பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர்ஸ்டாரு தானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர்ஸ்டாரு தேனப்பா
பார் போற்றும் பாசக்காரன்
அவர் போல யாரைச் சொல்ல
பாராட்ட வார்த்தையில்ல
அவர் தோழனே
உனைப் பாடவே சுகம் கூடுதே
இதைவிடப் பெருமை கிடையாதே
(பேரின்ப பேச்சுக்காரன்)
தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையைக் காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே
இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக் கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடிப்
போகின்றோமே எந்நாளும்
இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் அத்தாட்சி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் காளி அண்ணாச்சி
பிறர் தலையின் கனமெல்லாம்
இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும்
கலைஞன் தெரியாதோ
(பேரின்ப பேச்சுக்காரன்)
அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு
மகிழும் மனிதன் உன் போலே
எவரும் இல்லை உலகில் இன்று
தலையும் தருவார் தன்னாலே
கொடுத்த தலையைக் குறையில்லாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே
உதிர்ந்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்கக் கற்றாயே
நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலால்
வாழ்வை வெல்பவன்
அழகாகும் முகமெல்லாம்
உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம்
ஆண்கள் மட்டும் ஆளும் அரசாங்கம்
(பேரின்ப பேச்சுக்காரன்)
படம்: குசேலன்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: யுகபாரதி
பாடியவர்: கைலாஷ் கெர், ப்ரசன்னா
Sunday, July 20, 2008
567. பேரின்ப பேச்சுக்காரன் - குசேலன்
பதிந்தவர் கப்பி | Kappi @ 12:22 PM
வகை 2000's, 2008, GV பிரகாஷ் குமார், கைலாஷ் கெர், பிரசன்னா, யுகபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment