மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சன்யாஸி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
(மாயா..)
பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல நீ
ஒட்டி ஒட்டாமலிரு
வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் செய்தி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி
உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைக்கடல் மேல் என்ன துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
(மாயா..)
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் பாடி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உண்ணோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
(காற்றே போ..)
(பட்டும் படாமலே...)
(சந்தோஷி..)
படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்
வரிகள்: வாலி
Thursday, July 24, 2008
602. மாயா மாயா
பதிந்தவர் MyFriend @ 10:00 AM
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், சுஜாதா, வாலி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment