Friday, December 5, 2008

816. இளைய நிலா பொழிகிறதே




இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

(இளைய நிலா பொழிகிறதே)


வரும் வழியில் பனி மழையில்
பருவநிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

(இளைய நிலா பொழிகிறதே)


முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

(இளைய நிலா பொழிகிறதே)


படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

3 Comments:

Anonymous said...

//முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ//

இந்த வரிகளில் பாலுஜி பாடும் போது அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு தம்ம்மாத்துண்டு குட்டிச் சிரிப்பு சிரிப்பார் கேளுங்கள். மனசை கொள்ளை கொண்டு போகும். பாலுஜி பாடும் ஸ்டைல் பார்க்கவே அடிக்கடி மைக் மோகன் ரிக்கார்டிங் தியேட்டருக்கு வருவாராம் அதில் இந்த பாடலுக் ஒன்று. பதிவிற்க்கு நன்றி கப்பி சார்.

நாகை சிவா said...

அருமையான பாடல் :)

கப்பி | Kappi said...

//அவருக்கே உரிய ஸ்டைலில் ஒரு தம்ம்மாத்துண்டு குட்டிச் சிரிப்பு சிரிப்பார் கேளுங்கள்//

ரவி,

அதே அதே!! அந்த சிரிப்புல மொத்த பாட்டும் தூக்கிடும் :)


சிவா

ஆமா ஆமா ;)

Last 25 songs posted in Thenkinnam