பெத்தலையில் பிறந்தவரை
போற்றி துதி மனமே - இன்னும்
பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே
சர்வத்தையும் படைத்தாண்ட
சர்வ வல்லவர் (சர்வத்தையும்)
இங்கே தாழ்மையுள்ள
தாய் மடியில் தலைசாய்க்கலானார் (இங்கே)
குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் -இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்
கோமகனும் தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)
பாடியவர் : பி.சுசீலா
Wednesday, December 24, 2008
861. பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே1
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
உயர்நிலைப் பள்ளிப் பருவத்து விடுதி வாழ்க்கையில் எம் கிறித்துவ நண்பர் இந்தப் பாடலையும் இது போன்ற பல பாடல்களையும் பிரார்த்தனைகளில் பாடியதால் அப்போது மனப்பாடமானது. இப்போதும் ஒரு தடவை பாடிப் பார்த்தேன். அட சரியாக நினைவிலிருக்கிறது!
கிறீஸ்மஸ் பாடலா
டைம்மிங்........
சுல்தான் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.. நானும் இந்தப்பாடலை பள்ளிப்பருவத்தில் பாடி இருக்கிறேன்.. இப்போது தேடு தேடு என்று தேடினேன்.. பெத்தலகேம் பிறந்தவரே என்று தேடி சலித்த நேரத்தில் இந்த பாடல் கைக்கு கிட்டியது. உண்மையில் இதற்கு இன்னும் இரண்டு வரிகள் இருக்கிறது . ஆனால் பாடலில் இல்லை..
கவின் நன்றிங்க.. ஆமா கிறிஸ்துமஸுக்காக போடப்பட்ட பாடல் தான்.. பெத்தலகேமில் பிறந்துவிட்டாரே ஏசு.. :)
சுரேஷ் நன்றிங்க.. பாடலைத்தேடி தேடி நேரம் போனதுவும் நல்லதாக போய்விட்டது.. இரவு தானே ஏசு பிறந்தார் ..டைமிங்க் தான். :))
Post a Comment