வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை காற்றே நில்லு)
படம்: உயிருள்ளவரை உஷா
இசை:டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
Sunday, July 27, 2008
622. வைகைக் கரை காற்றே நில்லு
பதிந்தவர் கப்பி | Kappi @ 6:36 AM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், T ராஜேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
//மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவளினை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
//
kalakal song eppavume hit song ithuthan:)
oorukararuna summava :))
thanks kappi
மீதி பாட்டை காணோம்..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment