அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்குதே
அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முழிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வா
கோடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வா
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
அட வாசல் தெளிக்கும் ஒலியில்
புது வாழ்வின் தொடக்கம் இருக்கு
(அட கொண்டை..)
கன்னுக்குட்டி முழிச்சு
மணிமுட்டு மொழியில்
மலடிக்கெல்லாம் பால் ஊரும்
குன்றுகளில் இருந்து
கோவில் மணி ஒலித்தால்
காற்று வழி தேன் ஊரும்
அந்த ஆற்றில் எழும் பாட்டில்
ஒலி கரையின் உரிமை
வயல்களில் எழும் பாட்டில்
ஒலி நாற்றின் உரிமை
உந்தன் இதழ் ஆடும் சிரிப்போசை
என்றென்றும் என் உரிமை
(அட கொண்டை..)
இது வரை கேட்ட
இசைகளில் எல்லாம்
மிக இனிது தாலாட்டு
மறுப்படி என்னை
கருவரை தாங்கி
மாதாவே தாலாட்டு
இந்த பிறவி
எந்தன் மகனாய்
வந்து பிறந்தாய் மகனே
மறு பிறவி
உந்தன் மகளாய்
வந்து பிறப்பேன் மகனே
தாய் அண்ணன் இருவரையும்
இயற்கையாய் பெறுவேனே
அட கொண்டை சேவல் அடங்க
இளம் கூட்டு குருவி முடங்க
அட சுட்டு ஒலிக்கும் சத்தம் ஓயட்டும்
என் கானம் கேட்டு கண்கள் சாயட்டும்
நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்
நம்ம ஊரும் கொஞ்சம் உறங்கும்
அந்த ஆறும் மெல்ல உறங்கும்
பல விண்மீண் காவல் இருக்க
அந்த வெண்ணிலாவும் உறங்க..
படம்: அடைக்கலம்
இசை: சபேஷ் முரளி
பாடியவர்கள்: சுஜாதா, மது பாலகிருஷ்ணன்
0 Comments:
Post a Comment