Monday, August 31, 2009

என்ன விலை அழகே



என்ன விலை அழகே

என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
(என்ன விலை..)

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
(என்ன விலை..)

உயிரே உனையே நினைத்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையி; இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான்
(என்ன விலை..)

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்

Sunday, August 30, 2009

பணக்கார குடும்பம் - வாடியம்மா வாடி



பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
தோ தோ தோ தோ........
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு......
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........

காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.......
காவேரித் தண்ணியிலே குளிச்சி வந்தேண்டி
கரிகால் சோழன்கிட்டே படிச்சி வந்தேண்டி
காவிரிப் பூம்பட்டினத்தை பார்த்திருக்கியாடி
கண்ணகி வீடு எங்க வீட்டு பக்கம் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.......

காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........
காவேரி பொறந்தது எங்க ஊர் தாண்டி
காலாலே புலிகளை மிதிச்சவ தாண்டி
ஸ்ரீரங்கப் பட்டணத்தப் பார்த்திருக்கியாடி
திப்பு சுல்தான் பொறந்தது எங்க ஊர் தாண்டி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு.....

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
பலிங் சடுகுடு சடுகுடு சடுகுடு........

மாமா மகளே வந்தியா சரியா
மாப்பிள்ளை இருக்கான் பார்க்கலாம் வர்றியா
தோ தோ தோ தோ........
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக்கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
அத்தை மகள் வந்தியா அகப்பட்டுக்கிட்டியா
அத்தானை பார்த்து ஒரு முத்தம் தரப் போறியா
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு......

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி
ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு........
தோ தோ தோ தோ..........

கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
கடலிலே குயிலொண்ணு உருளுது பெரளுது
கரு கரு விழியொண்ணு குறு நகை புரியுது
குறு நகை புரியுது குறு நகை புரியுது
புரியுது புரியுது புரியுது புரியுது
தோ தோ தோ தோ..........
உடலிலே கண்டாங்கி மினுக்குது குலுங்குது
ஓடி வந்த குதிரை எளைக்குது களைக்குது
ஹோ ஹோ ஹோ ஹோ....

வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
வனத்திலே மானொண்ணு மயங்குது கலங்குது
பசி கொண்ட புலியொண்ணு பதுங்குது ஒதுங்குது
தோ தோ தோ தோ.......
புலி கிட்ட மான் வந்து அடைக்கலம் கேட்குது
புடிக்குது கடிக்குது எலும்பையும் முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது
முறிக்குது முறிக்குது முறிக்குது முறிக்குது....
தோ தோ தோ தோ..........

படம் : பணக்கார குடும்பம்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் : P.சுசீலா, LR.ஈஸ்வரி
பாடல் வரிகள் : கண்ணதாசன்

தாண்டியா ஆட்டமுமாட



தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

அவள் எங்கே எனக் காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
அவள் எங்கே எனக் காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
(தாண்டியா..)

உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா?

எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா?

ஓ மையைபோல நானும் கண்ணில் சேர வேண்டும்
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும்

ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக் கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக் கூடும்

சரி காதல் நெஞ்சை நான் தாராளமா
உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா அன்பே வா
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா அன்பே வா
(தாண்டியா..)

காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதை கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குறியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துக்கொள்ள வந்தேன்

ஓ என்னை பற்றீ நீதான் எண்ணியது தவறு
என்னை விட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு

இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா அன்பே வா
ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா அன்பே வா

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

ஓ உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

ஓ உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், MG ஸ்ரீகுமார், கவிதா கிருஷ்ணமூர்த்தி
வரிகள்: வாலி

Saturday, August 29, 2009

ஓ மாரியா ஓ மாரியா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா ஓ மாரியா
ஃபுருட் செர்ரியா நீ வாரியா ஈமெயிலில் லவ் லெட்டர் தாரியா
கடலுக்கு ஃபிஷிங் நெட்டு காதலுக்கு இண்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
(ஓ மாரியா..)

மௌனம் என்றொரு சாவியைப் போட்டு மனதைப் பூட்டாதே
காதலை ஆயுள் கைதி என்றாக்கி காவலில் வைக்காதே
இதயம் திறந்து பறந்தோடி வா
இருக்கு எனக்கு ஆசை விரைந்தோடி வா
கம்பியூட்டரில் காதல் செய்யும் காலம் இனி
காதல் விதை காற்றோடு தூவி காதல் மயம் ஆகட்டும் பூமி
(ஓ மாரியா..)

கட்டழகுக்கொரு பட்டியலிட்டு காட்டுது இண்டர்நெட்டு
மனசை விட்டு மௌசை தட்டு மாட்டிடும் பதினெட்டு
இறக்கை எதற்கு பறந்தோடலாம்
இருக்கும் இடத்தை மறந்தாடலாம்
(ஓ மாரியா..)

மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ
மாரியா மாரியா மாரியா மாரியா ம மோ

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், யுகேந்திரன், ஃபெபி

Friday, August 28, 2009

ஆலயமணி - சட்டி சுட்டதடா



சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி சுட்டதடா..)

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
(சட்டி சுட்டதடா..)

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா
(சட்டி சுட்டதடா..)

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி சுட்டதடா..)

படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்

Thursday, August 27, 2009

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா



ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்
அந்த திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உன்னை வேறு கைகளில் தர மாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து என்னை உடுத்து
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொனந்தும்
உன் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னை காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)

இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னை தீண்டக் கூடாஅதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா
(ரோஜா..)

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

Wednesday, August 26, 2009

பாரதியின் பாடல்கள்



”பாரதியின் பாடல்கள்” பதிவின் தலைப்பை பார்த்து அடிக்க வராதீங்க. ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன். சுதந்திரதினத்தில் வானொலி பண்பலையில் ஒரு இரவின் மடியில் நிகழ்ச்சி நடிகை பாரதி நடித்த படங்களிலிருந்து பாடல் தொகுப்பு தான் இந்த நிகழ்ச்சி. சுதந்திர தினத்தில் இந்த தொகுப்பா ஒலிப்பரப்பினார்கள் என்று யோசிக்காதீங்க சார். பாடல்கள் பட்டியல் பாருங்க உங்களூக்கே கேட்க தோன்றும்.



நடிகர் விஸ்னுவர்த்தன், நடிகை பாரதி தம்பதியர், இவர்களூடன் பாலுஜி எங்கே வந்தார் (ஒரு கலர் படம் கிடச்சுதப்பா போட்டுட்டேன். ஹி..ஹி..) சரி பதிவிறக்கம் இங்கே செய்து கேட்டு விட்டு சிந்தாமல் சிதராமல், திக்காமல் திணறாமல் உங்கள் உணர்வுகளை தாருங்கள் ஒலித்தொகுப்பு உருவாக்கியவரும், வழங்கியவரும் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். பதிவிறக்கம் செய்து கேட்பதற்க்கு மிக்க நன்றி.

திரும்பிவா >> சந்தனக்குடத்துக்குள்ளே >> என் கேள்விக்கு என்ன பதில் >> செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் >> தங்க நிலவே நீ இல்லாமல் >> ஒத்தையடி பாதையிலே >> ஜில்லென்று காற்று வந்ததோ >> உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த



காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்ற ஏட்டில் என் என்னைப் பார்த்த போது
நானே என்னை நம்ப வில்லை எந்த கண்ணை நம்பவில்லை

உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே
உன் மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை

இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையில் வளைகின்ற நாளல்லவா
இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா
இன்று வலக்கையில் வளைகின்ற நாளல்லவா

சுகம் வலக்கையில் வலக்கையில் உண்டானது
மெம்மேலும் கைவலை வலை என்று ஏங்குதோ
இது கன்னங்களா இல்லை தென்னங்களா
இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா

இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக
நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக
(காதலெனும்..)

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம்
மனம் இதற்க்கெனக் கிடந்தது தவம் தவம்
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும்

என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை
கடல் நீலம் உள்ளக் காலம் வரை
இந்து பிறவிகள் தோறும் விடாத பந்தம்
பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
(காதலெனும்..)

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுவர்ணலதா

Tuesday, August 25, 2009

மோதி விளையாடு - லட்சம் வார்த்தைகள்



லட்சம் வார்த்தைகள் லட்சம் வார்த்தைகள்
முற்றும் தீர்ந்தன இங்கே இங்கே
ஒற்றை வார்த்தை ஒற்றை வார்த்தை
உற்றுத் தேடிடும் உள்ளம் இங்கே

காலம் எப்போதும் கையில் வராது
காதலை சொல்லிவை
பாஷை எல்லாமே ஊமை ஆனாலும்
கண்களை பேச வை
(லட்சம்..)

பெண்களுக்கு காதல் வந்தால்
பேச்சுதான் குளறுமே
ஞானம் எனும் சகதியிலே
வார்த்தைகள் புதையுமே

ஆண்மையிலும் காதல் சொல்லும்
ஆணைத்தான் ரசிக்குமே
மின்னலை வாழ்வு கொள்ளும்
மின்மினி பறக்குமே
(லட்சம்..)

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்: ரஞ்சனி
வரிகள்: வைரமுத்து

Monday, August 24, 2009

மோதி விளையாடு - வெள்ளைக்காரி வெள்ளைக்காரி



வெள்ளைக்காரி வெள்ளைக்காரி
கட்டில் மேலே கொள்ளைக்காரி
வெள்ளைக்காரி வெள்ளைக்காரி
கட்டில் மேலே கொண்டாட எவ்ரிபாடி

everybody knows you got my lovin
நிலாவின் பால் குடித்து
முத்தம் சிந்து ஓ சஜ்ஜுனா
You got my lovin
உன்னோடு பாய் விரிக்கும்
முல்லை பந்து ஓ சஜ்ஜுனா
(வெள்ளைக்காரி..)

Sexy ladies Funky parties
கண்கள் ரெண்டும் cocktail பார்ட்டி
Sexy ladies Funky parties
கட்டில் மேலே கொண்டாட எவ்ரிபாடி
(everybody..)

There you go
here comes a man
ready steady lady
you gotta oh me
திரும்பி பார்த்து நீ
hey girl
you gotta plan
pump it up now
turn it up girl
அவளை பார்த்ததும்
கண்களில் வெளிச்சம்
she gotta see that
we dont have time too
ஓ சொன்னது மண்டே
ஆ கிஸ் அடி தியூஸ்டே
ம்ம் கட்டில் வாட் சே
make love all day

காதல் மூட்டும் பெண்கள் கூட்டம்
செல்போன் போலே ஆளை மாற்றும்
பனை காட்டி பூனை கூட்டம்
ஆசை மூட்டி வாசல் மாற்றும்
அப்போது பெண் வேட்டை ஆடிடும்
ஆண்கள் கூட்டம்
இப்போது ஆண் வேட்டை ஆடுது
பெண்கள் கூட்டம்
மான்கள் கூடி சிங்கம் தின்னும்
காலம் கலிகாலம் எவ்ரிபாடி
(everybody..)

பெண்கள் உள்ளம் ஆழம் தானே
யானை வீழும் பள்ளம் தானே
கோடி பொய்கள் கண்ணில் தானே
ஜோடி பொய்கள் நெஞ்சில் தானே
என்னை நீ ஆனந்த சேற்றுக்குள் தள்ளிடாதே
என் மீது ஆதிக்கம் செய்து நீ கொன்றிடாடே
கை குட்டைக்குள் வானத்தை நீ கட்ட பார்க்காதே
(everybody..)

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன்

Sunday, August 23, 2009

அர்ஜுனரு வில்லு



அர்ஜுனரு வில்லு ஹரிசந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்காது
எதிரியை கொல்லு இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ
ஒரு நீரோ தீயோ யாரரிவார்
ஆளும் தேரிவனோ
அதை அசைத்து பார்க்க யார் வருவார்
(அர்ஜுனரு..)

அஞ்சுவது மடம் எஞ்சுவது திடம்
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு விணை ஏத்தி விடு உனை
உன்னுடைய துணையே முந்தானை

இவன் ஒரு அதிசய புலி
இவன் இழுப்பது நகம் கண்டு புடி
அதை அறிந்திடும் பகைவனின் வழி

தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விட
அது மழைப்பெய்ய இறங்கட்டும் குடை

ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடும்
(அர்ஜுனரு..)

தேவதையின் ராகம் வெண்ணிலவு முகம்
மூடியது ஏனோ கார்மேகம்
தேடன் ஒரு கண்ணில் ஊடல் ஒரு கண்ணில்
நாளை இரு கண்கள் சுகமாகும்

அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்

அழகிய மெழுகுடன் உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்

ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடும்
(அர்ஜுனரு..)

படம்: கில்லி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுக்விந்தர் சிங்

Saturday, August 22, 2009

மோதி விளையாடு - ஒற்றை வார்த்தையில்



ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன
கற்றை பார்வையில் கற்றை பார்வையில்
கண்ணால் ஜாடைகள் செய்தால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

கவிதையிலே பொய்களுக்கு கெளரவம் அதிகம் தான்
காதலிலே உயிர்களுக்கு கெளரவம் குறைவு தான்
நேருக்கு நேர் காதல் சொன்னால் நெஞ்சுக்கு நிறைவு தான்
காதலின் வீதியில் மௌனமே இரைச்சல் தான்

ஒற்றை வார்த்தையில் ஒற்றை வார்த்தையில்
உள்ளே உள்ளதை சொன்னால் என்ன

வார்த்தை வந்தாலும் காதல் வராமல் வாழ்பவர் கோடியே
காதல் வந்தாலும் வார்த்தை வராமல் வாழ்வது கொடுமையே

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்: ஷான்

Friday, August 21, 2009

நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே



அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

Thursday, August 20, 2009

யாதுமாகி - திகட்ட திகட்டவே காதல் தந்தாயே



திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே
(திகட்ட..)

யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போதும் நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் காட்டினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கைய்யில் வந்ததே
என் அன்பே
(திகட்ட..)

காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேண்
மீண்டும் இரவில் கனவில் தொடுவேன்
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதுமாகி மனதை ஏதோ செய்தாய்
மாயமாக மனதை ஏதோ செய்தாய்
காதலாகி உன்னுள் நானும் கரைந்து போகிறேன்
என் அன்பே
(திகட்ட..)

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: தீபா மரியம்

Wednesday, August 19, 2009

ஏன் என்ற கேள்வி

’ஏன் இப்படி..!’ பதிவின் சொந்தக்காரர் தெகா/ தெக்கிக்காட்டான் பிறந்தநாளுக்காக் இங்க ஏன் என்ற கேள்வி பாடல் ... பிறந்தநாள் வாழ்த்துக்கள் .




ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)

ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
(ஏன் என்ற கேள்வி)

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
(ஏன் என்ற கேள்வி )


திரைப்படம் :ஆயிரத்தில் ஒருவன்
பாடியவர் : டி. எம். எஸ்
இசை : எம். எஸ் . வி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

யாதுமாகி - பார்த்ததும் கரைந்தேனடா



பார்த்ததும் கரைந்தேனடா
காதலில் உறைந்தேனடா
காற்றிலே பறந்தேனடா
சற்றே நான் மலர்ந்தேனடா

பார்த்ததும் திகைத்தேனே நான்
காதலில் திளைத்தேனே நான்
மீண்டுமே ஜனித்தேனே நான்
தோற்று நான் ஜெயித்தேனே நான்

ஜில்லென்று பனி காறு தொட்டதாய் சிலிர்த்தேனே
காரணம் புரியாமல் தினம் நான் சிரித்தேனே
(பார்த்ததும் திகைத்தேனே..)

எங்கிருந்தோ வந்து எந்தன் கைகள் பற்றினாய்
உச்சி வேளை வெயில் போல காதல் மூட்டினாய்
இங்கு அங்கு எங்கும் உந்தன் பிம்பம் பார்க்கிறேன்
தொட்டு பார்த்தால் நீயும் இல்லை கண்கள் வேர்க்கிறேன்

ஞாபகங்கள் தட்ட மாலை ஆடும்
மாய வலை நம்மை வந்து மூடும்
வார்த்தைகள் போதுமடி வேண்டுமே உந்தன் மடி
நீளுமே ஒற்றை முடி நீ மதுரமடி
(பார்த்ததும் கரைந்தேனடா..)

கேட்கும் போது இலலி என்று ஏங்க வைக்கிறாய்
ஏக்கம் தீர கொஞ்சம் மீற வைக்கிறாய்
என்னை சுற்றி ஜாலம் செய்து மழை பெய்யுதே
பார்க்கும் யாதும் இப்போதெல்லாம் அழகானதே

காதலின் வெப்பம் நம்மை தீண்டும்
மீண்டும் மீண்டும் அந்த வெப்பம் வேண்டும்
ராத்திரி ஜாமத்திலே சந்திரன் பார்க்கவில்லை
தூக்கம் ஈர்க்கவில்லை நேரம் காலம் ஏதும் புரியவில்லை
(பார்த்ததும் திகைத்தேனே..)

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சித்ரா

Tuesday, August 18, 2009

யாதுமாகி - ஆனதென்ன ஆவதென்ன



ஆனதென்ன ஆவதென்ன
என்னிடம் மாற்றம் கண்டேன்
சொன்னதென்ன சொல்வதென்ன
உன்னிடம் கேட்டு நின்றேன்
உயிர் வரை தீண்டினாய்
அடை மழை தூவினாய்
முதல் முறை சிலிர்க்கிறேன்
காதல் இதுவோ

ஏதுமில்லா என் நினைவில் என்னென்னவோ நடக்க
யாருமில்லா என் மனதில் சாரலும் அடிக்க
நேற்று காதல் இல்லை
என் நென்சில் நீயும் இல்லை
இன்று ஏன் மாறினேன்
காதல் இதுவோ

பேசும் மின்சாரம் நீயா
பாடும் மின்மினி நீயா
யாவும் நீயா
உயிரின் ஆதாரம் நீயா

நேற்று முன்னாடி வந்தாய்
நெஞ்சை கண்ணாடி செய்தாய்
பிம்பம் தந்தாய்
என்ன என்கிறாய்

எல்லை இல்லா வானம் என்று
என்னை நினைத்திருந்தேன்
உள்ளம் கையால் மூடி கொண்டாய்
மிச்சம் இன்றி கரைந்தேன்
என்னை நீ வாங்கினாய்
எனக்கு தெரியாமலே
உன்னில் நான் மூழ்கினேன்
காதல் இதுவோ
(ஆனதென்ன..)

படம்: யாதுமாகி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: பென்னி தயால்

Monday, August 17, 2009

மோதி விளையாடு - மோதி விளையாடு



மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தாததினி தாததினி தானி
உலகம் முழுதும் இருண்டு கெடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முறையான பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு

புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புலி கூட்டம் அழிவதில்லை வேரோடு

எல டோனி எல டோனி
உன்னை மலிவாக என்னாதடா
திட்டம் போடு வேட்டை ஆடு
புலி பால் ஊட்டி டீ போடு டா

வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும்
ஆனால் தன்மானம் சாவாதடா
உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம்
நாளை நிர்வானம் ஆகுமடா

தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா

சத்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வு ஏதடா
(மோதி..)

நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம்
தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம்
தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்
(எல டோனி..)

1 2 3 4
Who are we for
5 6 7 8
Whom do we appreciate
India
( 1 2..)

ஒன்னு ரெண்டு மூனு நாலு
என்ன சொன்ன என்ன சொன்ன
அஞ்சு ஆறு ஏழு எட்டு
சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு
இந்தியா

புலியின் வேகம் சிங்க வீரம்
நரியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை

இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேலை

இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எறித்தால் தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை
(எல டோனி...)

கீழே வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சி ஆகு
அதுலே மின்சாரம் உண்டாகட்டும்
மேலே போனாலும் மேகம் போல் ஆகு
ஹே அதுலே மின்னல்கள் விளையாடட்டும்

அணியால் அடைகின்ற அடையாளம் உறிமை
நீயே அடையாளம் ஆனால்தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா
(மோதி..)

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவா

Sunday, August 16, 2009

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

கேளாமல் கையிலே வந்தாயே காதலே...


கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட(கேட்டு)
என்னை உன்னை எண்ணியோ யாரோ
எழுதியது போலவே தோன்ற (என்னை)

ஆண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

பெண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

ஆண்:
இனிமேல் இனிமேல் இந்த
நானும் நான் இல்லை
போய் வா போய் வா என்றே
எனக்கே விடைகள் தந்தேன்

பெண்:
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
ஆண்:
கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
பெண்:
நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு

ஆண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரைக் கூவிடும் உன் பேரும் கோகிலம்

கோரஸ்:
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே குதித்துப்போவதேன் நில்லுங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே

பெண்:
கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

ஆண்:
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்
பெண்:
மேற்கு திசை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
ஆண்:
தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா

பெண்:
கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

ஆண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்
பெண்:
கோகிலம் கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால் தடம்


பாடியவர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி சைந்தவி
எழுதியவர் : தாமரை
இசை : ஏ ஆர் ரகுமான்
திரைப்படம் : அழகிய தமிழ்மகன்

கொடுவா மீசை அறுவா பார்வை





கொடுவா மீசை அறுவா பார்வை
ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு கங்கப்பல்லு
அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்
ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
(கொடுவா..)

கண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவே
சூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே
கண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்
கட்டபொம்மன் பேரண்டா தொட்டதெல்லாம் தூள்
காட்டு தேக்கு தேகம்டா கெட்டப் எல்லாம் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
தூள் தூள்..
(கொடுவா..)

மானுக்கு கெம்புடா யானைக்கு தந்தம்டா
மக்களின் பெருமை அன்புடா தூள்
சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டா
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்
சூரக்கோட்டை கோனியிலே குடையிருந்தா தூள்
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்
(கொடுவா..)

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மாணிக்க விநாயகம்

Saturday, August 15, 2009

குளிருது குளிருது




குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலில்ளே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எறிவதில்லை
(குளிருது..)

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எறியுது நெருப்பு
இந்த நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியே தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்
(குளிருது..)

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத் துளி மழைத்துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எறிகிற போது
நாம் இன்பம் கொல்வது ஏது
அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி களவி கொல்லும்
தேகத்தை அணைத்து விடு சுடும்
தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம்
(குளிருது..)

படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா

Friday, August 14, 2009

எனைப்போலவே காற்று


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இளமை இளமை இனிமை இனிமை
இளமை இளமை இனிமை இனிமை

எனைப்போலவே காற்று எட்டுக்கட்டும் பாட்டு இனிமை
எனைப்போலவே பூட்டு எட்டிப் பாட்ர்க்கும் நாத்து இளமை
ஏரிக்கரையில் எழுந்து ஆடும் சிறு குறீஞ்சுப்பூவும்
என் கூந்தல் தானே தேடும்
நீரின் அலையில் நடனமாடும் சிறு வண்ண மீன்கள்
என் விழிகளை கண்டு ஆடும்
போகும் இடம் எங்கும் என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால் அடி என்னடி செய்வேன் நான்
(எனைப்போலவே..)

வீசும் அருவி வீரும் துருவி நனைந்திடலாம்
நாம் நனைந்திடலாம்
வாட்டும் அலை மீறி மெழுகை நடமிடலாம்
நாம் நடமிடலாம்
உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓர் ஆயிரம்
ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாசப் பூங்காவியம்
காட்டாறு போல பாட்டாறு ஓடுது
கரையோர நாணல்கள் கை கொட்டுது ஆடுது
நம் நன்னாளிது பொன்னாளிது ஓ ஹோ
(எனைப்போலவே..)

பன்னீர் பூக்களில் பட்டாம் பூச்சிகள்
படுத்திருக்கு ஹோய் படுத்திருக்கு
தூங்கும் வாய்மையை பொங்கும் தேன் துளி
கொடுத்திருக்கு ஹோய் கொடுத்திருக்கு
முத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன்
மொத்தத்தில் சித்தத்தை கிக்கேறி நான் வேர்க்கிறேன்
கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுது
ஏதேதோ ஆசைகள் நெஞ்சுக்குள் ஊறுது
எப்பாடியோ எப்பாடியோ ஹையையோ
(எனைப்போலவே..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுசித்ரா

Thursday, August 13, 2009

லேசா லேசா



லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
(லேசா..)

நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
(லேசா..)

வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் நேரல்ல
நான் வாங்கும் மூச்சு காற்றும் உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா
(வெவ்வேறு..)
நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய
ஒரு வரியில் ஒருவரின் உயிர் கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது
(லேசா..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

Wednesday, August 12, 2009

அபியும் நானும் - மூங்கில் விட்டு சென்ற பின்னே




மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றை போல் மெல்லினம் வந்து கடந்து போன பின்னும்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயம் போல் கறைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும் சேதி என்ன

படம்: அபியும் நானும்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

Tuesday, August 11, 2009

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா



பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டும் சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா
உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்ட்டி அழுக்காக்கவா வா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா
ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

ஏய் சண்டை போடவா
ஏய் விட்டு செல்லவா
மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தா; மலர்ந்து விடும்
மோகம் வந்தால் எண்ணங்களும் திறந்து விடும்
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பு இருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பு இருக்கும்
விழிகள் நடந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் நடந்தால் இலக்கியம் இருக்கும்
பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்
பாறையும் இளமை சுரக்கும்
பாராட்டி நீராட்டவா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்சம் காலம் விட்டு விட்டு போ
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்துவிட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு
உன்னை கலந்தால் இன்னும் நூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்
மூச்சத்தில் உன் பேரடா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா
(பெண்கள் நெஞ்சை..)

படம்: ஜேஜே
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஜேஜே, மகாலெட்சுமி

Monday, August 10, 2009

தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா
உன் கண்ணு அழகுக்குத்தான் கன்னட நாட்டை வாங்கி தரட்டுமா
(தங்க..)
நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையே கேக்கட்டுமா
நீ காட்டும் அன்புக்காக ஆந்திராவைக் கேக்கட்டுமா
உத்திரவு சொல்லிப்ப்பொடு ஊட்டி தேசம் உனக்குத்தான்
(தங்க..)

ஹேய் இடுப்பு மடிப்புக்குதான் இமாச்சலம் போதுமா
குறும்பு பார்வைக்குத்தான் குஜராத்தி வேணும்மா
(இடுப்பு..)
பிகு பண்ண கூடாது பீகாரை எடுத்துக்கோ
உன் கட்டு மஸ்து உடன்புக்கு காஷ்மீரை பிடிச்சுக்கோ
ஹேர் ஸ்டைலுக்காக கேரளாவை தந்திடவா
கோபப் படக்கூடாது கோவாவையும் வாங்கிடவா
தீபாவளி போனஸா சிக்கிம்மையும் வச்சிக்கவா
(தங்க..)

ஹேய் ராங்கு பண்ணக்கூடாது ராஜஸ்தானை தாரேன்
ஒதுங்கி நிற்கக்கூடாது ஒரிஸ்ஸாவையும் தாரேன்
(ராங்கு..)
ஹேய் துள்ளி துள்ளி குதிச்சுட்டு டில்லி உனக்குதான்
மனசை இங்கே கொடுத்துடு மணிப்பூரும் உனக்குதான்
மேட்டினி ஷோவுக்கு வந்தா மேகலைய தந்திடுவேன்
உன் வாக்கிங் ஸ்டைலுக்காக வங்களத்தையும் தந்திடுவோம்
இதயத்தை கொடுத்திடு இந்தியாவே உனக்குத்தான்
(தங்க..)

படம்: நெஞ்சினிலே
இசை: தேவா
பாடியவர்கள்: விஜய், ஸ்வர்ணலதா

Sunday, August 9, 2009

கண்ணும் கண்ணும் - அன்பே அன்பே



அன்பே அன்பே தான் வாழ்க்கையே
இங்கே இங்கே தான் வாழ்கிறேன்
நெஞ்சில் நெஞ்சில் மழை தூறுதே
கண்ணீர் வெள்ளம் கரை மீறுதே
ஒரு சந்தையில் தொலைந்த ஏழை ஆடு
மந்தையில் சேர்கிறதே
அட முகிலினம் தொலைந்த பாலைவனத்தில்
முதல் மழை பொழிகிறதே
அன்பென்ற தேன்மழையில் இப்போது
ஆன்மா நனைகிறதே
எந்நாளும் அன்பே அன்பே.. அன்பே அன்பே..

(அன்பே அன்பே....)

அன்னை இல்லை இல்லையென்று
என் அடிமனம் அழுததென்ன
என்னைவிட இளைய பெண்கள்
என் அன்னையென ஆனதென்ன
சின்னஞ்சிறு மழைத்துளி நான்
தன்னந்தனிமையில் கிடந்ததென்ன
சில துளி சேர்ந்ததனால்
நான் சமுத்திரம் ஆனதென்ன
இருதயம் சிறகடித்து
என் வாழ்வில் இதுவரை பார்த்ததில்லை
எந்நாளும் இருட்டுக்குள் வாழ்ந்திருந்தேன்
என் வானம் தெற்கு பக்கம் விடியக் கண்டேன்

(அன்பே அன்பே...)

வானகம் தாண்டிச் சென்றால்
சொர்க்கம் வருமென்று நினைத்திருந்தேன்
நானூறு மைல் தொலைவில்
என் சொர்க்கம் இங்கு அமையக்கண்டேன்
மலர் ஒன்று தேடி வந்தேன்
இன்று வனத்துக்குள் தொலைந்துவிட்டேன்
மலர் கொண்ட செடி எதுவோ
அன்பு மயக்கத்தில் மறந்துவிட்டேன்
குடும்பத்தின் வாசனையை
இவ்வீட்டின் கூரையில் நுகர்ந்து கொண்டேன்
என் வாழ்வில் இழந்ததை அடைந்துவிட்டேன்
கைமாறாய் இதயத்தை விருந்து வைத்தேன்

(அன்பே அன்பே... )

ஒத்த பனைமரம் போலே வாழ்ந்த நானும்
உறவினில் தோப்பானேன்
இந்த உறவுக்கு என்ன பேரு என்று
உயிருக்குள் அழுகின்றேன்
பால் கொண்ட காபியிலே
இப்போது பாசத்தை கலந்தது யார்
எந்நாளும் அன்பே அன்பே.. அன்பே அன்பே..

(அன்பே அன்பே..)

படம் :
கண்ணும் கண்ணும்
இசை : தீனா
பாடியவர் : தீனா

வாழ்வே மாயமா? வெறும்கதையா?

வாழ்வே மாயமா?
வெறும் கதையா? கடும் புயலா?
வெறும் கனவா நிஜமா?
நடந்தவை எல்லாம் வேஷங்களா?
நடப்பவை எல்லாம் மோசங்களா?
(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போல கரமிருக்கும்
அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

திரைப்படம் : காயத்ரி
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்: B.S. சசிரேகா



மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்



மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்
மழையிலே கரையுதே ரெண்டு மனங்களின் தூரம்
காதில் கேட்கும் இடியோசை
காதல் நெஞ்சின் பரிபாஷை
மழையை போல உறவாட
மனதில் என்ன பேராசை

நீரில் எழுதும் காதல் அழியும்
மழை நீரே எழுதிடும் காதல் அழியாதே
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ
(மண்ணிலே..)

பூ சிதறிடும் மேகம்
பொன் வானில் வருகிறதோ
ஏழு நிறங்களினால் நன்கொரு மாலை செய்கிறதோ
பூந்தாரைகள் எல்லாம் நீ பூக்களின் தோரணமா
வான் தேவதைகள் ஆசிகள் கூறும் அட்ஷதையோ
இத்தனை மழையிலும் இந்த நாணம் கரையவில்லை
கன்னி நான் நனையலாம் கற்பு நனைவதில்லை
அடி மனிதனை விடவும்
மழை துளி உயர்ந்தது
இது வரை புரியவில்லை
ஐ லவ் யூ ஷைலஜா ஷைலஜா ஓ ஷைலோ
(மண்ணிலே..)

நான் காதலை சொல்ல
என் வாய்மொழி துணை இல்லையே
தன் வார்த்தைகளால் மழைத்துளி
என் மனம் சொல்லியதே
முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே
(மண்ணிலே..)

படம்: மழை
இசை: தேவிஸ்ரீபிரசாத்
பாடியவர்கள்: SPB சரண், சுமங்கலி

Saturday, August 8, 2009

ஓ பேபி நீ தேவாமிர்தம்



ஓ பேபி நீ தேவாமிர்தம்
பேபி நீ பஞ்சாமிர்தம்
பேபி நீ புஷ்பத்தாவரம்
ஓ பேபி நீ தீபாவளி
பேபி நீ சூராவளி
பேபி நீ வாச மார்கழி
அம்மாடி அவ பாதம் பட்டா பாற பூவாகும்
அப்பாடி அவ கையி பட்டா நீரும் சாராயம்
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும் என்னாகும்
(ஓ பேபி..)

ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
ஏ ஓடக்கர மீனு அவ கால கொத்த ஏங்கும்
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏண்க்கும்
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்
சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா
காதல் பூசாரியா கனவு பூட செஞ்சாடா
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா
(அம்மாடி..)

நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்
ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா
(அம்மாடி..)

படம்: மலைக்கோட்டை
இசை: மணிஷர்மா
பாடியவர்: ராகுல் நம்பியார், சங்கீதா

Friday, August 7, 2009

ஆரிய உதடுகள் உன்னது



ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
(ஆரிய..)

இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனக் கிடங்குகள் தீப்பற்றித் தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிகப் பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலிப்பிடிகும்
கட்டில் மேல் எல்லாம் களைந்த பின்னே பின்னே
களையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா எனைப் பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா
(ஆரிய..)

தேவதை புன்னகை செய்தால்
சிறு தேப்பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண் தான் ஆண் தான்

அடி காற்றினிலே வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னத்தான் எதிர்ப்பார்க்கிறாய்
ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் வருமா?
(ஆரிய..)

படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா

Thursday, August 6, 2009

காதலிக்கும் ஆசை இல்லை



என் சோனாலி சோ சோனாலி
மை சோனாலி சோ சோனாலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும்..)

சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி
(காதலிக்கும்..)

உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

என் காதலி காதலி காதலி காதலி..

படம்: செல்லமே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, மஹதி

Wednesday, August 5, 2009

சிட் சிட் சிட் சின்னக்கிளியே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சிட் சிட் சிட் சின்னக்கிளியே
ஜிவ்வென்று வா வெளியே
புன்னகை என்பதுதான் நமக்கு தாய்மொழியே
பால் நிலவை ஒரு பந்தாய் செய்திடலாம்
வான் வெளியில் விளையாடி பார்த்திடலாம்
வா வா வா கிளியே
வாழ்வில் நாம் வழியே
(சிட் சிட்..)

திங்கட்கிழமை பூவுக்குள்ளே தித்திகின்ற தேனாய் வாழ்வோம்
வா கிளி கண்ணே
செவ்வாய் கிழமை செவ்வாயில்தான் நாமில் எல்லாம் சுற்றிப்பார்ப்போம் வா கிளி கண்ணே
புதன் வியாழன் இரண்டு நாளும் பூமியில் வாழ்வோம்
வெள்ளியிலே வெள்ளியில் நாம் வீதியில் செல்வோம்
ஏ கிளியே சனி ஞாயிறு நம் வசமே
விண்மீன் அத்தனையும் நாம் சுற்றிப்பார்த்திடலாம்
வா வா வா கிளியே
(சிட் சிட்..)

சுற்றிச் சுற்றி விண்மீன் கூட்டம் கூட்டத்திற்குள்
நிலவாய் தானே நான் ஜொலிக்கின்றேன்
நிலவே நிலவே வளர்பிறை என்றால்
நிரந்தர்ம் இல்லை தேய்பிறை உண்டு
நான் ஜொலிக்கின்றேன்
முயலுக்கும் ஆமைக்கும் போட்டி என்னாச்சு
முயல்தானே முட்டாளாய் மாறி போஉஆச்சு
ஏ கிளியே ஒரு கூண்டில் சிக்கிடுவாய்
அந்த நாள் நீ மிக அருகில் பார்த்திடுவாய்
ஓ ஓ ஓ கிளியே
(சிட் சிட்..)

படம்: அழகான நாட்கள்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, SPB சரண்

Tuesday, August 4, 2009

மாடத்திலே கன்னி மாடத்திலே





டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்

மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயா ஆத்துப் பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை
மாமி சின்ன மாமி
மடிசார் அழகி வாடி சிவகாமி

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)

டாலடிக்கிற நல்ல வைர அட்டி
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி
ஆசை வைக்கிற இப்ப ரொம்ப நாளா
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா
பூலோக சாட்சி பொம்மனாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி
இப்போது பாப்ப் என் பேச்சை கேட்ப
பின்னால என்னாவையோ
ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)

அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ
சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளோ
மத்டியான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்வியோ
மாட்டேன்னு சொன்னா சும்மாவே விடுவே
மாட்னி சோ கூப்பிடுவே ஏன்னா
நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி அணைச்சிக்கலாம்

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்
(மாடத்திலே..)

படம்: வீரா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

Monday, August 3, 2009

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்





வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

படம்: அண்ணாமலை
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Sunday, August 2, 2009

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை





துக்கிரித்தனமா பேசிக்கின்னு இருந்தா
துன்ற சோத்துக்கு தாளம் தாண்டா போடணும்
இன்னாடா சொல்லிக்கினு இருக்கேன்
தாளமா போடுற?

சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்

ஆ.. கன்னம் வரைக்கும் கிழியுது வாய்த்துடுக்கு

இன்னுங்கூட கிழியும் காது தடுக்கும்

புரியாம பேசாத பல்லத் தட்டுவேன்

பேசுறதே புரியாது பொக்கையாயிடுவேன்

ஆரை பார்த்து பேசுரேன்னு நெனப்புகீதா

பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா

வம்பு பண்ணின கொன்னுபுடுவேன்
நீ வளத்ததப்படி நான் இன்னா பண்ணுவேன்

ராங்கு பண்ணாத என் கையில் ராங்கு காட்டுனா
அல்லாமே ராங்கா பூடும்

அது எப்படி போவும்
ராஜா கைய வச்சா
எண்டா டேய் அது ராங்கா பூடுமாடா டேய்
டேய் ச்சீ என்ன பூடுங்குறீங்களா போவாதுங்குறீங்களா?
போவாது போவாது
அப்டி சொல்லு

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பாண்ணதில்லை
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்

கட்டவண்டி என்கிட்ட காராமாறும்டா
ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடும்டா
என்னைப் பத்தி யாருன்னு ஊரைக் கேளுப்பா
இல்லையனா உன் வீட்டுக் காரைக் கேளப்பா
சரக்கிறுக்கிருக்கு முறுக்கிருக்கு தலைக்கிறுக்கு
அது எனக்கெதுக்கு

வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தொறந்தாச்சு
பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்

கன்னிப்பொண்ணா நெனச்சி காரைத் தொடனும்
கட்டினவன் விரல்தான் மேலப்படனும்
கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்
தெரிஞ்சவன் தான் ஓட்டிடனும்
திறமை எல்லாம் அவன் காட்டிடனும்
ஓரிரடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும்
கார்களைப் போல் பெண் இனமும் கொண்டவனைப் போய்ச் சேரும்
வேகம் கொண்டாட காரும் பெண்போல
தேகம் சூடாகுமே
(ராஜா கைய..)

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கமல் ஹாசன், மனோராமா

Saturday, August 1, 2009

என் காதல் உன்னை சேர





என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூப்பூக்கும் இந்த நொடி
இடி இடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தான்
செடி வளர்க்கும் பூக்கலெல்லாம்
துடித்துடிக்கும் ஆசை தான்

அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி

படம்: தம்பி
இசை: வித்யாசகர்
பாடியவர்: சைந்தவி

Last 25 songs posted in Thenkinnam