துக்கிரித்தனமா பேசிக்கின்னு இருந்தா
துன்ற சோத்துக்கு தாளம் தாண்டா போடணும்
இன்னாடா சொல்லிக்கினு இருக்கேன்
தாளமா போடுற?
சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன்
ஆ.. கன்னம் வரைக்கும் கிழியுது வாய்த்துடுக்கு
இன்னுங்கூட கிழியும் காது தடுக்கும்
புரியாம பேசாத பல்லத் தட்டுவேன்
பேசுறதே புரியாது பொக்கையாயிடுவேன்
ஆரை பார்த்து பேசுரேன்னு நெனப்புகீதா
பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா
வம்பு பண்ணின கொன்னுபுடுவேன்
நீ வளத்ததப்படி நான் இன்னா பண்ணுவேன்
ராங்கு பண்ணாத என் கையில் ராங்கு காட்டுனா
அல்லாமே ராங்கா பூடும்
அது எப்படி போவும்
ராஜா கைய வச்சா
எண்டா டேய் அது ராங்கா பூடுமாடா டேய்
டேய் ச்சீ என்ன பூடுங்குறீங்களா போவாதுங்குறீங்களா?
போவாது போவாது
அப்டி சொல்லு
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பாண்ணதில்லை
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்
கட்டவண்டி என்கிட்ட காராமாறும்டா
ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடும்டா
என்னைப் பத்தி யாருன்னு ஊரைக் கேளுப்பா
இல்லையனா உன் வீட்டுக் காரைக் கேளப்பா
சரக்கிறுக்கிருக்கு முறுக்கிருக்கு தலைக்கிறுக்கு
அது எனக்கெதுக்கு
வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தொறந்தாச்சு
பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்
கன்னிப்பொண்ணா நெனச்சி காரைத் தொடனும்
கட்டினவன் விரல்தான் மேலப்படனும்
கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும்
தெரிஞ்சவன் தான் ஓட்டிடனும்
திறமை எல்லாம் அவன் காட்டிடனும்
ஓரிரடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும்
கார்களைப் போல் பெண் இனமும் கொண்டவனைப் போய்ச் சேரும்
வேகம் கொண்டாட காரும் பெண்போல
தேகம் சூடாகுமே
(ராஜா கைய..)
படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கமல் ஹாசன், மனோராமா
2 Comments:
கலக்கல் பாஸ்
பாட்டு & பர்ஸ்ட் நாலு லைன்ஸ் :))))))
நல்லதொரு பாடல் பகிர்வு.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
Post a Comment