என் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் ராகம் இது
அன்பில் வாழும் உள்ளம் இது
அணையே இல்லா வெள்ளம் இது
இதயத்தில் ரகசியம் இருக்கின்றது
அது இதழில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது
அதில் உறவு என்று அவளை நினைக்கின்றது
பேதமை நிறைந்தது என் வாழ்வு
அதில் தேவையோ மறைந்தது சில கோடு
பித்து என்று சிரிப்பது உள் நினைவு
அதன் வித்து ஒன்று போட்டது அவள் உறவு
உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு
அதன் உருவாய் எரிவது என் மனது
ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்
உயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்
*****
படம் : ஒரு தலை ராகம் (1976)
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : TM செளந்தர்ராஜன்
*****
Tuesday, December 2, 2008
810. என் கதை முடியும் நேரம்
பதிந்தவர் நாகை சிவா @ 3:40 PM
வகை 1970's, T ராஜேந்தர், TM சௌந்தர்ராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
1981?.நிச்சயம் 1976 இல்லை.
Nice blog sir. Keep rocking!!!
டி.எம்.எஸ் அண்ணாவின் இனிமையான சோகப்பாடல் பதிவிற்க்கு நன்றி.
பின்னூட்டம் வழங்கிய கீதா மேடத்திற்க்கும் நன்றி.
Post a Comment