கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
(கண்கள் இரண்டால்)
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
( கண்கள் இரண்டால் )
கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)
படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்
Monday, July 14, 2008
554. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:15 AM
வகை 2000's, 2008, தாமரை, தீபா மிரியம், பெல்லி ராஜ், ஜேம்ஸ் வசந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
Kappi .. indha song-um podunga.. super-ah iruku..
http://www.youtube.com/watch?v=QwNk3iQlgGg
வரிகள் அருமை.. ஆனா இசைதான் எங்கயோகேட்டமாதிரியே இருக்கு.. சுடும் நிலவு ??
அருமையான பாட்டு
// கயல்விழி முத்துலெட்சுமி said...
வரிகள் அருமை.. ஆனா இசைதான் எங்கயோகேட்டமாதிரியே இருக்கு.. சுடும் நிலவு ??//
ரிப்பிட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))))
//வரிகள் அருமை.. ஆனா இசைதான் எங்கயோகேட்டமாதிரியே இருக்கு.. சுடும் நிலவு ??//
இரு பாடல்களுமே ரீதிகௌளை ராகத்தை அடிப்படையாக கொண்டவை. அழகான ராட்சஸியே (முதல்வன்) பாடலும் இதே ராகம்தான்.
பாடல் வரிகள் நல்லா இருக்கு.
அதே மாதிரி தலை முடியும் தாடியும் வளக்கணும்னு ஆசையாகீடுச்சு!!
:))))
கப்பி தல...
ஒரு சின்ன திருத்தம்...
என்னை தள்ளி விட்டு, தள்ளி விட்டு, மூடி மறைத்தாய்
அப்புறமா....
கறைகள் அண்டாத நினைக்கிறேன்... கரைகள்?
யாத்திரீகன்
சீக்கிரமே போட்ருவோம் அண்ணாச்சி :)
முத்துலெட்சுமி, கானா பிரபா, ஆயில்யன், மங்களூர் சிவா,அனானி - நன்றிகள்!
நட்டி - மாத்தியாச்சுங்க! நன்றி!
Super
Post a Comment