Monday, December 29, 2008

867. கண்ணதாசன் காரைக்குடி




கண்ணதாசன் காரைக்குடி
பெயரை சொல்லி ஊத்தி குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன் டா
கண்ணாடி கோப்பையில் கண்ண மூடி நீச்சல் அடி
ஊறுகாய்யா தொட்டுக்கிட்டா ஒடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசியலிசம் தான்

பொண்டாட்டி பிள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்கு பாரு புலம்புறார்
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறு தாண்டுனா நடக்க பாதை இல்லையே

அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஒவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில் கண்டம் இல்லை
எங்களுக்குள் சாதி மதம் இரண்டும் இல்லை
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
ரோடுக்கு கடையில் மனுசன் ஜாலிய பாரு
சேட்டு கடையில் மனைவி தாலிய பாரு

படம் : அஞ்சாதே (2007)
இசை : சுந்தர் சி. பாபு
பாடியவர் : மிஷ்கின்
வரிகள் :

866 கலவரப்டுத்தும் சொல்லிசை கானங்கள்



கலவரப்டுத்தும் சொல்லிசை கானங்கள்

கானல் நீர் பற்றி எல்லோரும் தெரிந்திருப்பீர்கள். ஹைவேஸ் ரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் நம் கண் முன் நீரோடை போன்று தெரியும் சில நேரங்களில் ஏன் பல நேரங்களிலும் ரோட்டில் போகும் வாகனங்களின் பிம்பங்களூம் நமக்கு தெரியும் இதை நான் பலதடவை பார்த்து ரசித்திருக்கிறேன். அதுபோல கண்ணுக்கும் மட்டும் கானல் நீர் போல.
நம் காதுகளூக்கும் ஒரு கானல்சொல் ஒன்றை பாடல்களில் மறைத்து வைத்து அடிக்கடி நம் காதுகளூக்கு ரீங்காரமிட செய்துவிட்டு அலைபாயவைக்கிறார் நம் ஆதர்ஸ அறிவிபாளர் ஆர்.ஜி.எல்.என் சார். நாம் மட்டுமல்ல ஒலிக்கோப்பில் நீங்களூம் கேளூங்கள் அர்த்த
ராத்திரியிலும் நீங்கள் கணினியுடன் போரடுகிறீர்கள், வானொலி நேயர்களோ இந்த பாடல்களூடன் எப்படி போராடுகிறார்கள் என்று. சரி சரி அப்படி என்ன அந்த வார்த்தை என்று தானே கேட்கிறீகள்?. அது எப்படிங்க நான் மட்டும் சொல்ல முடியும்? கானங்களை கேளுங்கள் முடிவில் உங்களூக்கே தெரியும். நான் அந்த வார்த்தையை உபயோகித்தது சரி தான் என்று. என்ன தயாராகிவிட்டீர்களா அன்பர்களே. அமுக்கி விடுங்கள் ப்ளேயரின் ஐகானை. ஜாக்கிரதை அறிவிப்பாளர் பேச்சை கேட்டு டென்சன் ஆகாதீர்கள். வழக்கம் போல்
நம்மை குழப்ப மீண்டும் ஒரு சொல்லை கையில் எடுத்துக்கொண்டு. அமைதியாக க்ளாசிக் கானங்களில் கரைந்து போயிருந்த நமது நேயர்களை ”அர்த்தமுள்ள அர்த்தமற்ற பேச்சுகளால்” தலைமுடியை பிய்த்துக்கொள்ளூம் படி வைத்திருக்கிறார்.
ஆர்.ஜி.எல் சார் “அநியாயம் இது அநியாயம் சார்” இப்படியெல்லாம் வார்த்தைகளை கொடுக்கீறீர்களே அடுக்குமா உங்களூக்கு?. தேன் கிண்ண நேயர்களே ஒட்டு மொத்தமாக நேற்று (28.12.08) இந்த் ஒலிக்கோப்பை கேட்டு என் தலைமுடியை பிய்த்துக்கொண்டு
வெறுத்துப் போய் அவரிடம் கேட்கும் கேள்வி தான் மேலே சொன்னது. இந்த ஒலிக்கோப்பை கேட்டு முடிவில் நீங்களூம் கேட்கப்போகிறீர்கள் என்பது நிச்சயம். ஆஸ்திரேலியா கானாபிரபா சார் உங்க றேடியோஸ்பதியில் இது போல் கான்செப்ட் வைத்திருக்கிறீர்களா? (தேன் கிண்ணத்துல இதுபோல் 4 பதிவுகள் வந்துவிட்டது கேட்டிருப்பீர்கள் என்று
நினைக்கிறேன்) அர்ஜெண்டைனா ஜி.ராகவன் சார் நீங்களூம்? ஒலிக்கோப்பை கேட்டால் நீங்களூம் வெறுத்திடுவீர்கள். அவ்வளவு ஸ்வாரஸ்யம், பரவசம். அப்படியென்ன பரவசம் கேட்டு விடுவோமா அன்பர்களே?

Get this widget | Track details | eSnips Social DNA


1. மாலையிட்டான் ஒரு மன்னன் - அவன் ஒரு சரித்திரம்
2. திருமாலின் திருமார்பில் - திரிசூலம்

போட்டியில் சேராத பாடல் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

3.. பச்சை கிளி முத்து சரம் - உலகம் சுற்றும் வாலிபன்
4. ஹோ ஹோ எந்தன் பேபி - தேன் நிலவு
5. ரோஜா மலரே ராஜகுமாரி
6. ஒரே பாடல் உன்னை அழைக்கும்
7. நான் பாடும் பாடல்

865. தாவணி போட்ட தீபாவளி



தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளைச்சி கால் மொளைச்சி ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு..

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல..

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டுடூ பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல..

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா

பம்பரத்த போல நானும் மாடுறேனே மார்க்கமா
பச்ச தண்ணீர் நீர் கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா

மகா மக குளமே.. என் மனசுக்கேத்த முகமே
நவா பழ நிறமே.. என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல.. எனக்கு ஏதும் தோணல
இதுக்கு மேல விளக்கும் பொது இடிக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாலே...

கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே

பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தெக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல்
இச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்த வாலு குறும்பு தெழு
ஆனாலும் நீன் ஏஞ்சலு

ஈரக்கொல .. குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாலே
இவ ஒர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளைச்சி கால் மொளைச்சி ஆடுது என் பாட்டுக்கு

கன்னா கன்னா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு..

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாளே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டுடூ விட்டுடூ ஆள விட்டிடுடூ பொழச்சு போறான் ஆம்பள

இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல.. (2)

படம் : சண்டைக்கோழி (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : விஜய் யேசுதாஸ், ஸ்ரேயா கோஷல்
வரிகள் :

Friday, December 26, 2008

864 அசரிரீயை நேசிக்கும் அபூர்வ ரசிகன்



“அழையுங்கள் அந்த வெண்குரலோனை” -- அசரிரீயை நேசிக்கும் அபூர்வ ரசிகன்

அன்பு நண்பர்களே எனக்கு நீங்கள் தலைப்பே வித்தியாசமாக இருக்கே என்று யோசிப்பது எனக்கு புரிகின்றது. ஆமாம்.. ஆமாம் திரையிசை பாடல்களில் அசரிரீ ஒலியின் மூலம் பல பாடல்கள் வந்துள்ளன அவை பாடல்களூக்கு கதாபாத்திரத்தின் மனநிலையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டிவிடும். நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்கள் துவக்கத்தில் சொல்வது போல் பாடல்களில் அசரிரீ குரல் வேண்டுமா “அழையுங்கள் அந்த வெண்குரலோனை” என்று சீர்காழி கோவிந்தராஜனை தான் அழைப்பார்கள். ஏன் அவர் தான் அதிகம் பாடியிருப்பார். அந்த குரல் தான் அமர்க்களமாக அமைந்துருக்கும் மேலும் நமது மனதையும் கலங்கடிக்கும். இதோ இந்த ஒலிக்கோப்பில் அவர் பாடிய பாடல்கள் தான் அதிகம் இடம் பெறுகின்றன. பாடல் மூச்சூடும் கேளூங்க நான் உத்திரவாரம் தருகிறேன். ஒலிக்கோப்பு முழுவதும் கேட்டவருக்கு கிட்டத்தட்ட ஒரு ஒரு மணி நேரம் இல்லையில்லை அந்த நாள் முழுவதும் அந்த அசரிரீ குரல் ஒலிக்கும். உங்கள் மனதும்வாயும் முணுமுணுப்பது நிச்சயம்.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஆக்கத்தை மிகவும் சிரமப்பட்டு பாடல்களையும் திரைப்பட வசணங்களையும் தேடிப்பிடித்து வழங்கிய எனது அன்பு நண்பர் திரு. ஜி.டி.ஜித்தார்த்தன் அவருக்கு நன்றி. அவரின் கடின உழைப்பு நன்றாக தெரிகிறது. தேன் கிண்ண நேயர்கள் சார்பாக எனது வாழ்த்துக்கள்.

ஆக்கத்தை உருவாக்கியவர்:

திரு.ஜி.டி.ஜித்தார்த்தன்
சவுந்தர்ராலயம்
48/1. பாலாஜி நகர்
எஸ்.ஆர்.கே.வி.அஞ்சல்
பெரியநாக்கன்பாளையம்
கோவை

863 பைத்தியகாரன் பத்தும் சொல்வான்

லக்ஷ்மி நாராயானா அவர்களின் பாடல் தெரிவுகளூடன் மனதை பலப்படுத்தும் தகவல்கள் கேட்டு மகிழுங்கள்.

1. நான் யார் நீ யார், 2. ஏன் என்ற கேள்வி, 3, கண்ணை நம்பாதே, 4. பைத்தியகாரன் பத்தும் சொல்வான் 5. நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு, 6. புத்தன், ஏசு, காந்தி பிறந்தது 7. ஒளிமயமான் எதிர்காலம் 8. நான் செத்துப் பொழச்சவண்டா 9. எங்களூக்கும் காலம் வரும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, December 25, 2008

862. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (அவ என்ன )

ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
ஒ - ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
ஓ - என்ன சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ -.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காத்துல நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

வாழ்க்க ராட்டினம் தான் டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது - தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் - நான்
பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ(3)


(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல)

(ஒண்ணுக்குள்ள ஒண்ணா)

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தனத் தானே!!

திரைப்படம் :வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: கார்த்திக், ப்ரசன்னா
இசையமைத்தவர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் :தாமரை

Wednesday, December 24, 2008

861. பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே1

பெத்தலையில் பிறந்தவரை
போற்றி துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே


சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் (சர்வத்தையும்)
இங்கே தாழ்மையுள்ள
தாய் மடியில் தலைசாய்க்கலானார் (இங்கே)

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)

சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் -இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

கோமகனும் தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)

பாடியவர் : பி.சுசீலா

860. அச்சம் என்பது மடமையடா!

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா(2)

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா (அச்சம்)
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா(2) (அச்சம்)

கனகவிசயரின் முடிதலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன் ஆஆஆஆஆ (கனகவிசயரின்)
இமயவரம்பினில் மீன் கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே ( அச்சம்)

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ (கருவினில்)
களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்)

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கிறார்.
(அச்சம்)


திரைப்படம் : மன்னாதி மன்னன்
பாடியவர்: டி. எம் .எஸ்
இசையமைத்தவர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

859. எம்.ஜி.ஆர் - காற்று வாங்க போனேன்




காற்று வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதை கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஒடை
அவள் கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

நடை பழகும் போது தென்றல்
விடை சொல்லி கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அவள் கேட்டு வாங்கி போனாள்
அந்த கன்னி என்ன ஆனாள்

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
இந்த இதயம் தாங்கவில்லை

படம் : கலங்கரை விளக்கம் (1965)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்

858. எம்.ஜி.ஆர் - நாளை நமதே எந்த நாளும் நமதே




அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

படம் : நாளை நமதே (1974)
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
பாடியவர் :

857 : இது சங்கீதாத் திருநாளோ...!

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..
கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ (இசை)

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..
உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவள் போல அழகில்லை..
பூங்காற்றில் இவள் போல சுகமில்லை..
இதுபோல சொந்தங்கள் இனியில்லை..
எப்போதும் அன்புக்கு அழிவில்லை..
இவள்தானே நம் தேவதை..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

லல லாலால்ல லலலால...(இசை)

நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்..
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்..
கண்ணில் மின்னும் ஒரு காவியம்;..
மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;..
நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..
என்றும் என்றும் இவள் ஞாபகம்..
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..
இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..
இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..
எப்போதும் தாலாட்டுவேன்..

இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ


சின்னச் சின்ன அசைவினில் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமழை கன்னம்விழ நனைந்தாளே..
கொஞ்;சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..


இது சங்கீதத் திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ

திரைப்படம் : காதலுக்கு மரியாதை
பாடியவர் : பவதாரிணி
இசை : இளையராஜா

கல்லூரித் தோழி சங்கீதா அவர்களின் பிறந்த நாளை(திசம்பர் 25) ஒட்டி
அவருக்கு இந்தப் பாடல் டெடிகேட் செய்யப் படுகிறது!

856. எம்.ஜி.ஆர் - புதிய வானம் புதிய பூமி

மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு




புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது

புதிய சூரியனை பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர்க்காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகிறது

பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையில்
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
என்ன ஜாதி என்ற பேதம் இல்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்தது என்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்

படம் : அன்பே வா (1966)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
குரல் : டி.எம். செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணத்தாசன்

855 ”பாமாலைச்சோலை"



”பாமாலைச்சோலை” என்ற வித்தியாச தலைப்புடன் உள்ள் இந்த ஒலித்தொகுப்பு
உங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சின்ன சின்ன கவிதைகளுடன் உங்களூக்கும் எனக்கும்
மிகவும் மிகவும் மிகவும் (ஹி. ஹி.. ஹி..) பிடித்த பாடல்கள். கவிதைகளை பொருத்தமான, அமைதியான குரலில் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாள். தேன் கிண்ணத்தில் தொடர்நது மக்கள் திலகம் பாடல்களை கேட்டு வருகிறீர்கள். பாடலகள் கேட்டால் மட்டும் போதாது அவரின் அருமையான பாடல்களை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறீர்கள் என்பதற்க்கு ஒரு சாம்பிள். இதோ இந்த ஒலித்தொகுப்பிலும் அவரின் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி ஒன்று காத்திருக்கிறது. என்ன வென்று நீங்கள் ஒலிக்கோப்பிற்க்குள் சென்று கேட்டால்தான் புரியும். பாடல் கேட்பதும் பதில் சொலவதும் ”உங்கள் கடமை” யில் ஒன்று.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பும் நிச்சயமாக உங்கள் நேரத்தை சாப்பிடும் உற்சாகமான, இனிமையான
ஒலித்தொகுப்பு. கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

1. இது ஒரு பொன்மாலைப் பொழுது
2. இது குழந்தைப்பாடும் தாலாட்டு
3. கண்மணியே காதல் என்பது
4. பூங்காற்று திரும்புமா
5. எங்கெங்கோ செல்லும்
6. ராஜா என்பர் மந்திரி என்பார்.

Tuesday, December 23, 2008

854 அமர்க்களமான தொடர் அந்தாதி



ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல >> சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா >> முருகா என்றதும் உருகாதா மனம் >> மனம் கனிவாக அந்த கன்னியை >> கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் >> காதல் ஜோதி அணையாதது கண்கண்ட >> கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே >> எங்கே நீயோ அங்கே >> அங்கே மாலை மயக்கம் யாருக்காக >> யாருக்காக இது யாருக்காக.

என்னன்னு புரியவில்லைதானே? “சீர் அந்தாதி, ஒரு கொடியில் பன்னிரு மலர்கள்” போன்ற முன்னமே வந்த பதிவுகளை கேட்டிருப்பீர்களே அது போன்று தான் இந்த தொடர் அந்தாதி ஒலித்தொகுப்பும். வித்தியாசமான பாடல் தெரிவுகளூடன் இந்த ஒலித்தொகுப்பு ட்ராப்டில் போட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. இன்று தான் நேரம் கிடைத்தது. ஆக்கத்தை உருவாக்கியவர் எனது நண்பர் திரு. எஸ். நாகராஜன் பொள்ளாச்சி சில பாடல்களை தவிர அதிகம் கேட்ட்கப்படாத பாடலகளாக தந்துள்ளார். ஒலிக்தொகுப்பு வர்ணனை திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா. எஸ்.நாகாராஜன் அவர்களின் அபார முயற்சிக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஆக்கத்தை உருவாக்கியவர். பாடல்கள் பெயர் மற்றும் படத்தின் பெயர்.

எஸ். நாகராஜன்
5/197, சிவசக்தி இல்லம்
பொள்ளாச்சி

1. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல - செல்வம்
2. சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா - கந்தன் கருணை
3. முருகா என்றதும் உருகாதா மனம் - அதிசய திருடன்
4. மனம் கனிவாக அந்த கன்னியை - இது சத்தியம்
5. கன்னிப் பருவம் துள்ளூதுங்க காதல் - சரசாம்பிகையே
6. காதல் ஜோதி அணையாதது கண்கண்ட - ஊரும் உறவும்
7. கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே - கர்ணன்
8. எங்கே நீயோ அங்கே - நெஞ்சிருக்கும் வரை
9. அங்கே மாலை மயக்கம் யாருக்காக - ஊட்டி வரை உறவு
10. யாருக்காக இது யாருக்காக - வசந்த மாளிகை

853. எம்.ஜி.ஆர் - பூ மழைத் தூவி




பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின்
நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கள குங்குமம் சிரிக்கின்றது

(பூ மழைத் தூவி)

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள்
ஊர் எங்கும் கொண்டாட்டமாம்
உனை கண்றோர்கள் கண்பட்டு
போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமாம்
தோழி அத்தானை பார் என்று உனை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள

(பூ மழைத் தூவி)

வெண்சங்கு கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா
என் அண்ணாவை ஒரு நாளும்
என் உள்ளம் மறவாது
என்றாடும் இதம் அல்லவா
நீ வாழ்கின்ற நாடு எல்லாம் திருநாடே
என உனை கொஞ்ச மணவாளன் தினம் பாட

(பூ மழைத் தூவி)

கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகனும்
உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்
ஆனந்த கண்ணீரே என்று ஆகனும்
ஒரு பதினாறும் தான் பெற்று நீ வாழ
அதை பார்கின்ற என் உள்ளம் தாய் ஆக

(பூ மழைத் தூவி)

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள் :
பாடியவர் :

852. 2008 திரைப்பாடல்கள் - ரவுண்ட் அப்

* ஜேம்ஸ் வசந்தன்(சுப்ரமணியபுரம்), எஸ்.எஸ்.குமரன்(பூ), செல்வகணேஷ்(வெண்ணிலா கபடி குழு) - முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பிய இசையமைப்பாளர்கள்.

சுப்ரமணியபுரம் - 'கண்கள் இரண்டால்' - 'தேநீரில் சிநேகிதம்'

'பூ' படத்தில் 'ஆவாரம் பூ' சின்மயி பாடியுள்ள அருமையான மெலடி.




'ச்சூ ச்சூ மாரி' - செம ஜாலி.


* செல்வகணேஷின் 'வெண்ணிலா கபடி குழு'வில் 'லேசா பறக்குது' 'படபடவென பறந்திட இன்று' இரண்டு இனிமையான மெலடிகள்.





* இளையராஜா இசையில் தனம், உளியின் ஓசை என இரு திரைப்படங்கள் வந்தாலும் ஏமாற்றமே. அடுத்த ஆண்டு நான் கடவுள், நந்தலாலா திரைப்படங்களில் சேர்த்து கொடுப்பார் என நம்புவோம். ('நான் கடவுள்' படம் அடுத்த வருஷமாவது வந்துடுமா? ;))


* Jaane Tu Ya Jaane Na, Jodhaa Akbar, Yuvraaj, Ghajini என இந்தியில் அடித்து ஆடிய ஏ.ஆர்.ரகுமான் சக்கரக்கட்டியில் ஏற்கனவே போட்ட பாடல்களோடு புதிதாக சில சேர்த்து கட்டிக்கொடுத்துவிட்டார். ( Slumdog Millionaire - ஆஸ்கர் தூரமில்லை)

மருதாணி - மதுஸ்ரீ பாடியதைக் கேட்டு வாலி ரூம் போட்டு அழுததாக வதந்தி ;)

* இந்த வருடம் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக ஸ்ரீகாந்த் தேவா இருக்கக்கூடும். ஒரு பாடலும் நினைவில் இல்லை.

* வாளமீனுக்குப் பிறகு சுந்தர்.சி.பாபுவின் 'தகிட தகிட தகிட தகிட தா'.

ஸ்வேதா பாடிய 'மனசுக்குள் மனசுக்குள்'.


கண்ணதாசன் காரைக்குடி
- டாப்பு.

* தசாவதாரம் - 'முகுந்தா முகுந்தா'.

* 'நாக்க முக்க' - அட்றா அட்றா

* 'பாரிஜாதம்' தரணின் லேட்டஸ்ட் 'லாடம்'. சுசித்ரா பாடியிருக்கும் ஒரு பாடலைத் தவிர மற்ற மூன்றும் பிரமாதம்.

சிறு தொடுதலிலே
- பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிசரண்


* யுவன் - யாரடி நீ மோகினி, சரோஜா, ஏகன் படங்களில் வழக்கமான யுவன். சிலம்பாட்டத்தில் யுவன் ராஜா. 'Where is the Party' செம யூத்து. இளையராஜாவின் குரலில் 'மச்சான் மச்சான்' கலக்கல். 'வச்சுக்கவா' ரொம்பவும் ரீமிக்ஸ் செய்யாததால் நன்றாகயிருக்கிறது.





* ஜி.வி.பிரகாஷ் - ஆனந்த தாண்டவம் படத்தின் 'பூவினைத் திறந்து கொண்டு' ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயா கோஷல் குரலில் இனிமையான மெலடி. 'கல்லில் ஆடும் தீவே' - பென்னி தயால்-ஸ்வேதா கலக்கல் டூயட்.




* வித்யாசாகர் இசையில் வந்த ஜெயம்கொண்டான், பிரிவோம் சந்திப்போம், மகேஷ் சந்தியா மற்றும் பலர்,அபியும் நானும் என நிறைய படங்கள் வந்தாலும் அவற்றில் சில இனிமையான பாடல்கள் இருந்தாலும் திரும்ப தேடிச் சென்று கேட்க வைக்கவில்லை.

வித்யாசாகர் இசையில் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'மழை நின்ற பின்பும் தூறல்' - துள்ளல்.





* ஏ,பி,சி என அத்தனை செண்டர்களிலும், 88 முதல் 108 வரையிலும் 'வாரணம் ஆயிரம்'-ஹாரிஸ் ஜெயராஜ். இதே வருடம் வெளியான சத்யம், தாம்தூம் பாடல்களையும் வாரணம் ஆயிரம் பாடல்களையும் ஒப்பிட்டாலே கெளதம் மேனன் - ஹாரிஸ் பிரிவின் தாக்கம் புலப்படும்.

அடியே கொல்லுதே

முன்தினம் பார்த்தேனே

ஓ சாந்தி சாந்தி

Monday, December 22, 2008

851. எம்.ஜி.ஆர். - தரை மேல் பிறக்க வைத்தான்




உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான்
பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய்
அலைந்து உயிரை கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் வீடு தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும்
தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்வு
இது தான் எங்கள் வாழ்க்கை

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியா வந்தோர் துணிவை தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
அரை ஜான் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்

படம் : படக்கோட்டி (1964)
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : வாலி
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

850 கிருஷ்ணார்ப்பனம்



இந்த மார்கழி மாதத்தில் ஒரு வித்தியாசத்திற்காக ஒரு பக்தி ஒலித்தொகுப்பு கேட்கலாம். இதோ எனது நண்பர் ஒருவர் “கிருஷ்ணார்ப்பனம்” என்ற தலைப்பில் இனிமையான இந்த ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார். இதில் கிருஷ்ணன் மேல் பாடப்பட்ட சினிமா படத்தில் இருந்தும் ஆல்பங்களில் இருந்தும் தேர்ந்தெடுத்திருப்பது. அவரின் அபார முயற்ச்சிக்கு பாராட்டப் படவேண்டிய ஒன்று. குறந்த பட்சம் ஒரு மணி நேரமாவது நமது வேலைகளூக்கு நடுவே அந்த கோபலானனை நம உதடுகள் உச்சரித்தால் அதுவே நமக்கு பேரின்பம். கடவுள் கிருபையால் இந்த பதிவு 850 ஆவது ஆக அமைந்து விட்டது. 1000-வது பதிவு க்ண்முன் நிழலாடுகிறது அந்த அதிர்ஸ்டம் யாருக்கோ?

இது ஒரு நல்ல தரமிக்க ஒலித்தொகுப்பு வழக்கம்போல் நம் அன்புக்குரிய ஆதர்ஸ அறிவிப்பாளர் “டிஜ்ஜிடல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் குரலில் அமைதியுடன் கேட்டு மகிழுங்கள். அப்படியே உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உடன் ஆக்கத்தை உருவாக்கியவருக்கு ஒரு நல்வாழ்த்து சொல்லிடுங்க.

ஆக்கத்தை உருவாக்கியவர்:

திரு. செந்தமிழ் நேசன்
சிங்காநல்லூர்
கோவை

Get this widget | Track details | eSnips Social DNA



1. கண்ணன் பிறந்தான் எங்கள்
2. கோகுலத்தில் ஒரு நாள் ராதை
3. தேவி ஸ்ரீ தேவி
4. ஆயர் பாடி மாளீகையில்
5. குருவாயுருக்கு வாருங்கள்
6. கீதை சொன்ன கண்ணன்
7. கண்ணனை நினைக்காத
8. கண்ணன் நினைத்தால்
9. காவிரிக்கரையில் கண்ணன்

Sunday, December 21, 2008

849. எம்.ஜி.ஆர் - கொடுத்தது எல்லாம் கொடுத்தான்




கொடுத்தது எல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்

மண் குடிசை வாசல் என்றால்
தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

படைத்தவன் மேல் பழியும் இல்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்து கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாழ வாட சிலர் வாட வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்தது இல்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
ஏதுவந்த போதும் பொதுவேன்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

படம் : படக்கோட்டி (1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள் : வாலி
பாடியவர் : டி.எம். செளந்தர்ராஜன்

Saturday, December 20, 2008

848. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்


<p><a href="undefined?e">undefined</a></p>

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

Friday, December 19, 2008

847. ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சல் ஆடும்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்

காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்!

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட வேண்டும்

ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்

இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

தென் பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்

கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே!

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
விரும்பிக்கேட்டவர் : சிபி
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடியவர்: உன்னிக்கிருஷ்ணன்
திரைப்படம்: பூவே உனக்காக




846. மௌனமான நேரம்


<p><a href="undefined?e">undefined</a></p>

மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

படம்: சலங்கை ஒலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

845. என் காதலே என் காதலே


&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;p&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;/a&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;/p&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;

என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மழையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா

அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
(என் காதலே)

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்
கண்களை நீ மூடி கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுவேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனிமூட்டமா
உயிர் தொழியா இல்லை எதிரியா, என்று தினமும் போராட்டமா

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

844 இரு சிகரங்களின் க்ளாசிக் பாடல்கள்



சத்யமங்கலம் ஓர் தனியார் கல்லூரியில் படிக்கும் செல்வி பூர்ணிமா அவர்களின் ஞாயிறு அன்று ஒலிப்பரப்பான ராசய்யா அவர்களின் , பாலுஜி இரு சிகரங்களின் க்ளாசிக் இடைக்கால பாடல்கள் தெரிவுகளும் அதை தொடர்ந்து வானொலி நேயர்களின் விருப்பங்களூம் இந்த ஒலித்தொகுப்பில் ஓர் வித்தியாசத்திற்காக இந்த பதிவு. செல்வி பூர்ணீமாவிற்க்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, December 17, 2008

843.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே..

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே (உன்னை நினைக்கவே)
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே (உன்னை நினைக்கவே)

லல்லால்லா லால்லா
ஜேஜேஜே ஜேஜேஜே

நான் உன்னை மறந்த செய்தி
மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்துக்கொண்டேன்
கண்மூடி சாயும் பொழுதிலும்-உன் கண்கள்
கண் முன்பு தோன்றிமறைவதேன் ஏன் ஏன் ஏன்
நீ என்னைக்கேட்டபோது காதலில்லை
நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம் (உன்னை நினைக்கவே)

என் சாலை எங்கும் எங்கும்
ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு தில்லை
காட்சி யாவும் புதைந்து போனது
என் நெஞ்சம்
உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
ஓ ஓஒ
உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து போகுதே
என் நெஞ்சே கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல (உன்னை நினைக்கவே)

பாடியவர் : ரேஷ்மி
இசை: பரத்வாஜ்
திரைப்படம் : ஜேஜே
பாடல் : வைரமுத்து



842 ஜாம்பவான்களின்>> நாடகமே உலகம்



நடிப்பினிலே இயல்பு



குரலினிலே இயல்பு

இந்த உலகில் யாருமே இயல்பாக இருப்பதில்லை அதிகபட்சம் நடித்திக்கொண்டுதான்
இருக்கிறார்கள். திரைஉலகில் சொல்லவே வேண்டியதில்லை. நடிப்பையே இயல்பாக
நடிப்பவர்கள் சிலரே அவர்களை விரல் விட்டு சொல்லிவிடமுடியும். அதில் சட்டென்று
நம் மனதில் இருவர் வருவார்கள் அவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? ஒலிக்கோப்பு
கேட்டால் தெரியும். அவர்கள் இருவரைப்பற்றி அபரிமிதமான தகவல்களை தனக்கே
உரிய பாணியில் தருகிறார் நம் ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயானா.
அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளாதா. ஒலித்தொகுப்பை
கேட்டுவிடுங்களேன். மகிழ்ச்சியாக இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


1. அம்மாடி பொண்னுக்கு தங்கமனசு
2. பொண்ணை விரும்பும்
3. நல்லவன் எனக்கு நானே
4. ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு (லாஆஆ லலாஆஆ...ஆஹா.. ஆஹா..எங்கே எந்தன் சொர்க்கம், இங்கே தேன்கிண்ணத்திலே.. சரிப்பா.. சரிப்பா..அடக்கி வாசி.. ஹி..ஹி..)
5. பொன் மகள் வந்தாள்
6. நடையா இது நடையா
7. யார் தருவார் இந்த
8. அகர முதல எழுத்தெல்லாம்
9. கேட்டுக்கோடி உருமி மேளம்
10. அடி என்னடி ராக்கம்மா
11. அம்பிகையே ஈஸ்வரியே

841. பூங்காற்று புதிதானது




பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

(பூங்காற்று புதிதானது)


வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மேகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

(பூங்காற்று புதிதானது)

நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
நதியெங்கு செல்லும் கடல்தனைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
நீ எந்தன் உயிரன்றோ

(பூங்காற்று புதிதானது)


படம்: மூன்றாம் பிறை
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Tuesday, December 16, 2008

840. நான் உன்னை பார்க்கும் நேரம்




ஆண்: நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணைப் பார்ப்பதேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால் சரியோ

பெண்: நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால் பிழையோ

ஆண்: நீ சின்ன சின்னப் புன்னகை சிந்தும் வேளை
உன் கன்னக் குழியில் நான் சிக்கிக் கொண்டேன்
உந்தன் கைவிரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமிப் பந்தையும் நான் தாண்டிச் சென்றேன்

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

ஆண்: தூரத்தில் சிணுங்கும் உன் கொலுசோசையை
அடிக்கடி கேட்க தினம் ஆசை
தூக்கத்தில் என்னை மறந்துன்பேர்
உளறிடப் பிறந்திடும் புது பாஷை

பெண்: இதயத்தில் உள்ள நான்கு அறைகளில்
நிரம்பியதே உன் பிம்பம்
நீயின்றி நகர்கின்ற நொடித் துளிகளைத்தான்
மறக்கின்றதே என்னுள்ளம்

ஆண்: இமைகளிலே மின்னும் நளினம்
உடல்தன்னை துளைத்தே செய்யும் பயணம்

பெண்: தனிமைகளை கொல்லும் நிமிடம்
இதழ்களும் இருந்தே செய்யும் நடனம்
இரவுகளோடு சிறகுகள் நீட்டிப் பறக்கின்றதே

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

ஆண்: உனக்கென எழுதிடும் காதல் கடிதங்களின்
பிழைகளையும் ரசிக்கின்றாய்
அணு அணுவாய் எந்தன் உயிரில் புகுந்து
நீ ரகசியங்கள் ருசிக்கின்றாய்

பெண்: விரல்களின் மேலுள்ள வீணை நகங்கள் கொண்டு
என் மனதை மீட்டுகின்றாய்
நமக்கென பிறந்திட்ட புதியதோர் உலகை
முதல் முறை நீ காட்டுகின்றாய்

ஆண்: விழிகளின் மேல் துள்ளும் உருவம்
ஜாடைகள் காட்டிடும் செல்ல மிருகம்

பெண்: நினைவினிலே உந்தன் உருவம்
நிஜமென நினைத்தென்னை வெட்கம் தழுவும்

ஆண்: மௌனங்கள் மீது சலனங்கள் வீசி சாய்க்கின்றதே

(நான் உன்னை பார்க்கும் நேரம்)

படம்: ரசிக்கும் சீமானே
இசை: விஜய் ஆன்டனி

Monday, December 15, 2008

839 ஒரே பழம் மூன்று சுவையில்



இந்த ஒலித்தொகுப்பை சென்ற வாரமே வழங்கப்படவேண்டியது சில அலுவல் வேலை நிமித்தம் தாமதமாயிடுச்சு. அதனாலென்ன பழங்களை நேரம் காலம் பார்த்தா சுவைக்கின்றோம். இல்லையே அதேபோல் இதோ இந்த ஒலித்தொகுப்பில் ஒரு பாடல் கேள்வியாக தருகிறார் வித்தியாசமான குரலின் சொந்தக்காரர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் அது எந்த பாடல் எந்தெந்த சுவைகளில் கேட்டுத்தான் பாருங்களேன். இந்த பதிவை பதிவதற்குள் நமது இணைய நன்பர்கள் பலபேர் தரவிறக்கம் செய்து கேட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். எப்படிங்க ஒலித்தொகுப்பு நல்லா இருந்துதுங்களா? உங்கள் உணர்வுகள் ஒரு வரியில் எழுதிடுங்களேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

838. அக்கரைச்சீமை அழகினிலே .....

அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக்கண்டேனே( அக்கரை)
புதுமையிலே மயங்குகிறேன்(2)
- அக்கரைச்

பார்க்கப் பார்க்க ஆனந்தம்
பறவை போல உல்லாசம்
வேலை இன்றி யாருமில்லை
எங்கும் சந்தோஷம்
வெறும்பேச்சு வெட்டிக்கூட்டம்
ஏதுமில்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்

(அக்கரைச்சீமை அழகினிலே)
லலலா லலலா

சிட்டுப்போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளித் துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள் உறவினர் போல
அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்


மஞ்சள் மேனிப்பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
நடைபார்த்து மயிலாடும்
மொழிகேட்டு கிளி பேசும்

கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்

சொர்க்கம்போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர் (அக்கரைச்சீமை)
லாலாலாலாலல்லாலா


பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடல் : பஞ்சு அருணாச்சலம்
திரைப்பட: பிரியா




Sunday, December 14, 2008

837.பச்சைமலைப் பூவு நீ உச்சி மலைத்தேனு

ராப்(rapp) பிறந்தநாளுக்காக இந்த பாடல். வெள்ளி மணியைப்போல சிரிக்கும் தேவதைக்கு சர்ப்ரைஸ் கிஃப்டாக இதுல நிறைய தர்ராங்க.. நிலவையே பிடிச்சித்தராங்க, சித்திரத்து சோலை முத்துமணி மாலை..வானவில்லு நூலில விண்மீன் வச்ச ட்ரெஸ் .. (உலகத்திலேயே பெரிய டிசைனர் ட்ரஸ்) வாழ்த்துக்கள் ராப்.... எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க தேன்கிண்ணம் வாழ்த்துகிறது.


பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி
சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்


காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட

மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்

பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

பூ நாத்து முகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக(பூ நாத்து)
சித்திரத்துச் சோலை முத்துமணி மாலை
மொத்தத்துல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்

(பச்ச மலைப் பூவு)
பச்ச மலைப் பூவு
நீ உச்சி மலைத் தேனு
குத்தம் குறை ஏது
நீ நந்தவனத் தேரு

திரைப்படம்: கிழக்கு வாசல்
பாடியவர்: எஸ்.பி .பி
இசை : இளையராஜா





Saturday, December 13, 2008

836. சிறு தொடுதலிலே - லாடம்



சிறு தொடுதலிலே சின்னச்சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க

இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்

எனக்கே என்னைத் தெரியாமல்
இருந்தேன் அன்பே எதற்காக
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே

நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே

ஒரு முறை கூடல் பலமுறை தேடல் நெருக்கத்திலே

ஒருமுறை காதல் இருமுறை மோதல்
பலமுறை சாதல் வாழ்க்கையிலே


அலையே இல்லா கடல் போல
இருந்தேன் அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே

அழகே இல்லா நிலம் போல
பொறுத்தேன் அன்பே உனக்காக
கொடுத்தாய் உனை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

எதுவரை காதல் அதுவரை காமம் பூமியிலே

எதுவரை நீயோ அதுவரை நானோ
இதுவரை ஆசை காதலிலே

(சிறு தொடுதலிலே)


படம்: லாடம்
இசை: தரண்
பாடல்: பழனிபாரதி
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிசரண்

Friday, December 12, 2008

835. ஒரு கூட்டு கிளியாக



ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு தோப்புக் குயிலாக பாடு, பண்பாடு
இரை தேடப் பறந்தாலும் திசை மாறித் திரிந்தாலும் கூடு, ஒரு கூடு
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள், விண்ணைத் தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

படம் : படிக்காதவன் (1985)
இசை : இளையராஜா

834வி ஆர் இன் லவ்



”வி ஆர் இன் லவ்” ஆமாங்க காதலர்கள் இருவர் அடிக்கடி சொல்லும் இந்த வாக்கியம் தான்.
காதலில் ஏற்பட்ட வெற்றியில் இன்பத்தில் புலம்பினாலோ, அதே காதலில் ஏறப்ட்ட தோல்வியின் விரக்தியில் புலம்பினாலோ. வி ஆர் இன் லவ் இருவருக்கும் கன கச்சிதமாக பொருந்தும் வார்த்தை அந்த தலைப்பிலேயே பாடல் ஒன்று கடைசியாக வருகிறது. மொழி மாற்றம் பாடலாக இருந்தாலும் கேட்க சோகத்திலும் சுகமாக இருக்கிறது. போதாதற்கு நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் டிஜ்ஜிட குரலோன் திரு. லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் காதலர்களுக்கு இடையே என்ன என்ன அவஸ்தைகள் தோன்றுகின்றது என்று புட்டு புட்டு வைக்கிறார். பாடல் தெரிவுகள் மீண்டும் மீண்டும் கேட்டாலும் ம்..ம்....ம்... ஒலித்தொகுப்பு கேட்பதற்க்கு இனிமையாகதான் இருக்கிறது. நீங்களும் கேளுங்கள்.

1. நாதஸ்வர ஓசையிலே
2. அந்த சிவகாமி-பட்டனத்தில் பூதம்-டி.எம்.எஸ்,பி.சுசீலா- கோவர்த்தனம்
3. அன்புள்ள மான் விழியே
4. தேவன் கோயிலில்
5. தூது செல்ல ஒரு தோழி-பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
6. மலரே மலரே- பி.சுசீலா, தேன் நிலவு
7. என் கேள்விகென்ன பதில்
8. ஊமை நெஞ்சில் சொந்தம் - கே.ஜே.யேசுதாஸ்
9. அவள் பறந்து போனாளே
10.- வி ஆர் இன் லவ்

Get this widget | Track details | eSnips Social DNA

833. சந்தனக் காற்றே




சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஆ ஆ நீங்காத ஆசை

(சந்தனக் காற்றே)

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் அ அ அ தெய்வீகம் அ அ அ
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்...

(சந்தனக் காற்றே)

கோபாலன் சாய்வதோ கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ பூவை மனதில்
பூங்காற்றும் அ அ அ சூடேற்றும் அ அ அ
பூங்காற்றும்... தழுவத் தழுவ... சூடேற்றும்... சரியத் சரிய
ஏகாந்தம் தான்...

(சந்தனக் காற்றே)

படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

832. உன்னிடம் மயங்குகிறேன்




உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே

(உன்னிடம் மயங்குகிறேன்)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குழலோசை குயிலோசையென்று
மொழி பேசு அழகே நீ இன்று


(உன்னிடம் மயங்குகிறேன்)


தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழி் பனியும்
கண்ணே உன் கை சேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது ராகம் எழுது


(உன்னிடம் மயங்குகிறேன்)


படம்: தேன் சிந்துதே வானம்
இசை: வி.குமார்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

Thursday, December 11, 2008

831. நல்லதோர் வீணை செய்தே

முண்டாசு கவிஞனின் பிறந்தநாளை முன்னிட்டு



நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


படம் : பாரதி (2000)
இசை : இளையராஜா

பாடியவர்கள் : இளையராஜா, மனோ

830. ஆசைய காத்துல தூது விட்டு





ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

..........ஆசையக் காத்துல..........

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

..........ஆசையக் காத்துல..........

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

..........ஆசையக் காத்துல..........

படம் : ஜானி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. சைலஜா

Wednesday, December 10, 2008

829.காக்கா காக்கா மை கொண்டா!

காக்கா காக்கா மை கொண்டா!
காடை குருவி மலர் கொண்டா!
பசுவே பசுவே பால் கொண்டா!
பச்சைக்கிளியே பழம் கொண்டா! ( காக்கா)

உத்தம ராஜா என் கண்ணு!
பத்தரை மாத்து பசும்பொன்னு!
உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க!
உடனே எல்லாம் தந்திடுங்க!
ஆஆஆஆஆ
பசுவே பசுவே பால் கொண்டா!
பச்சைகிளியே பழம் கொண்டா !(காக்கா)

கல்லைக் கையால் தொடமாட்டான்
தொல்லை ஏதும் தரமாட்டான்
சொன்னால் செய்தால் உங்களுக்கே
நல்லது என்றும் செய்திடுவான் ( கல்லைக்)
பசுவே பசுவே......


சாப்பிட உங்களைக் கூப்பிடுவான்
சமத்தாய் அவனும் நடந்திடுவான்
தோப்பில் துரவில் தூங்காமல்
சுருக்காய் ஓடி வந்திடுங்க

ஆஆஆஅ
பசுவே பசுவே ...
காக்கா காக்கா....


திரைப்படம் ; மகாதேவி
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசையமைத்தவர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலை இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

828. அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே


<p><a href="undefined?e">undefined</a></p>

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாரு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெரம் அவ பொன்னெரம் அவ சிரிக்க நெனப்பு செதரும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுரேன் கட்டுரேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

827. தனிமையிலே இனிமை காண முடியுமா





தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லித் திரிவதனால் துணை வருமா

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
இசை: ஏ.எம்.ராஜா
வரிகள்: கே.டீ.சந்தானம்


***

பாடல் வரிகள் அனுப்பிய அன்பருக்கு நன்றி. பெயர் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறோம்.

826. ஆடாத மனமும் ஆடுதே



ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்

(ஆடாத மனமும் ஆடுதே)


கோவைக் கனி போலே
இதழ் கொஞ்சும் என் வானமுதே

பாவை என் நெஞ்சில்
புதுப் பண் பாடும் ஆனழகே

இது வானோரும் காணாத ஆனந்தமே
இது வானோரும் காணாத ஆனந்தமே

ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா புது ரோஜா
அழகு ரோஜா மலர் தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
பாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே


(ஆடாத மனமும் ஆடுதே)

திரைப்படம்: களத்தூர் கண்ணம்மா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா - பீ.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கு.ம.பாலசுப்ரமணியம்


****

பாடல் வரிகள் அனுப்பிய அன்பருக்கு நன்றி. பெயர் பின்னூட்டத்தில் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

Tuesday, December 9, 2008

825. அட பொன்னான மனசே




காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை

ஆசை வச்ச பச்சக்கிளியோ வேறு ஜோடி தேடி போய் இருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ வேற தென்றலோட ஆடி இருந்தா

பச்ச புள்ள போல அழுவாதா
பாவம் பூ போல சாயாதா

பல நாளா பழகி இருப்பா அதில் பலன் ஏதும் இல்லைப்பா
பூ போல பேசிச் சிரிப்பா அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா

அட காதல்னு நினைக்காத
நீயும் கானல் நீர் ஆகாதே

சமைச்சு வச்ச மீன் குழம்ப நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப

அன்று கைய தானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்

படம் : மைதிலி என்னை காதலி (1986)
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்

824. தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு





தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத்தான்
(தென்றல்..)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்
நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்
யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்
கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே
என்ன செய்வது சொல்லடி முல்லையே
கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா
(தென்றல்..)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்
மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்
காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே
(தென்றல்..)

படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

Monday, December 8, 2008

823. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

கொஞ்சிக்கொஞ்சி................

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்(நஞ்சை)
உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பள்ளியில் சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்

சபாஷ்....

(கொஞ்சிக்கொஞ்சி)

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது( அக்கம்)
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்

சபாஷ்..

(கொஞ்சிக்கொஞ்சி)

தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்

சபாஷ்...

(கொஞ்சிக்கொஞ்சி)
திரைப்படம் : கைதி கண்ணாயிரம்
பாடியவர் : சுசீலா
பாடல் இயற்றியவர் : மருதகாசி
இசையமைத்தவர்: கே.வி மகாதேவன்

Sunday, December 7, 2008

822. முத்துக்களோ கண்கள்




முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

(முத்துக்களோ கண்கள்)


படித்த பாடம் என்ன
உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன

(முத்துக்களே பெண்கள்)

கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன
என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன
உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)


படம்: நெஞ்சிருக்கும் வரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா

821. அடங்கொப்ப மவனே




அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே
தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)

ராவானா நானூறு மில்லி
கேட்குதடா என் வயிறு சொல்லி (2)

அடங்கொப்ப அடங்கொப்ப

அடங்கொப்பமவனே கொப்பன் மவனே
தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)

பொண்டாட்டி திட்டுறா கவலை இல்ல
புள்ளைங்க தவிக்குது கவலை இல்ல

குடிய கெடுக்குது இந்த குடி
தெரிஞ்சே தான் குடிக்குறேன் இந்த புடி

மது என்னும் அரக்கன விலக்குங்க என்றாரே காந்திஜி (2)
அவர் கொள்கைய நாம மறந்துட்டோம் இந்த நாடு எங்கும் கடைய திறந்துட்டோம் (2)
அட ஊத்துடா போதல ஊத்துடா போதல ஊத்துடா போதலையே

அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே
தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)

ஏழைங்க மனசுல கவலைங்க
ஏராளம் இருக்குது பாருங்க
அதை போக்க இதை போட்டா தேவல
இது இல்லாட்டா வாழ்க்கையே தேவையில்ல

மொத்ததில் குடிசைங்க கொண்டாடும் தெய்வமே இதுதாங்க(2)

இந்த தீர்த்த வாங்கி ஊத்துறோம்
அதில் சொர்க்கத்த ஏத்தி பாக்குறோம் (2)
அட போட்டதும் ஏறுது போட்டதும் ஏறுது போட்டதுமே ஏறுதடா

அடங்கொப்ப மவனே கொப்பன் மவனே
தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)

ராவானா நானூறு மில்லி
கேட்குதடா என் வயிறு சொல்லி (2)

அடங்கொப்ப அடங்கொப்ப

அடங்கொப்பமவனே கொப்பன் மவனே
தண்டநக்கற டண்ட தண்டநக்கற (2)

*****
படம் : உறவைக் காத்த கிளி
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்
*****

Saturday, December 6, 2008

820ஸ்வாரசியமான சதிராட்டம்



தேன்கிண்ண நேயர்களே மீண்டும் ஒரு ஸ்வாரசியமான சொல்லிசை சதிராட்டம் உங்கள் செவிகளூக்காக. கிராமங்களில் மஞ்சு விரட்டி என்ற காளை பிடி வீர விளையாட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் பார்த்திருப்பீர்கள். அது போல வழுக்கு மரம் விளையாடும் உண்டு விழாக்காலங்களில் எண்ணை தடவிய ஒரு உயரமான ஒரு கம்பின் மீது ஏறு அதன் உயரத்தில் கட்டியிருக்கும் பொருளை எடுப்பார்கள். அது போல் தான் இந்த சொல்லிசை விளையாட்டு இதுக்கு கம்பிமேலே எல்லாம் ஏறவேண்டிய அவசியமில்லை. உட்கார்ந்து உங்கள் மூளைக்கு வேளை கொடுத்தால் போதும். இணைய நண்பர்களாகிய உங்கள் விலைமதிப்பற்ற வினாடிகளை வீணடிப்பதில் எனக்கும் வருத்தம் தான். ஒய்வில்லாமல்
வேளை செய்யும் நன் இசையன்பர்களூக்காக வித்தியாசமான ஒலித்தொகுப்பு.

எனது மலேசிய நண்பர் ஒருவர் சாட்டிங்கள் சொன்னது உங்கள் ஒலித்தொகுப்புகளை தரவிறக்கம் செய்து வேலைக்கு போகும் போதும் வரும் போதும் காரில் போட்டு கேட்கிறேன் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது அதே சமயம் பயமாகவும் இருந்தது. அந்த அன்பருக்கு மட்டுமல்ல வண்டி ஓட்டும் போது தயவு செய்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்
அப்படி கேட்டுதான் ஆகவேண்டுமென்றால் ஒலியின் அளவை குறைத்து கேட்க வேண்டும். ஏன் இதை சொல்கிறேன்றால் எனது நண்பர்களீன் ஒலித்தொகுப்புகள் அதிக பட்சம் யோசிக்க வேண்டியவையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன் பாட்டை கேட்டு கொண்டே போய் உங்களை சார்ந்தவர்களூக்கு கஷ்டத்தை கொடுக்காதீர்கள். சாரிங்களா? சரி விஷயத்துக்கு
வருகிறேன்.

இந்த ஒலித்தொகுப்பில் ஓர் அழகான சொல் ஒன்று எல்லா பாடல்களிலும் ஒழிந்து இருக்கிறது. இதற்கு முன் எழில் என்ற சொல்லின் ஆக்கம் போலத்தான். அந்த ஆக்கத்தை விட இதில் விரைவில் கண்டு பிடித்துவிடலாம். ஆணால் நமது அறிவிப்பாளர்
அடிக்கற கூத்து இருக்கிறதே. அடெங்கப்பா அடெங்கப்பா கொஞ்சமா நஞ்ச்மா சொல்லி மாளாது. அறிவிப்பாளர் இந்த பதிவில் ஓர் இடத்தில் ஆக்கத்தை உருவாக்கியவருடன் ஒர் ஒப்பந்தம் செய்வார் அது என்ன என்பதை நீங்களே கேட்டு தெரிந்து கொளுங்கள்
அதே போல் நான் உங்களூக்கு ஒரு வேண்டுக்கோள். இந்த பதிவில் உங்களூக்கு ஸ்வாரசியம் வேண்டுமென்றால், தயவு செய்து தரவிறக்கம் செய்த ஒலிக்கோப்பை ஒர் ஆர்வத்தில் பாஸ் ஃபார்வேர்ட் கேட்டு விடாதீர்கள் பிறகு உங்களுக்கு ஸ்வாரசியம் போய்விடும். இரவில் நாங்க காற்றலையில் கேட்கும் போது இதெல்லாம் செய்யமுடியாது அறிவிப்பாளர் அடிக்கடி சொல்வது போல் நீங்கள் பாடல்களை ரசிக்க முடியாது ஆழ்ந்து ஒவ்வொரு சொல்லக கேட்கத் தான் வேண்டும் அப்போது தான் நீங்கள் சொல்லை கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஒலிக்கோப்பில் ஒரு பாடல் போட்டியில் இருந்து தனித்து இருக்கும் ஆகையால் அந்த பாடல் போட்டிக்கு எடுத்துக்கொள்ளவேண்டாம். அதை தனியாக குறிப்பிட்டுள்ளேன்.

இப்போ முதல் சொன்ன வழுக்கு மரம் பகுதிக்கு வருகிறேன். இந்த சொல்லை கண்டுபிடிக்க எவ்ளோ நேயர்கள் விதவிதமான சொல் வருகிறது என்று அறிவிப்பாளருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்று நீங்களே கேளூங்கள் ஒரு நேயர் பல வார்த்தைகள் வருகின்றன என்கிறார். ஒரே கலாட்ட தான் போங்கள். அதிகம் எழுதி உங்களை வெறுப்பேத்தவில்லை.. ப்ளேயரை சீக்கிரம் அமுக்குங்கள்..

நீங்கள் ஒரு பாட்டிலோ அல்லது இரண்டாவது பாட்டிலோ கண்டுபிடித்து விட்டால் நீங்கள் தான் தேன்கிண்ணத்தின் ”அசகாயசூர தேனீ” கேட்டு விட்டு அப்படியே ஆக்கத்தை உருவாக்கிய எனது நண்பர் சையத் ரசூல் அவர்களூக்கு அவரின் அபாரமான முயற்சிக்கு
ஒரு வாழ்த்து சொல்லிடுங்க சாரேஏஏஏஏ...

Get this widget | Track details | eSnips Social DNA


ஆக்கத்தை உருவாக்கியவர்

திரு. சையத் ரசூல்
ஹவுசிங் யூனிட் தெற்கு
செல்வபுரம்
கோவை

1. நீயேதான் எனக்கு - குடியிருந்த கோயில்
2. சிரிக்கின்றோம் - நல்லவன் வாழ்வான்
3. சந்திரோதயம் ஒரு பெண்னானது - சந்திரோதயம்,

4 கண்ணீலே நீர் எதற்க்கு - அவள் ஒரு தொடர்கதை.

5. பாட்டுக்கு பாட்டு எடுத்து - படகோட்டி
6. புதியவாணம் - புதியபூமி
7. வாங்கய்யா வாத்யாரய்யா - நம்நாடு
8. பிறந்த இடம் தேடி- நான் ஆணையிட்டால்
9. தனிமையிலே இனிமை - ஆடிப்பெருக்கு
10. ஓ மானிட ஜாதியே - வசந்த மாளீகை

Last 25 songs posted in Thenkinnam