சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டுன்னு சொல்லு
சேரப் பாண்டிய சூரன் இவனோ
சொல்லு சொல்லு சட்டுன்னு சொல்லு
(சூரியனோ )
பாரடி பாரடி யாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ
பல்லேலக்கா பல்லேலக்கா சேலத்துக்கா மதுரைக்கா
மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏ பல்லேலக்கா பல்லேலக்கா
ஒட்டு மொத்த மக்களுக்கா
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா
காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா?
தாவணிப் பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா?
நம்ம களத்துமேடு கம்மாக்கரை கரிசக்காடு
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி
படுப்படு படுவென போர்த்திய புல்வெளி
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி
சுடச்சுடச் சுடச்சுட கிடைக்கிற இட்லி
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி
கடகட கடவென கடக்கிற காவிரி
விறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை
முறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய்
(சூரியனோ சந்திரனோ)
ஏலேலே கிராமத்துக் குடிசையில கொஞ்ச காலம் தங்கிப் பாருலே
கூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப் பாருலே
கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து
கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக்கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!
ஆலமரத்துக்கு ஜடைகள் பின்னித்தான் பூக்கள் வைக்கலாமே
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமே
( ஏ பல்லேலக்கா )
ஏலேலே அஞ்சறைப் பெட்டியிலே ஆத்தாவோட ருசியிருக்கும்
அம்மியில் அரைச்சு ஆக்கி வெச்ச நாட்டுக்கோழி பட்டைக் கெளப்பும்
ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்
மண்ணு எங்கும் வீசும்
பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்
பங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற
அன்பு இங்கு வாழும்
( ஏ பல்லேலக்கா )
படம்: சிவாஜி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரைஹானா, பென்னி
1 Comment:
எனக்கு கைக்குத்தரிசிச் சோறு பிடிப்பதுபோல் இந்தப் பாடலும் பிடிக்கும். கவிஞர் அனுபவித்து எழுதியுள்ளார்.இசை குரல் எல்லாம் ஒருங்கே இணைந்த பாடல்
Post a Comment