Friday, November 6, 2009

ஊரு சனம் தூங்கிருச்சு



ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
(ஊரு சனம்..)

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
(ஊரு சனம்..)

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மால தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
(ஊரு சனம்)

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam