நன்றி : http://iniyavaikal.blogspot.com/2008/05/10.htmlஅத்தான் நீங்கள் கொலைகாரரா
கொற்றவனைக் கொன்றீர்களா
கூறுங்கள் அத்தான் கூறுங்கள் !
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த இன்பத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்
இனி எந்தக் கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
என்னடி என் ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது ! மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேஅத்தான் அத்தான்
உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்
என்மீது உண்மையாக அன்பிருந்தால்
அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அத்தான்
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணித்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேஅத்தான் உண்மையைக் கூற முடியாதபடி
அவ்வளவு பெரிய தவறு என்ன செய்து விட்டீர்கள்
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே...
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது ... மனிதன் ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
அத்தான் ! அத்தான் என்ன என்ன அத்தான்
இது என்ன ?
உங் உங்கள் கண்கள் எங்கே அத்தான்
உங்கள் கண்கள் எங்கே அத்தான் ?
அத்தான் ...
இளவரசி ! நான் திரும்பும்வரை என் கணவருக்கு
எந்தவித ஆபத்தும் நேராது என்று வாக்களித்தீர்களே
எங்கே என் கணவரின் கண்கள்
அவர் கண்களைப் பறித்தது யார் ?
அத்தான் அத்தான் அத்தான்
நீங்களாவது சொல்லுங்கள் அத்தானுங்கள் கண்களைப் பறித்தது யார் ?
சொல்லுங்கள்
நீதி கேட்கிறேன் . கொடுமையை தீர்க்கிறேன் !
கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டான்ண்டி
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டான்ண்டி
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டிகருணையே வடிவமான தெய்வமா உங்கள் கண்களைப் பறித்தது ?
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி !
நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம்
மன்னிக்க கூடாதடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
அத்தான் ...அத்தான் ...அத்தான் !
*******
படம் : தங்கப் பதுமை
நடித்தவர்கள் : சிவாஜி, பத்மினி
பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்,பி.லீலா
Friday, July 11, 2008
552 - ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
பதிந்தவர் Iyappan Krishnan @ 2:30 PM
வகை CS ஜெயராமன், MS விஸ்வநாதன், P லீலா
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ஆங்ங்.. இப்பத் தான் இன்னொரு பாட்டு நினைவுக்கு வருது. என்னப்பனல்லவா, எந்தாயுமல்லவா
பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா பாட்டு தர முடியுமா? படம் நந்தனார்னு நினைவு.
https://www.youtube.com/edit?video_id=gxHJHXrqLOA&video_referrer=watch
Post a Comment