Tuesday, July 22, 2008

586. கல்லூரி மலரே மலரே



கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா?
வெற்றியெனும் ஏணியின் படிகள் தோல்விகள் தானம்மா.
நீ வந்து துணையாய் நின்றால் சோகங்கள் தீண்டுமா?
வாழ்வோடு ஒவ்வொரு நாளும் ஓர் பாடம் தானம்மா..
சிறகுள்ள பறவைக்கெல்லாம் வானம் சேரும்மா..
ஓஓஓஓ...
(கல்லூரி மலரே..)

ஜெயித்தது நாங்களடி..
தோற்றது நீங்களடி.
பாறைகள் மேலே முட்ட நினைத்த
முட்டைகள் தவிடுபடி..
வெற்றிகளெல்லாமே நிரந்தரமில்லையடி..
ஐஸ்க்ரீம் தலையில் ச்செரிப்பழம் இருப்பது
அரைநொடி வாழ்க்கையடி..
முயலுக்கு ஊசிப்போட்டு தூங்க வைத்து
தேர்தலில் ஆமைகள் ஜெயித்ததடி..
முயலுக்கு மயக்கங்கள் தெளிந்துவிட்டால்
ஆமையின் பாடுகள் ஆபத்தடி..
எங்களுக்கு வெற்றியுண்டு..
ஈக்களுக்கு சிறகுண்டு..
வென்றது யார் இன்று?
ஓஓஓஓஓ...
(கல்லூரி மலரே..)

இயற்கையில் கலந்துவிடு..
இதயத்தை இழந்துவிடு..
வண்ணத்துப்பூச்சியின் சிறகில் ஏறி
வனங்களில் பயணப்படு..
கணிப்பொறி நிறுத்திவிடு..
கணக்குகள் மறந்துவிடு..
சூரியன் ஒளியில் நூலென்று எடுத்து
பனித்துளி கோர்த்துவிடு..
முத்த்தமிட்டு முத்தமிட்டு கோடைகலிலே
முத்த்க்களை முத்துக்களை எடுத்துவிடு..
வாசனை இல்லாத இலைகளுக்கு
உன் ஸ்வாசத்தில் வாசனை கொடுத்துவிடு
வானவில்லை கொண்டு வந்து
பூமியிலே நட்டு வைத்து
வாழ்வில் நிறமூட்டு..
ஓஓஓஓஓ....

கல்லூரி மலரே மலரே கைவீசி ஆடம்மா..
காற்றோடு சிறகுகளிட்டு கச்சேரி பாடம்மா..
சாலை ஒரு வாசகசாலை வாசித்து பாரம்மா..
ஒவ்வொரு பூவும் கானம் யோசித்து பாரம்மா..
ஆனந்தம் வெளியில் இல்லை நம்மில் தானம்மா..
ஓஓஓஓஓ.....


படம்: சினேகிதியே
பாடியவர்கள்: சித்ரா, சுஜாதா, சங்கீதா சஜித்
இசை: வித்யாசாகர்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam