Monday, November 23, 2009

அதே நேரம் அதே இடம் - முதல் முறை உன்னைப் பார்த்த போதே



முதல் முறை உன்னைப் பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னைப் பார்க்கும் போதும்
அருகினில் என்னைக் காண வேண்டும்
உன் அருகே நான் இருந்தால் சிலிர்க்கிறதே
நீ விளையாட்டு பிள்ளை
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை
எனை தாயைப் போலத் தாங்க வேண்டும் மடியினிலே
(முதல் முறை..)

நீ அருகில் தோன்றும் நேரமே
வான் நிலையும் மாறிப்போகுதே
நீயும் நினைத்தால் வானவில் வந்துவிடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் தோண வேண்டுமே
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் இருமுறை இறக்கிறேன்
உனக்கென வேண்டுமடி உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும் வரமது என்னாளும் போதும்
நீ சூடும் போதும் வாடும் போது வலித்திடுமே
(முதல் முறை..)

நீ நடக்கும்போது வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமும்
தோள் இரண்டில் என்னை தூக்கினால்
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்
நெஞ்சில் தினமுமே
சூரியன் உதிப்பதே உன்னுடல் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே
இனி மழைமேகம் யாவும்
இறங்கியே உனைத்தேட ஏங்கும்
இனி கோயில் தேடிப் போகமாட்டேன்
தெய்வமும் நீ
(முதல் முறை..)

படம்: அதே நேரம் அதே இடம்
இசை: ப்ரேம்ஜி அமரன்
பாடியவர்கள்: ஹரிசரண், ஹரிணி, திப்பு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam