மாதமே
தூக்கத்தில் புறண்டும் உன் மனதே கண்டதைக் தேடுமே
நாளுமே வென்றுதான் கைவசம் வருமே
ஒன்றிலே ஒன்றுதான் ஒன்றிட சுகமே ஏ
(துரு..)
படம்: ஜக்குபாய்
இசை: ராஃபி
பாடியவர்கள்: மகேஸ்வரி, ராணி
பதிந்தவர் MyFriend @ 2:31 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Saturday, November 21, 2009
ஜக்குபாய் - ஏழு வண்ணத்தில்
ஏழு வண்ணத்தில் கன்னிப்பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல் அதைக்காத்து நிற்பேனே
(ஏழு..)
நடக்கும் திசைப்பார்த்து தான்
நிழல் போல் நான் வருவேன்
தினம் பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
காலாட்டி நானும் இரசிப்பேன்
(ஏழு..)
மூங்கில் போல வாழ்ந்திருந்தேன்
மரங்கொத்திப்போல வந்துப் புல்லாங்குழல் செய்துவிட்டாய்
என்னை நீயே
தோட்டம் விட்டு ஓடிவந்து எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே
தொட்டிச்செடி ஆகிவிட்டாய் பெண்ணே நீயே
கண்களின் நேரிலே கனவைப் பார்க்கிறேன்
கண்ணன் போல இருப்பேன் காத்துக்கிடப்பேன்
உந்தன் தேரோட்டி நானடி
(ஏழு..)
நான் ரசிக்கும் நாயகியே
நாகரீக தேவதையே இரவிவர்மன் தூரிகையே நீயே நீயே
கண்ணுக்குள்ளே உன்னை வைத்துக் கண்கள்
இரண்டை மூடிக்கொண்டுக் கண்ணாமூச்சி ஆடவேண்டும்
வா வா நீயே
கண்ணாடி மாளிகை கை வீசிப் போகுதே
உன்னோட அழகை பாடல் எழுத
தமிழில் வார்த்தைகள் தேடினேன்
(ஏழு..)
படம்: ஜக்குபாய்
இசை: ராஃபி
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 2:19 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Friday, November 20, 2009
வானில் முழு மதியை கண்டேன்
இந்த பதிவின் நாயகன் திரு.கா.மூ.செரீப் பிரபலமான பாடலாசிரியர் இவர் சிறுகடை ஒன்றில் கடை குமாஸ்தா இருந்தவர் மேலும் விவசாயம் பார்த்தவர் பத்திரிக்கை துணை ஆசிரியர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், நாடக-சினிமா, பாடலாசிரியர், கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா ஆகிய பல அவதாரங்கள் எடுத்தவர். இதோ இவரைப்பற்றி மேலும் ஆச்சரிய தகவல்களுடன் வானொலி அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்கள் விவரித்து அவரின் அழகான பாடல்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். இனி, இந்த பாடல்கள் எப்போது நீங்கள் கேட்டாலும் இந்த பாடலாசிரியரின் பெயர் நிச்சயம் உங்களுக்கு நினைவில் வரும். ஏனென்றால் பாடல்கள் வரிகள் அப்படி. கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை இனிமையாக தொகுத்து வழங்கிய திரு.சூரியகாந்தன் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
பாடலாசிரியர்: கவி கா.மு. செரீப் பதிவிறக்கம் இங்கே
1.அன்னையைப்போல் ஒரு தெய்வம் இல்லை
2.சிட்டுகுருவி சிட்டு குருவி சேதி
3.பணம் பந்தியிலே குணம்
4.நான் பெற்ற செல்வம்
5.பொன்னான வாழ்வு மண்ணாகி
6.மாசில்லா உன்னை காதலே
7.வானில் முழு மதியை கண்டேன்
8.இருக்கும் விடத்தை இல்லாத
9.ஏரிகரையின் மேலே போறவளே
10.ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
|
பதிந்தவர் Covai Ravee R @ 1:32 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை வானொலி
அச்சமுண்டு அச்சமுண்டு - கண்ணில் தாகம் தீருமோ
கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ மித்ரா மித்ரா
கோபங்கள் பேசும் போது வேறெதைக்கூறும்
தேவைகள் பேசும் போது மோகம் கூறும்
மௌனம்தான் பாடவோ வலியெல்லாம் தரும் சுடராய்
இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர்த்தேடும் உயிர்த்தேசும் ஒரு கூந்தல் செய்வாய் நண்பா
(கண்ணில்..)
வீட்டின் தனிமையிலே தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால் முத்தம் பல பதிப்பவனே
சோலைப்பூவெல்லாம் ஆடையாய் சூடிப்பார்த்தவன்
மாமழை நேரங்கள் இதமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
வனம் கரைந்து சிரித்திட
(கண்ணில்..)
இருக்கிறேன் தனிமையிலே
ஏதோ ஒரு தேனெடுப்பேன்
பூவின் அசைவினிலே ஏதோ ஒரு பரப்பரப்பே
சொல்லும் வார்த்தைகள் காற்றிலே தேய்ந்துப்போகுதே போகுதே
சினேகம் வேறில்லை உண்மையே நெஞ்சம் தீண்டுதே
கண்கள் தீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியலை நினைத்திடு
நெஞ்சில் அச்சம் பொங்குதே ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே ஏனோ ஏனோ
(கண்ணில்..)
படம்: அச்சமுண்டு அச்சமுண்டு
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: சௌமியா
பதிந்தவர் MyFriend @ 2:35 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, கார்த்திக் ராஜா, சௌமியா
Thursday, November 19, 2009
பொக்கிஷம் - அஞ்சல் பெட்டியை கண்டதுமே
அஞ்சல் பெட்டியை கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி இரக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகைத்தீண்டும் உணர்வு உழைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றி சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரப்பரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
(அஞ்சல்..)
கொஞ்ச நாளும் மனமே உனக்கு ஏன் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையய் வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகைப் பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை வாசக்காற்றில் சலவை செய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே இரசித்துக்கொள்ளும் நிலமையானது
இது மின்னல் மிகடும் ஆனால் கூட புதுமையானது
படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 2:44 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, கார்த்திக், சபேஷ் - முரளி
Wednesday, November 18, 2009
வேட்டைக்காரன் - ஒரு சின்னத் தாமரை
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோமக்கால்களோ ஒருப்பயணம் போகுதே
உன் ஈரப்புன்னகை சுடுதே
என் காடுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
உன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே
என் பெயர் கேட்டாலே அடிப்பாறையும் பூப்பூக்கும்
உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்
உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
(ஒரு சின்ன..)
உன் குரல் கேட்டாலே அங்குக் குயில்களுக்கும் சுகம்
நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேறும்
அனுபதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது
(ஒரு சின்ன..)
படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா
பதிந்தவர் MyFriend @ 2:23 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, கிரீஷ், சுசித்ரா ராமன், விஜய் ஆண்டனி
Tuesday, November 17, 2009
நாடோடிகள் - உலகில் எந்தக்காதல்
உலகில் எந்தக்காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கவிதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம் கபிக்கும் கற்பகம்
(உலகில்..)
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவன் இல்லாது அடுத்தவன் வாழ்வை ஏற்பதுப் பெறும்பாடு
ரு புறம் தலைவன் மறூபுறம் தகப்பன்
இருட்டொளி எறும்பானாய்
பாசத்துக்காக காதலைத் தொலைத்து ஆலையில் கறூம்பானாய்
யார் காரணம் யார்
யார் பாவம் யாரைச் சேறும்
யார்தான் செந்நிழல் கண்ணீர் வாழ்த்தா கண்ணீர் ஆனான்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ்நிலை
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை
மனம் என்னும் குளத்தில் விழியென்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதி வழிப்போனால் கரைவரக்கூடும் விதிவழிப்போனானே
விதை ஒன்றூப்போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
ந் சொல்வது என் சொல்வது
தான் நட்புக்காக தானே தேய்ந்தாய்
கற்பைப்போலே நட்பைப் பார்த்தான்
காதல் தோற்கும் என்றாப்பார்த்தான்
(உலகில்..)
படம்: நாடோடிகள்
இசை: சுந்தர் சி பாபு
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:13 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, 2009, சுந்தர் சி. பாபு, ஹரிஹரன்
Monday, November 16, 2009
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் ..
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென (பார்த்து)
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாயென நீ வருவாயென
(பார்த்து)
பாடலைப்பாடியவர் : எஸ்.பி.பி
இசை : எஸ் . ஏ ராஜ்குமார்
படம் : நீ வருவாயென
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:44 PM 1 பின்னூட்டங்கள் Links to this post
நாடோடிகள் - ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகானப் பொண்ணப் பார்த்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடைப் பின்னால தான் ஓடுங்கடா
குத்த வச்சப் பொண்ணு எல்லாம் அத்தைப்பொண்ணுதான்
மத்தப் பொண்ணு எல்லாம் என் மாமன் பொண்ணுதான்
கைத்தட்டிக் கூப்புடுதே இரண்டுக்கண்ணு தான்
ஏண்டான்னுக் கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்ல இல்ல எங்களுத்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்
எப்போதும் எங்கப்பாடு மங்கலந்தான்
(ஆடுங்கடா..)
சிங்காரி நாத்தனா சிங்கிள் டீ ஆத்துனா
கோடுப்போட்ட க்ளாஸுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பண்ணிக்கன்னு காதக்கிள்ளினாள்
பாம்புப் புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
பாம்புப் புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ணப்புடிக்க கபடி கபடிதான்
ஆகாயம் மேலப்பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா கண்ணை மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடிவா வா
பங்காளி ஒன்னா சேர்ந்துப்பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கட்டுல சில்லரைய எடுத்து
நாட்டாமை திண்ணையில சீட்டாடலாம்
தந்தானே தந்தானே தந்தானேனானா
தந்தானே தந்தானே தந்தானேனானா
(ஆடுங்கடா...)
மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரித்தாளே சிந்தும் மத்தாப்பு
ஆண்டாலு இடுப்புல அஞ்சாறு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பல்லப்புடுங்க வாயக் காட்டுடா
பொண்ணப் புடிக்க பல்லக் காட்டுடா
பாவாடைக் கட்டி வந்தாள் பச்சக்குதிர
சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண் கோழி எங்களோட ஆட்டத்தப்பார
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண் புள்ள நான் தான்
ஏம்புள்ள என்னப்பாத்து ஓடிப்போற
(ஆடுங்கடா..)
படம்: நாடோடிகள்
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: வேல் முருகன்
பதிந்தவர் MyFriend @ 2:06 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சுந்தர் சி. பாபு, வேல் முருகன்
Sunday, November 15, 2009
புன்னகை தேசம் - மழையே ஓ மழையே
மழையே ஓ மழையே.. புன்னகை தூவுறியே
சிலையாய் ஒரு சிலையாய்.. நிக்கவச்சு பாக்குறியே
(மழையே ஓ மழையே.. )
முத்து முத்து மல்லிகையாய் முத்தம் இட்டு சிரிக்கிறியே
சின்ன உளி நீர் துளியாய் என்னை கொஞ்சம் செதுக்குறியே
உலகினை சலவை செய்ய உன்னை தந்தது வானம்
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )
மூங்கில்கள் புன்னகை செய்தால் குழலாக மாறும்
பாறைகளும் புன்னகை செய்தால் சிற்பங்கள் ஆகும்
மரச்சட்டம் புன்னகை செய்தே நடைவண்டி ஆகும்
கரை கூட புன்னகை செய்தே வைரமாக மின்னும்
நீரில் நிலவே ஒரு குளத்தின் அழகு புன்னகை
எரியும் சுடரே அது கரையும் மெழுகின் புன்னகை
சிரித்திடும் இயற்கை எல்லாம் பூமியின் புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )
இளமைக்கு புன்னகையாக முதல் காதல் தோன்றும்
இதயங்கள் புன்னகை செய்தால் இடம்மாறிப் போகும்
வீட்டுக்கு புன்னகையாக மழலைகள் பூக்கும்
மழலைகள் புன்னகை செய்தால் தெய்வம் வந்து வாழும்
பிரியா நட்பே நம் வாழ்க்கை செய்யும் புன்னகை
பிரிந்தே சேர்ந்தால் அங்கு அழுகைகூட புன்னகை
அனைத்தையும் வென்று காட்டும் அழகிய புன்னகை
புன்னகையே.. அணிந்தாடுவோம்
புன்னகையால்.. உலகாளுவோம்
(மழையே ஓ மழையே.. )
பாடியவர் : சித்ரா
இசை: S.A. ராஜ்குமார்
படம்: புன்னகை தேசம்
பதிந்தவர் G3 @ 6:05 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, SA ராஜ்குமார், சித்ரா
வேட்டைக்காரன் - கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குது
கரிகாலன் காலப்போலக் கருத்திருக்குது கொழலு
கொழலில்ல கொழலில்ல தாஜ்ஜுமஹால் நிழலு
சேவலோடக் கொண்டைப்போல செவந்திருக்குது ஒதடு
ஒதடில்ல ஒதடில்ல மந்திரிச்சத் தகடு
ஏய் பருத்திப் பூவப்போல பதியிது ஒம்பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்
ஏ வலம்புரி சங்கப்போல வழுக்குது ஒங்கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
(கரிகாலன்..)
ஏ வால வளைவுப்போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்தரி முந்தரிக்கேக்கு
ஊதிவச்ச பலூன் போலப் பூத்திருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளிக் கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்புப் பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை
(கரிகாலன்..)
கண்டவுடன் திட்டுதடி கத்திரிக்கோலுக் கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கெரங்கடிக்கிற டின்னு
பத்த வச்ச மத்தாப்புப் போல மினு மினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருங்குப் பையப்போல் இருக்கு இடுப்பு
இடுப்பு இல்ல இடுப்பு இல்ல எந்திரப்படுப்பு
கண்ணுப்படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
(கரிகாலன்..)
படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: சுர்சித், சங்கீதா ராஜசேகரன்
பதிந்தவர் MyFriend @ 2:17 AM 2 பின்னூட்டங்கள் Links to this post
Saturday, November 14, 2009
ஜக்குபாய் - அச்சம் மடம் நாணம்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அச்சம் மடம் நாணம் எனை விட்டுப் போகவேணும் நீவா
தன்னந்தனித்தீவு நீ தங்கிச்செல்லும் தேரு நான் தான்
அடிக்கடி என் இடையில் நெருக்கடி நீயும் கொடு
தினந்தோறும் யுத்தமாய்
என் ஆடைகளை என் ஆசைகளை
என் இளமையும் தான் என்றும் இனிது
(அச்சம்..)
எங்கெங்கும் இன்பம் உண்டு
அங்கங்கு கைகள் கொண்டு
அங்கத்தில் தேடும் வித்தை நீ அறிவாய்
தேகத்தில் மச்சம் தேடி தாகத்தின் உச்சம் நாடி
மோகத்தை வெல்வாய் கூட நீ தொடர்வாய்
இரவோடு இரவாகப் பூவோடு உறவாடு
சலிக்காமல் விளையாடவா வா வா
என்னோடு காணாத பேரின்பம் வேறேது
மூழ்காமல் நீராட வா
ஆரம்பக் கல்வி நித்தம் ஆகட்டும் அதுவே நித்தம்
தரைத்தளம் மிதக்கலாம் கலந்திடவா
(அச்சம்..)
தீராதே எந்தன் ஹீரோ
உன் முன்னால் நானும் ஜீரோ
ஒன்றாக என்னை சேர்க்க நீ ரெடியா
யார் யாரோ என்னைத் தீண்ட
வந்தானே என் ஆசைப்பொங்க
யாருக்கும் அச்சம் இல்லை நீ வறியா
சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும்
எந்நாளும் எப்போதும் போர் போர் போர்
உன்னோடும் என்னோடும் உண்டாகும் சந்தோஷம்
எங்கேயும் எப்போதும் ஷேம்
இளமைக்கு குட்பாய் சொல்லி
இளமைக்கு வெல்கம் சொல்லு
விண்ணைத்தொடு வா வா வா
(அச்சம்..)
படம்: ஜக்குபாய்
இசை: ரஃபி
பாடியவர்கள்: சுசித்ரா
பதிந்தவர் MyFriend @ 12:25 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Friday, November 13, 2009
அந்த முகமா இந்த முகம்
1.அம்பிகையே ஈஸ்வரியே >> 2.மானா பொறாந்தா காட்டுக்கு ராணி >> 3.அந்த முகமா இந்த முகம் >> 4.கார்த்திகை விளக்கு >> 5.தலைவா தவப்புதழ்வா வருகவே >> 6.அடி ஏன் அத்த >> 7.மாப்பிள்ளை நீயும் தானா மாமா >> 8.போகிற நதியென்ன >> 9.உலகத்திலே ஒருவன் உயர்ந்து >> 10.வருசம் போனால் என்ன >> 11.முழு நிலவின் திருமுகத்தை
12.அத்திக்காய் காய் >> 13.செந்தூர் முருகன் கோவிலிலே.
வானொலி அறிவிப்பாளர் திருமதி.பொற்கொடி செல்வராஜ் அவர்களின் அற்புதமான ஒலித்தொகுப்பு இந்த பதிவு. 13 பாடல் பல்லவிகள் பாருங்கள் கேட்கத் தூண்டுபவை. ஒலிதொகுப்பை வழங்கிய அறிவிப்பாளர் அவர்களுக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.
|
for download clik here
பதிந்தவர் Covai Ravee R @ 11:45 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை வானொலி
பேராண்மை - ஏறத்தாழ ஏழு மணி
ஏறத்தாழ ஏழு மணி
என் இமையை பறித்து சென்றாய்
(ஏறத்தாழ..)
இமையை திருப்பி கேட்டேன்
இமையை திருப்பி கொடுத்து
என் கண்கள் பறித்துசென்றாய்
கண்கள் திருப்பி கேட்டேன்
கண்கள் திருப்பி கொடுத்து
என் இதயம் பறித்து சென்றாய்
ஏதோ ஒன்று பறிக்காமல் இருக்க முடியாது உன்னால்
ஏதோ ஒன்றை இழக்காமல் இருக்க முடியாது என்னால்..
(ஏறத்தாழ..)
காதல் வந்ததும் பறந்துப் பார்த்தேன்
வானம் ஒருத் துளி மிஞ்சவில்லை
பாக்கியமெல்லாம் பூ முடிக்கலையாது
வார்த்தை ஏதும் மிஞ்சவில்லை
அழகே உன்னை நெருங்கும்போது ஆசை ஏதும் மிஞ்சவில்லை
அன்பே உன்னை நினைத்து படுத்தால் ஆடை ஏதும் மிஞ்சவில்லை
மிஞ்சியதெல்லாம் கேள்வி ஒன்றுதான்
காதல் செய்தே செத்து போவதா
செத்துக் கொண்டே காதல் செய்வதா
(ஏறத்தாழ..)
ஆணுக்குள்ளே எத்தனை உலகம்
உன்னைக் கண்டதும் விடையறிந்தேன்
பெண்ணுக்குள்ளே எத்தனைப் பூக்கள்
என்னைத்தொட்டதும் விடையறிந்தேன்
துடிக்கும் விண்மீன் எத்தனையோ
தூங்கா இரவில் விடையறிந்தேன்
கொட்டும் மழைத்துளி எத்தனையோ
கொட்ட விழித்து விடையறிந்தேன்
விடையும் தெரியா கேள்வி ஒன்றுதான்
காதல் செய்தே செத்துப்போவதா
செத்துக்கொண்டே காதல் செய்வதா
(ஏறத்தாழ..)
படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சாதனா சர்கம்
பதிந்தவர் MyFriend @ 2:44 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சாதனா சர்கம், வித்யாசாகர்
Thursday, November 12, 2009
பேராண்மை - துப்பாக்கி பெண்ணே
துப்பாக்கி பெண்ணே சூடானக் கண்ணே
உலகம் பிறந்தது உனக்காக
நாளைக்கு உலகம் யாருக்குச் சொந்தம்
இன்றைக்கு வாழ்வோம் நமக்காக
காற்றைத்தான் நிற்கச்சொல் ஆற்றையும் நிற்கச்சொல்
குயிலை மட்டும் பாடச்சொல்
ஹாப்பி பர்த் டே
(துப்பாக்கி..)
இதயம் பாட்டிசைக்க இளமை ஆர்ப்பறிக்க கொண்டாடு உதடு
கிச்சிப்புடி மட்டும் மல்லடி டி
குங்ஃபுப் ஃபைட்டும் கற்றுக்கொள்ளடி டி
ஆடைக்கட்ட மட்டும் அல்லடி ஆள்வதற்கும் கற்றுக்கொள்ளடி டி
நீ துணியல்ல மலர் என்று போராடு பெண்ணே
(துப்பாக்கி..)
எதிர்த்தால் கதை முடிப்போம்
நினைத்தால் போர்த்தொடுப்போம்
ஜீன்சல்ல சிட்டுக்குருவி சிறகடித்து விண்ணை வெல்லடி
வாடிக்கட்டும் பட்டுச் சேலையே யே
மியூசியத்தில் வைக்கச்சொல்லடி டி
புது வீட்டில் புது வாழ்க்கைக் கொண்டாடு பெண்ணே
(துப்பாக்கி..)
படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ஃபெஜி, மேகா, ஷாலினி, சுவி
பதிந்தவர் MyFriend @ 2:33 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Wednesday, November 11, 2009
இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை
பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி
இசையமைப்பாளர்களில் பல ஜாம்பவான்கள் பல பேர் தங்கள் இசைக்கு வரி வடிவம் தர பாடலாசிரியர்களின் ஜாம்பவான் உடுமலை நாரயாணா கவியாரின் தேடித்தான் போனார்கள் என்பதில் கீழ்கண்ட பாடல் பலல்விகளை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு பாடலும் கருத்துக்கள் நிறைந்த பாடங்கள். இதோ அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்கள் தன் காந்தக்குரலில் கவியாரின் தகவல்களூடன் அவரின் பாடல்களையும் அவருக்கே உரிய பாணியில் வழங்கி நம்மை மகிழ்விக்கிறார். தகவல்கள் எல்லாமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. கேட்கு மகிழுங்கள் இணையதள அன்பரகளே. இந்த ஒலித்தொகுப்பை நமக்காக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. சூரியகாந்தன் அவர்களுக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
1.உலுதுண்டு வாழ்வாரே வாழ்வார் >> 2.ஆகாரம் உன்ன எல்லோரும் >> 3.கன்னித்தமிழ் சாலையோரம் >> 4,பெண்களை நமபாதே கண்களே >> 5.நாடோடி கூட்டம் நாங்க >> 6.இது பொன்நாள் இது போலே >> 7..துனிந்தப்பின் மனமே துயரம் >> 8.விண்ணோடும் முகிலோடும் விளையாடும் >> 9.இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை
|
பதிவிறக்கம் இங்கே
பதிந்தவர் Covai Ravee R @ 12:37 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை வானொலி
எனக்கும் உனக்கும் வழக்கு
தேன் கிண்ணம் பழைய பாடல்கள் தொகுப்பு கேட்டு மகிழுங்கள். வழங்கியவர் அறிவிப்பாளர். திரு.க.சுந்தரராஜன் அவர்களின் பாடல் தெரிவுகள் உங்கள் மனதை மயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
1.ஆரம்பகாலம் ஒருபக்க காலம் >> 2.என்னை மறந்ததேன் >> 3.உத்தரவின்றி உள்ளே வா
4.கொளையா கொளையா முந்திரிக்கா >> 5.எனக்கும் உனக்கும் வழக்கு >> 6.நீ ஒரு செல்லப்பிள்ளை >> 7.கண்வழியே கண்வழியே
|
பதிவிறக்கம் இங்கே
பதிந்தவர் Covai Ravee R @ 12:18 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை வானொலி
பேராண்மை - காட்டு புலி அடிச்சு
காட்டு புலி அடிச்சு காட்டு ராசா வாராண்டா
வீட்டுக்கு ஒருத்தன் வந்து
வெற்றி மாலை போடுங்க போடுங்கடா
(காட்டுப்..)
நாம கடவுள் பொறக்கும் முன்னே
இந்தக் காட்டுக்கு வந்தவுக
பல காட்டு விலங்கு செய்து இங்க கஞ்சி குடிச்சவுக
இயற்கைத் தாயின் சரக்கு
அட எங்க ஒடம்புல இருக்கு
பல கண்ணியின் தேனு இரண்டும்
எமக்கு தாய்ப்பால் தந்திருக்கு
விளையாடு துள்ளிப் பாடு
இந்தக் காடு எங்க வீடு
அந்த மலைங்க தூணுங்க
மலைங்க தூணுங்க
எங்க மரங்க குலுங்க மரங்க குலுங்க
இங்க கடவுள் பூமிங்க கடவுள் பூமிங்க
இங்க நதிங்க சாமிங்க
காட்டுப் புலிங்க எங்க விருந்து
சுத்துக்காத்து எங்க மருந்து
நாங்க மண்ணுலக் கெடக்கோம்
ஆனா அழுக்குப் படல
எங்க மூச்சுக் குழிய ஒரு புகையும் தொடல
மண்ணுக்கு நாங்க யாரும் உறம் போடவில்ல
காட்டு மனிதர்க்கு பதுனால உறம் போடவில்ல
பொதுவுடைமைச் சமுதாயம் தொலைந்துப்போகவில்ல
நாங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கம் மறுத்ததில்ல
(காட்டுப்..)
ஓ.. மலைநாடு தனிநாடு அங்க வீடு ஒருக்கூடு
இங்க காத்தும் தண்ணியும் இன்னும் கலங்கப்படல
இந்தப்ப்பச்ச மண்ணுல நெலப்பாதம் படல
எங்கப் பொழப்பு இந்தக்காடு எங்க ஒடம்பு முதலீடு
இந்த மண்ணின் வயசு எங்க மனுசன் வயசு
இந்த மலையின் மனசு எங்க மனுசன் மனசு
தேயிலையும் மரமாகும் அதை வளர்ப்பதில்லை
சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை
கடவுளுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்ல
எங்களுக்கும் மூலதானம் இல்ல
(காட்டுப்..)
படம்: பேராண்மை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ஜேஸ்ஸி கிஃப்ட், கேகே
பதிந்தவர் MyFriend @ 2:23 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, கேகே, வித்யாசாகர், ஜேஸ்ஸி கிஃப்ட்
Tuesday, November 10, 2009
அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா
ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)
இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்
(அது ஒரு..)
ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மறந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
(அது ஒரு..)
படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்
பாடியவர்: ஹரிசரன், ப்ரேம்ஜி அமரன்
பதிந்தவர் MyFriend @ 2:28 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, 2009, ப்ரேம்ஜி அமரன், ஹரிச்சரண்
Monday, November 9, 2009
சித்து ப்ளஸ் டூ - பூவே பூவே காதல் பூவே
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
போதும் போதும் எண்ணம் போதும் வாழ்வில் தேனை வார்த்தாயே
காதல் தேசம் ஒன்றில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே
காதல் மட்டும் என்னை வென்றால் சுற்றும் பூமி நின்றுமே
(பூவே..)
நியூட்டன் சொன்ன விதி பொய்யாய் போனதடி
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி
இது இளமை காணும் மாற்றம்
இனி பூமி புதிய தோற்றம்
தனியாக சிரிப்போமே கனவோடு ரசிப்போமே
பசி தூக்கம் மறப்போமே பறப்போமே
(பூவே..)
கூர்மை பலப்பலக்கும் காதல் இருப்புறமும்
கூராய் மனம் கிழிக்கும்
இந்த காதல் செய்யும் காலம்
அந்த வலிகள் இன்ப மாயம்
உன் தோளில் சாய்ந்தாலே உற்சாகம் தோன்றிடுமே
உயிர் பூக்கள் மலர்ந்திடுமே உயிரே வா
(பூவே..)
படம்: சித்து ப்ளஸ் டூ
இசை: தரன்
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சின்மயி
பதிந்தவர் MyFriend @ 1:15 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, சின்மயி, தரண், யுவன் ஷங்கர் ராஜா
Sunday, November 8, 2009
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் ஒடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்
(ஒரு நாளுக்குள்..)
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்
நீ தானோ என்றோ திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனி மலை ஒரு எறிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்
(ஒரு நாளுக்குள்..)
நதியாலே பூக்கும் மரங்களுக்கும்
நதி மீது இருக்கும் காதல் இல்லை
நதி அறியுமா நெஞ்சம் புரியுமா
கரையோர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டாள்
நீ பார்க்காமல் உன்னை மறக்கலாம்
இனி காதல் கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் தெரியாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்
( ஒரு நாளுக்குள்..)
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 2:29 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2008, கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா
Saturday, November 7, 2009
வா வெண்ணிலா உன்னைத்தானே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
(வா வெண்ணிலா..)
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா..)
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 2:32 AM 4 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, MS விஸ்வநாதன், S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Friday, November 6, 2009
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)
குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:24 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, MS விஸ்வநாதன், S ஜானகி, இளையராஜா
Thursday, November 5, 2009
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)
மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
(ஏனோ..)
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..)
படம்: ஆதவன்
எழுதியவர் : தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: Shail Hada, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா
பதிந்தவர் MyFriend @ 9:00 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2009, Shail Hada, ஆண்ட்ரியா, சுதா ரகுநாதன், ஹாரிஸ் ஜெயராஜ்
குழலூதும் கண்ணனுக்கு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை ப்போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
(குழலூதும்..)
மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளையா
(குழலோதும்..)
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
(கண்ணா..)
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
(குழலூதும்..)
படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:12 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1980's, MS விஸ்வநாதன், இளையராஜா, சித்ரா
Wednesday, November 4, 2009
குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ராதை உனக்கு சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
(குருவாயூரப்பா..)
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன்
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில்
நாந்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவந்தான்
மாது உன் மீது எப்போது என் மோகம்
தீராதோ சொல் பூங்கொடியே
(குருவாயூரப்பா..)
ஏகாந்த நினைவும் எறிகின்ற நிலவும்
என் மேலே ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாரலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்
வா வா என் தேவ செம்பூவே
என் தேகம் சேராதோ உன் கைகளிலே
(கூவாயூரப்பா..)
படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 1:53 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, சித்ரா, வாலி
Tuesday, November 3, 2009
ஒரு கிளி ஒரு கிளி - லீலை
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்
எனக்கு நானல்ல
உனக்குத்தான் என்று உணர்கிறேன்
நிழலெனத் தொடர்கிறேன்
(ஒரு கிளி)
விழியல்ல விரலிது
ஓர் மடல்தான் வரைந்தது
உயிரல்ல உயிலிது
உனக்குத்தான் உரியது
இமைகளின் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல்தான் எந்நாளும்
ஒரு வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும் அந்த
வானம் போல் விழாதது
(ஒரு கிளி)
தூரத்தில் மேகத்தை
துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே உனை நான்
தேடியே வந்தேன் இங்கே
பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல்லெறிந்தாய்
தங்கினேன் உன் கையில்
வழங்கினேன் எனை இன்றே
தோழியே உன் தேகம்
இளந்தென்றல்தான் தொடாததோ
தோழனே உன் கைகள் தொட
நாணம்தான் விடாததோ
(ஒரு கிளி)
படம்: லீலை
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
பாடல்: வாலி
பாடியவர்கள்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:09 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, 2009, SP பாலசுப்ரமணியம், சதீஷ் சக்ரவர்த்தி, வாலி, ஷ்ரேயா கோஷல்
அழகு மலராட அபினயங்கள் சூட
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)
படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:43 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
Monday, November 2, 2009
ஆதவன் - வாராயோ வாராயோ
Get Your Own Hindi Songs Player at Music Plugin
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா ஆ தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஓலைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனொடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
(வாராயோ வாராயோ காதல் கொள்ள)
நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார ஸ்ருதி நீ
(வாராயோ வாராயோ மோனாலிஸா)
பாடல் இயற்றியவர் : கபிலன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம்: ஆதவன்
பாடியவர்கள்: சின்மயி,மேகா, உன்னிக்கிருஷ்ணன்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 8:53 AM 4 பின்னூட்டங்கள் Links to this post
வகை 2000's, 2009, உன்னி கிருஷ்ணன், சின்மயி, மேகா, ஹாரிஸ் ஜெயராஜ்
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி தேடும் மனசு தொலைகிறதே
(இன்னிசை..)
கண் இல்லையென்றாலும் நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை..)
உயிர் ஒன்று இல்லாமல் உடல் நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களே மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போலத் தேடல் கூட ஒரு சுகமே
(இன்னிசை..)
படம்: துள்ளாத மனமும் துள்ளும்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:35 AM 1 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1990's, SA ராஜ்குமார், உன்னி கிருஷ்ணன், சுரேஷ் பீட்டர்ஸ், வைரமுத்து
Sunday, November 1, 2009
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...
பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ
ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு
பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
(ரோஜா மலரே ராஜகுமாரி)
படம்: வீரத் திருமகன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பதிந்தவர் இம்சை அரசி @ 6:58 PM 0 பின்னூட்டங்கள் Links to this post
இந்த பச்சைக்கிளிக்கொரு
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே
(எந்த..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
(தூக்க..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்
(ஆறு..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
படம்: நீதிக்கு தலை வணங்கு
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: புலமை பித்தன்
பதிந்தவர் MyFriend @ 1:26 AM 0 பின்னூட்டங்கள் Links to this post
வகை 1970's, KJ ஜேசுதாஸ், புலமைப்பித்தன்