தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு
சொடக்கு சொடக்கு என தடுக்கி தடுக்கி விழ
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு
மலரோ நனையுது
மனமோ குளிருது
உலகோ கரையுது
சுகமோ பெருகுது
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட
தகிட தகிச தம்
என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச கொஞ்ச வா மழையே
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச கெஞ்ச தா மழையே
இன்னும் கிட்ட கிட்ட கிட்ட கிட்ட வா மழையே
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு போ மழையே
நீ தோளில் அல்லவா தொடும் வேளையில
நீ காதல் கொண்டு வா துளி தூரையில
என்னை கொஞ்ச கொஞ்ச
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச
(என்னை கொஞ்ச..)
தோளை தொட்டு தூரல் மொட்டு சின்ன சின்ன ஆசை சொல்லுதே
தேகம் எங்கும் ஈரம் சொட்ட வேட்கம் வந்து ஊஞலிட்டதே
தத்தி தை தை தை வித்தை செய் செய் செய்
முத்தம் வை வை வை முகிலே
அள்ளும் கை கை கை கை அன்பை நெய் நெய்
என்னை மொய் மொய் மொய் தமிழே
அழகிய துளி
அதிசய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ...
(என்னை கொஞ்ச..)
வாசல் வந்து வாரித் தந்து வள்ளல் என்று பாடிச் செல்ல வா
மூடும் கண்ணை மோதும் உன்னை என்று ஏந்திக்கொல்லவா
என்னை நீ மீட்ட உன்னை நான் தூற்ற செல்லம் ஆவாயா துளியே
வெள்ளை தீ போன்ற வெட்க பூ போல என்னை சூழ்ந்தாயோ கிளியே
அழகிய துளி
அதிய துளி
தொட தொட பரவசமே
ஆ.. ஆ..
(என்னை கொஞ்ச..)
படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: யுகபாரதி
Thursday, July 24, 2008
605. தடக்கு தடக்கு என
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment