Wednesday, December 24, 2008

856. எம்.ஜி.ஆர் - புதிய வானம் புதிய பூமி

மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு




புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது

புதிய சூரியனை பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர்க்காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகிறது

பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையில்
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
என்ன ஜாதி என்ற பேதம் இல்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்தது என்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்

படம் : அன்பே வா (1966)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்
குரல் : டி.எம். செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணத்தாசன்

2 Comments:

Anonymous said...

நாகை சிவா,

காற்று வாங்க போனேன் பாடல் ஒலித்தொகுப்பு எனக்கு covairavee@gmail.com அனுப்பிவைக்கவும்.

Anonymous said...

ஒலிக்கோப்பிற்கு நன்றி சிவா.

Last 25 songs posted in Thenkinnam