Saturday, November 7, 2009

வா வெண்ணிலா உன்னைத்தானே



வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்
(வா வெண்ணிலா..)

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்
(வா வெண்ணிலா..)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

3 Comments:

க.பாலாசி said...

நான் மிகவும் ரசிக்கும் பாடல்....

kamar said...

திரையில் வருகின்ற , வா வெண்ணிலா பாடலுக்கு கீழே நீங்கள் பிரசுரம் செய்துள்ள பாடலில் நிறைய தவறுகள் உள்ளது . பாடலில் மேலாடை மூடியே ஊர் கோலமாய் போவதேன் என்பதுதான் சரி
திரை போட்டு உன்னை (மறைத்தாலே பாவம் )
ஒரு (முறையேனும்) திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
(என்னை சேர) இன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்
(வா வெண்ணிலா..)

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் , (இடையினில் ஆடும் உடையென நானும் - இந்த வரியவே காணோம் )
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக உனக்காக பனிக்காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

அடைப்பு குறியில் இருப்பவையெல்லாம் நான் கண்டு பிடித்த தவறுகள் , மற்ற படி அருமை , எதுல எல்லாம் தப்பு கண்டு பிடிக்கிறதுன்னு இவங்களுக்கு விவஸ்தயில்லாம போச்சுன்னு உங்க முனுமுனுப்பு எங்களுக்கு கேக்குது ,

Anonymous said...

SuPerB Melody.

Last 25 songs posted in Thenkinnam