நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)
கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)
படம்: காதல் கொண்டேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
Friday, July 25, 2008
609. நெஞ்சோடு கலந்திடு உறவாலே
பதிந்தவர் MyFriend @ 2:28 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment