”பாரதியின் பாடல்கள்” பதிவின் தலைப்பை பார்த்து அடிக்க வராதீங்க. ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன். சுதந்திரதினத்தில் வானொலி பண்பலையில் ஒரு இரவின் மடியில் நிகழ்ச்சி நடிகை பாரதி நடித்த படங்களிலிருந்து பாடல் தொகுப்பு தான் இந்த நிகழ்ச்சி. சுதந்திர தினத்தில் இந்த தொகுப்பா ஒலிப்பரப்பினார்கள் என்று யோசிக்காதீங்க சார். பாடல்கள் பட்டியல் பாருங்க உங்களூக்கே கேட்க தோன்றும்.
நடிகர் விஸ்னுவர்த்தன், நடிகை பாரதி தம்பதியர், இவர்களூடன் பாலுஜி எங்கே வந்தார் (ஒரு கலர் படம் கிடச்சுதப்பா போட்டுட்டேன். ஹி..ஹி..) சரி பதிவிறக்கம் இங்கே செய்து கேட்டு விட்டு சிந்தாமல் சிதராமல், திக்காமல் திணறாமல் உங்கள் உணர்வுகளை தாருங்கள் ஒலித்தொகுப்பு உருவாக்கியவரும், வழங்கியவரும் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். பதிவிறக்கம் செய்து கேட்பதற்க்கு மிக்க நன்றி.
திரும்பிவா >> சந்தனக்குடத்துக்குள்ளே >> என் கேள்விக்கு என்ன பதில் >> செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் >> தங்க நிலவே நீ இல்லாமல் >> ஒத்தையடி பாதையிலே >> ஜில்லென்று காற்று வந்ததோ >> உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.
3 Comments:
ஏன் சார் அவர் தமிழை இந்த பாடுப்படுத்துகிறார்...கேட்கிற மூட்டே போயிடுச்சு!!!
வாங்க புனிதா... எங்கடா யாரும் எதுவும் சொல்லையே என்று எதிர்பார்த்தேன். யாரை சொல்றீங்க அறிவிப்பாளரை சொல்றீங்களா? அல்லது ஒலித்தொகுப்பை உருவாக்கீய திரு.மந்திரமூர்த்தியை சொல்றீங்களா? அறிவிப்பாளர் மிகவும் சிரத்தையுடன் பேசுபவர் அவரின் வேறு ஒலித்தொகுப்புக்கள் கேட்க இந்த சுட்டியில் பாருங்கள் http://paasaparavaikal.blogspot.com/ ஒலித்தொகுப்பை உருவாக்கியவர் என்றால் வானொலி நேயர் மட்டும் தான் தவறுகள் செய்ய அதிகம் வாய்ப்பு உண்டு மறப்போம் மன்னிப்போம்.. மகிழ்ச்சியுடன் அவர் ரசிப்பு தன்மையை ஏற்போம். உங்கள் கருத்துக்கு நன்றி. நானே ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன். அடிக்கடி வாங்க.
ஜில்லென்று காற்று வந்ததோ நில்லென்று கேட்டுக்கொண்டதோ என்ற பாடலைக் கேட்டிருந்தேன். யாராவது ஒலி பரப்புவார்களா?
ப. இராசமோகன்.
Post a Comment