மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அலையோசை எந்நாளும் ஓயாது
மருதாணி விழியில் ஏன்
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அருந்திட மாட்டான்
சுடும் நீரும் சுடும் சோறும்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி
உணரவில்லை இன்னொரு பாதி
(மருதாணி விழியில் ஏன்)
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்ப்பால் போலே
எந்நாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆகமொத்தம் அவசரக் கோலம்
அவளுக்கிது காட்டிடும் காலம்
(மருதாணி விழியில் ஏன்)
படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வாலி
பாடியவர்: மதுஸ்ரீ
Saturday, July 26, 2008
621. மருதாணி விழியில் ஏன் - சக்கரக்கட்டி
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
எப்படி இதை படமாக்கி இருக்கிறார்கள்னு பாக்கணும் :):):)
//எப்படி இதை படமாக்கி இருக்கிறார்கள்னு பாக்கணும் :):):)//
ஆணின் வலிகளை பெண் பாடுவது போல சொல்லியிருக்காங்க. மொக்கையாகத்தான் இருக்கும் என்பது என் முன் முடிவு.
//
அடிபோடி தீபாளி
//
தீபாலி ன்னு நினைக்கிறேன். அது கதாநாயகி பேர இருக்கலாம்.
//
அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என அவன் அறிந்திட மாட்டான்
//
அருந்திட மாட்டான். "பெரியம்மா பொண்னு"ன்னு பாடின உதித் நாரயணன் வகையறாவில் மதுஸ்ரீ யைச் சேர்த்துடலாமா? இல்லை, நீங்க கரெக்ட் பண்ணறீங்களா????
:-D
//பாலையும் கல்லாய் அவள் பார்க்கிறாள்//
கள்ளாய் அவள் பார்க்கிறாள்.
ஆகமொத்தம் அவசரக் கோலம் :-D
rapp
நம்மாளுங்க கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதீங்க :))
உதயகுமார்
மாத்திட்டேன் அண்ணாச்சி!
மதுஸ்ரீ தமிழைக் கடிச்சு துப்பிட்டாங்க!! வாலி ரொம்ப பாவம்!! கேட்டு எழுதறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு :))
ஓ இது தமிழ் பாட்டா?நான் கூட ஏதோ தெலுங்கு பாட்டுன்னு தப்பா நினைச்சுட்டேன் :D
என்னமா அழகிய தமிழில் பாடுறாங்க..அப்படியே தேன் மாதிரி இருக்கு :D
Post a Comment