நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
கத்தி கண்ணின் இருபுறம் தெரியும்
நடக்கும் நடையில் வருபவன் புரியும்
ஊரே பார்த்து ஓரமாய் ஒதுங்கும்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
வேரோடு சாயும் இந்த காடே தரையாகும்!
எதிராளி பார்க்கிறான்
தெருவோரம் நிற்கிறான்
மார்கெட்டில் முறைக்கிறான்
என்னைப் போட்டுத்தள்ள துடிக்கிறான்
எங்கேயும் வருகிறான்
எமனாகத் தொடர்கிறான்
முகம் மாற்றி அலைகிறான்
என் கண்கள் பார்த்தால் மறைகிறான்
அவன் முந்துவானா? நான் முந்துவேனா?
நாளை ராத்திரி வந்தால் சொல்கிறேன்
உடையும் மேகம் மழையாய்ப் பொழியும்
உதைக்கும் பந்து வேகமாய்ப் போகும்
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
மண்ணில் உள்ள பெண்கள்
கை கோர்த்து உடல் தின்னும்!
ஒரு கண்ணில் தூங்கிடு
மறு கண்ணைத் திறந்திரு
ஓய்வாகப் படுப்பது
அது கல்லறையில் கிடைப்பது
போகின்ற பாதைகள்
பலபேரும் போனது
புதிதாகப் பிறந்திட
நான் புத்தனில்லை வழிவிடு
இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா?
காற்றில் கனிகள் விழுந்திடும் வரைக்கும்
காத்திருக்காதே கல்லடி கிடைக்கும்!
இது என்ன கடவுளே
புரியாது கடவுளே
ஒவ்வொரு நாளும் விடியல்
கண் பார்த்தால் அது புதையல்!
படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: கமல்ஹாசன்
Monday, July 28, 2008
624. நெருப்பு வாயினில் ஓரமாய் எரியும்
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:35 AM
வகை 2000's, கமல்ஹாசன், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
I like this song Very Much....
Thanks Kappi and Thenkinnam team
//போகின்ற பாதைகள்
பலபேரும் போனது
புதிதாகப் பிறந்திட
நான் புத்தனில்லை வழிவிடு
இது அழித்தல் வேலை
இந்த உலகின் தேவை
அதை நாங்கள் செய்தால்
ஊர்தான் வணங்குமா?
///
kalakalana padal
kamalahasan kuralil athirum
really super song about vanmurai
இதை நான் இப்பொழுதுதான் கேக்குறேங்க. நல்லா இருக்கு :):):)
Post a Comment