நல்லவன் கையில் நாணயமிருந்தால்
நாலுபேருக்கு சாதகம் - அது
பொல்லாதவனின் பையிலிருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம் (2) (நல்லவன் கையில்)
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இருந்தும் இறவாதிருக்கின்றான் (இருப்பவன்)
பணத்திமிர் கொண்ட மனிதன்
நிமிர்ந்திருந்தாலும் நடைபிணமாக நடக்கின்றான் (நல்லவன்)
லட்சங்கள் முன்னே லட்சியமெல்லாம்
எச்சிலைபோல பறக்குமடா (2)
அச்சடித்திருக்கும் காகிதப்பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா (நல்லவன்கையில்)
ஓடும் உருளும் ஓடும் உருளும்
உலகம் தன்னில் தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
அதில் மயக்கமில்லாமல்
அடக்கமிருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் (2)
|
நன்றி. தமிழன் (யுனைடட் ஸ்டேஸ்)
விரும்பிக்கேட்டவர் : neel mani
பாடலைப்பாடியவர்: CS ஜெயராமன்
திரைப்படம். : யார் ஜம்புலிங்கம்.
வருடம் :1972
இசை : டி. ஆர். பாப்பா
2 Comments:
நல்ல அழகிய பாடல்களை இடுகை செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். கண்ணதாசனுடைய அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்நிலவே பாடலைப் பதிவேற்ற முடியுமா?
http://thenkinnam.blogspot.com/2008/02/235.html ஏற்கனவே இந்தபாடல் இங்கே வந்து விட்டது அகரம் அமுதா..மேலே உள்ள லிங்கில் இருக்கிறது .. கேட்டு ரசியுங்கள்.கூடவே பாடி ரசியுங்கள்.
Post a Comment