அகப்பொருளா நீ அகப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே
புரப்பொருளா நீ புரப்பொருளா
என உரைத்திதடி என் உயிரே
அருகினிலே நீ இருந்துவிட்டால்
உன் அகப்பொருளாய் நான் இருப்பேன்
புரப்பட்டுதான் நீ போனப்பின்னே
உன் புரப்பொருளாய் நான் தவிப்பேன்
பூச்செடி நீயானால் உன் வேர் என நான் இருப்பேன்
சூரியன் நீயானால் உன் காய்ச்சலில் நான் இருப்பேன்
அதிகாலை வெண்ணிலா சிரிக்கிறதே
எனை ஆயுள் கைதியாய் அழிக்கிறதே
பசி தூக்கம் யாவையும் மறைக்கிறதே
ஒரு காதல் பைத்தியம் பிடிக்கிறதே
(அகப்பொருளா..)
பூவான உன் தேகம் அதை பூட்டி வைத்தால் பாவம்
இவள் வாசனை கண்டு உன் வயதை கிண்டும் வண்டு
நீ நானென என மாறீனால் இனி ரெண்டு வாழ்க்கை ஏதேது
தாமரை இலை மீதிலே மனம் தண்ணீர் கண்டேனே இன்று
பூஜையில் பூஜையில் பூவை தின்று எனை மென்று
(அருகினிலே நீ..)
கம்பன் வீட்டினில் உள்ள ஒரு கவிதை ஓலை நீதான்
உன் தோளில் தினம் தூங்கும் ஒரு குழந்தை போல ஆனேன்
என்னை நீ கிள்ளும் போது நான் உன் பேர் சொல்லி அழுவேன்
உன் கண்களில் உள்ள பார்வை தான் அது காதல் என்று காட்டாதோ
உன்னை நான் உன்னை நான் ஊட்டி விடவேண்டும் என்பேன்
உன்னை நான் உன்னை நான் வாயை வாயாலே தின்பேன்
(அகப்பொருளா..)
படம்: ஆஞ்சனேயா
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
Wednesday, July 23, 2008
597. அகப்பொருளா நீ அகப்பொருளா
பதிந்தவர் MyFriend @ 10:00 PM
வகை 2000's, உன்னி கிருஷ்ணன், சுஜாதா, மணிஷர்மா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment