Friday, July 25, 2008

611. கும்பகோணம் சந்தையில்




கும்பகோணம் சந்தையில் பார்த்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா
வேட்டியின் வேகத்தை பார்த்து உன் தாவணி வேர்த்தது நேத்து
வெக்காத எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
(கும்பகோணம்..)

தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி தூக்குற தங்கரரதமே உன்னை தூக்கிட வரலாமா?
தண்ணி பானை வச்ச இடத்தை மாமன் பார்வைகள் தொடலாமா?
அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா?
அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா?
நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
(கும்பகோணம்..)

கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
கடலக்காட்டுல கட்டில் இருக்கு கம்பங்கூழ் கொண்டு வருவாயா?
ஏழு தலைமுறை தட்டில் இருக்கு என்ன சீக்கிரம் விடுவாயா?
அடி மெத்த வீடு ஒன்னு நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா?
அந்த வீட்டுக்கு வாசக்கதவோ ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
(கும்பகோணம்..)

படம்: சிம்ம ராசி
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: சுஜாதா, அருண்மொழி
வரிகள்: வாசன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam