குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது (2)
(எம்.ஆர்.ராதா)
ஆம் ஆம்..
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் (2)
அரும்பிட முடியாது
(எம்.ஆர்.ராதா)
முடியாது. உண்மை, உண்மை,
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது (2)
(எம்.ஆர்.ராதா)
ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது
(எம்.ஆர்.ராதா)
வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதி யேது ஏது
(குற்றம் )
படம் : ரத்தக் கண்ணீர்
நடித்தவர் : எம். ஆர். ராதா
பாடியவர் : சி.எஸ். ஜெயராமன், எம்.ஆர் ராதா
பாடல் : கு.சா.கிருஷ்ணமூர்த்தி - ( மேலும் விவரங்கள் இங்கே )
மேலதிக தகவல்கள்.
இந்தப்பாடல் பெரிய `ஹிட்’ ஆகி, கு.சா.கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது. இதில் பலருக்கும் தெரியாத ஒரு செய்தி: கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் இந்தப் பாடலை, சிதம்பரம் ஜெயராமன் ஏற்கனவே இசை அமைத்துப்பாடி, அது தனி இசைத்தட்டாகவும் வந்துவிட்டது! அதையேதான், “ரத்தக்கண்ணீர்” படத்திலும் பயன்படுத்திக் கொண்டார்கள். இடையிடையே எம்.ஆர்.ராதா பேசும் வசனத்தை சேர்த்துக் கொண்டார்கள். அது மட்டுமே புதிது.
நன்றி - http://bsubra.wordpress.com/
கன்னடத்தில் இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பு உபேந்திராவால் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளிவந்து சக்கைப் போடு போட்டது.
0 Comments:
Post a Comment