Sunday, November 22, 2009

ஜக்குபாய் - துரு துரு துரு கண்களே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

துரு துரு துரு கண்களே துளைத்தது இளநெஞ்சிலே
தொடத் தொடத் தொலைதூரமே
துரத்துது அந்த வாசமே
இருளுடன் ஒளி தாளம் போட
அரை மயக்கத்தில் பாட்டுப்பாட
இதைத்தான் அந்த இரவுகள் இனித்திடாதோ
(துரு..)

நீல நிலா நீந்தாத ஆகாயமாகிறேன்
ஈர மழைக்காணாத மேகமாய் ஏங்கினேன்
வாட்டுது தனிமை என் தனிமை வேதனை தீயிலே
பொங்கிய இளமை ஓர் இளமைப் பூத்தது முள்ளிலே
ஆதலால் அழைக்கிறேன் அணைப்பது எவரோ
காதலால் தவிக்கிறேன் தவிப்பதுத் தவறோ
(துரு..)

கோடி யுகம் ஓடியும் பூமியும் சுழலுதே
காதலெனும் சாட்டையால் அந்தரத்தில் அசையுதே
ஆசையைக் கணித்தால் நம் ஆயுளும் ஆறேழு மாதமே
தூக்கத்தில் புறண்டும் உன் மனதே கண்டதைக் தேடுமே
நாளுமே வென்றுதான் கைவசம் வருமே
ஒன்றிலே ஒன்றுதான் ஒன்றிட சுகமே ஏ
(துரு..)

படம்: ஜக்குபாய்
இசை: ராஃபி
பாடியவர்கள்: மகேஸ்வரி, ராணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam