* ஜேம்ஸ் வசந்தன்(சுப்ரமணியபுரம்), எஸ்.எஸ்.குமரன்(பூ), செல்வகணேஷ்(வெண்ணிலா கபடி குழு) - முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பிய இசையமைப்பாளர்கள்.
சுப்ரமணியபுரம் - 'கண்கள் இரண்டால்' - 'தேநீரில் சிநேகிதம்'
'பூ' படத்தில் 'ஆவாரம் பூ' சின்மயி பாடியுள்ள அருமையான மெலடி.
'ச்சூ ச்சூ மாரி' - செம ஜாலி.
* செல்வகணேஷின் 'வெண்ணிலா கபடி குழு'வில் 'லேசா பறக்குது' 'படபடவென பறந்திட இன்று' இரண்டு இனிமையான மெலடிகள்.
* இளையராஜா இசையில் தனம், உளியின் ஓசை என இரு திரைப்படங்கள் வந்தாலும் ஏமாற்றமே. அடுத்த ஆண்டு நான் கடவுள், நந்தலாலா திரைப்படங்களில் சேர்த்து கொடுப்பார் என நம்புவோம். ('நான் கடவுள்' படம் அடுத்த வருஷமாவது வந்துடுமா? ;))
* Jaane Tu Ya Jaane Na, Jodhaa Akbar, Yuvraaj, Ghajini என இந்தியில் அடித்து ஆடிய ஏ.ஆர்.ரகுமான் சக்கரக்கட்டியில் ஏற்கனவே போட்ட பாடல்களோடு புதிதாக சில சேர்த்து கட்டிக்கொடுத்துவிட்டார். ( Slumdog Millionaire - ஆஸ்கர் தூரமில்லை)
மருதாணி - மதுஸ்ரீ பாடியதைக் கேட்டு வாலி ரூம் போட்டு அழுததாக வதந்தி ;)
* இந்த வருடம் அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவராக ஸ்ரீகாந்த் தேவா இருக்கக்கூடும். ஒரு பாடலும் நினைவில் இல்லை.
* வாளமீனுக்குப் பிறகு சுந்தர்.சி.பாபுவின் 'தகிட தகிட தகிட தகிட தா'.
ஸ்வேதா பாடிய 'மனசுக்குள் மனசுக்குள்'.
கண்ணதாசன் காரைக்குடி - டாப்பு.
* தசாவதாரம் - 'முகுந்தா முகுந்தா'.
* 'நாக்க முக்க' - அட்றா அட்றா
* 'பாரிஜாதம்' தரணின் லேட்டஸ்ட் 'லாடம்'. சுசித்ரா பாடியிருக்கும் ஒரு பாடலைத் தவிர மற்ற மூன்றும் பிரமாதம்.
சிறு தொடுதலிலே - பாம்பே ஜெயஸ்ரீ, ஹரிசரண்
* யுவன் - யாரடி நீ மோகினி, சரோஜா, ஏகன் படங்களில் வழக்கமான யுவன். சிலம்பாட்டத்தில் யுவன் ராஜா. 'Where is the Party' செம யூத்து. இளையராஜாவின் குரலில் 'மச்சான் மச்சான்' கலக்கல். 'வச்சுக்கவா' ரொம்பவும் ரீமிக்ஸ் செய்யாததால் நன்றாகயிருக்கிறது.
* ஜி.வி.பிரகாஷ் - ஆனந்த தாண்டவம் படத்தின் 'பூவினைத் திறந்து கொண்டு' ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயா கோஷல் குரலில் இனிமையான மெலடி. 'கல்லில் ஆடும் தீவே' - பென்னி தயால்-ஸ்வேதா கலக்கல் டூயட்.
* வித்யாசாகர் இசையில் வந்த ஜெயம்கொண்டான், பிரிவோம் சந்திப்போம், மகேஷ் சந்தியா மற்றும் பலர்,அபியும் நானும் என நிறைய படங்கள் வந்தாலும் அவற்றில் சில இனிமையான பாடல்கள் இருந்தாலும் திரும்ப தேடிச் சென்று கேட்க வைக்கவில்லை.
வித்யாசாகர் இசையில் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'மழை நின்ற பின்பும் தூறல்' - துள்ளல்.
* ஏ,பி,சி என அத்தனை செண்டர்களிலும், 88 முதல் 108 வரையிலும் 'வாரணம் ஆயிரம்'-ஹாரிஸ் ஜெயராஜ். இதே வருடம் வெளியான சத்யம், தாம்தூம் பாடல்களையும் வாரணம் ஆயிரம் பாடல்களையும் ஒப்பிட்டாலே கெளதம் மேனன் - ஹாரிஸ் பிரிவின் தாக்கம் புலப்படும்.
அடியே கொல்லுதே
முன்தினம் பார்த்தேனே
ஓ சாந்தி சாந்தி
Tuesday, December 23, 2008
852. 2008 திரைப்பாடல்கள் - ரவுண்ட் அப்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
2008 ரவுண்ட் அப் நல்லாஇருக்கு. இந்த 2008 ல் நல்ல புதிய மெலோடி பாடல்கள் அதிகம் தந்துள்ளார்கள் நமது இசையமைப்பாளர்கள். வரும் 2009 ஆண்டும் இதை நாம் மகிழ்ச்சியுடன் எதிர்பார்ப்போம். பதிவிற்க்கு நன்றி.
மக்கா..
சூப்பரு.. கலக்கலு.. பிச்சுட்டீங்க.. பிரமாதம்..
:-)
நல்லா இருக்கு. புது இசையமைப்பாளர்கள் புதுசா ஏதோ செய்யும்போது பழையவங்க சரக்கு தீர்ந்துட்ட மாதிரி இசையமைக்கீறாங்க..
மொத்ததுல 2006, 2007 அளவுக்கு இந்த வருடம் இல்ல..
2009-இல் பல கலக்கலான இசையும் பாடலும் வரும் என்று எதிப்பார்போமாக. :-)
மைப்ரண்ட்..
//பழையவங்க சரக்கு தீர்ந்துட்ட மாதிரி இசையமைக்கீறாங்க..//
அந்த காலம் சமுத்திரம்ங்க அது என்றுமே தீராது ஊத்து தண்ணீர் மாதிரி ஊத்திக்கிட்டே இருக்கும். வாரேன் இன்னும் நிறைய ஒலிக்கோப்புகளோட வாரேன்..
//மொத்ததுல 2006, 2007 அளவுக்கு இந்த வருடம் இல்ல..//
இது கரெட்டூ...
//2009-இல் பல கலக்கலான இசையும் பாடலும் வரும் என்று எதிப்பார்போமாக. :-)//
சந்தேகமே வேண்டாம்.. நிறைய எதிர்பார்க்கலாம்.
செமையான ரவுண்ட் அப் கப்பி!
//மருதாணி - மதுஸ்ரீ பாடியதைக் கேட்டு வாலி ரூம் போட்டு அழுததாக வதந்தி ;)//
:)))
//கண்ணதாசன் காரைக்குடி - டாப்பு.//
இந்த பாட்டு இன்னும் தேன்கிண்ணத்துல வரலையா? எ.கொ.ச.இ
சிலம்பாட்டம் பாட்டு என்னக்கும் பிடிச்சு இருக்கு. வில்லு பாட்டு எல்லாம் கேட்ட மாதிரியே இருக்கு :(
Post a Comment