இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே (இது போர்க்களமா)
தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா
தெரிந்தப் பக்கம் தேவதையாக
தெரியாப் பக்கம் பேய் பேயா
நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்
என்னைத் தின்றாய் பிழையில்லையா
வேலைவெட்டி இல்லாப் பெண்ணே
வீட்டில் உனக்கு உணவில்லையா
இருவிழி உரசிட ரகசியம் பேசிட
இடிமழை மின்னல் ஆரம்பம்
பாதம் கேசம் நாபிக்கமலம்
பற்றிக்கொண்டதும் பேரின்பம்
தகதகவென எரிவது தீயா
சுடச்சுடவெனத் தொடுவது நீயா
தொடுதொடுவெனச் சொல்லடி மாயா
கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா
நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே
நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட
இன்னும் என்ன செய்வாயோ
செப்படிவித்தை செய்யும் பெண்ணே
சீக்கிரம் என்னைக் கொல்வாயோ
எந்தக் கயிறு உந்தன் நினைவை
இறுக்கிப் பிடித்து கட்டுமடி
என்னை எரித்தால் எலும்புக்கூடும்
உன்பேர் சொல்லி அடங்குமடி
படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா
திரைப்படம் : 7/G ரெயின்போ காலனி
இசையமைத்தவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா
Tuesday, July 29, 2008
627.இது போர்க்களமா இல்லை தீக்குளமா
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 11:28 AM
வகை நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ராகவேந்திரா
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா தடதடவென அதிரவைப்பாயா//
என நாயகனின் இடியிடிக்கும் மனநிலையை அதிரடியாக எழுதியிருப்பார் கவிஞர். யுவனின் இசையும் அதிரடி அசத்தலாக இருக்கும்.
மேடம் உண்மையச் சொல்லுங்க!பாட்டின் வரிகளைப் பாட்டுப்புத்தகத்திலிருந்துதானே எடுத்துப்போடுறீங்க?ஏன் கேட்கிறேன்னா எனக்கெல்லாம் ஒரு பாட்டுக்கூட முழுசா புரியறதில்ல.இசை உபகரணங்களின் கட முடா சத்தங்களில் மகுடிப்பாம்பு மாதிரி மயங்குகிறேனே தவிர வார்த்தைகளும் உச்சரிப்புக்களும் காதுக்குள் ரீங்காரமிடுவதில்லை.உங்க பதிவில் வார்த்தைகளைப் படிக்கும்போது எத்தனை வார்த்தை ஜாலங்கள்?அத்தனையும் இசையின் ஓங்காரத்தில் காணாமல்ப் போய்விடுகின்றன.
கலக்கல் பாட்டு, நன்றி
ராமலக்ஷ்மி இந்த பாட்டில் எல்லாமே ஒரு வேகம் தான் ...
ராஜநடராஜன் சில பாடல்களை உத்துக்கேட்டா புரியுதுங்க.. இன்னும் நீங்க சொல்றமாதிரி பாட்டுகளும் இருக்கத்தான் செய்யுது.. புரியாம ...
கானா நன்றி.
Post a Comment