Wednesday, July 23, 2008

589. நான் தேடிய கவிதை




நான் தேடிய கவிதை
ஒரு பெண்ணாய் வந்தது
நான் தேடிய பெண்மை
ஒரு கவிதை தந்தது
(நான் தேடிய..)

ரோஜாவின் வண்ணம் கெஞ்சும்
நடை போட்டால் அன்னம் அஞ்சும்
நிலவுக்கும் இவளை கண்டால்
வெட்கம் தான் விடையாய் மிஞ்சும்
யாரோ யாரோ இவள் தான் யாரோ
(நான் தேடிய..)

அறியாத நேசத்தை அறிந்தேனே உன்னாலே
இது போலே இன்னாள் வரை உனதாக சுகம்தானே
கண்மூடி பார்த்தாலும் உன் நெஞ்சம் தெரிகிறதே
எனக்குள்ளும் கருவரை உண்டு அது உன்னை சுமக்கிறதே
விழி பேச பாஷை ஏதும் இல்லை காதல் கசிக்கிறதே
உயிராக நீயும் வந்தாய் வென்றாய் இதயம் கரைகிறதே
சில நேரம் இளமை இளமை யுத்தம் செய்கிறதே
(நான் தேடிய..)

வான் வானம் வீழ்ந்தாலும் என் காதல் உன் பக்கம்
அதை நீயும் அறிந்தால் போதும் வேறில்லை என் சொர்கம்
உனை பார்த்த பின் தானே உலகை நான் அறிந்தேனே
சில நேரம் என்னை நானே நேசித்தும் மகிழ்ந்தேனே
என் காதல் உந்தன் சொந்தம் என்று நீயும் சொல்வாயா?
என் நெஞ்சின் ஆசை நூறு இல்லை ஒன்றே அறிவாயா?
இரு உயிரின் இதயம் ஒன்று என்பது புரிகிறதா?

உன் காதலை தானே நான் கடவுள் என்பது
நீ தேடிய கவிதை உன் சுவாசம் ஆனது
(உன் காதலை..)

இதயத்தில் இன்னொரு இதயம் புதிதாக பூத்தது உதயம்
உனை கண்டால் என்னுயிர் சிதையும்
காதல் தான் சொன்னது அதையும்
யாரோ யாரோ நீதான் யாரோ
உன் காதலை தானே நான் கடவுள் என்பது
நீ தேடிய கவிதை உன் சுவாசம் ஆனாது

படம்: எங்கே எனது கவிதை
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுஜாதா, பரத்வாஜ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam