Wednesday, December 10, 2008

828. அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே


<p><a href="undefined?e">undefined</a></p>

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாரு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெரம் அவ பொன்னெரம் அவ சிரிக்க நெனப்பு செதரும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுரேன் கட்டுரேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ
(அரச்ச)

படம்: சின்ன தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

1 Comment:

Anonymous said...

//மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெரம் அவ பொன்னெரம் அவ சிரிக்க நெனப்பு செதரும்//

பாலுஜி குரலில் கலக்கல் வரிகள்.

Last 25 songs posted in Thenkinnam