Sunday, August 9, 2009

கண்ணும் கண்ணும் - அன்பே அன்பே



அன்பே அன்பே தான் வாழ்க்கையே
இங்கே இங்கே தான் வாழ்கிறேன்
நெஞ்சில் நெஞ்சில் மழை தூறுதே
கண்ணீர் வெள்ளம் கரை மீறுதே
ஒரு சந்தையில் தொலைந்த ஏழை ஆடு
மந்தையில் சேர்கிறதே
அட முகிலினம் தொலைந்த பாலைவனத்தில்
முதல் மழை பொழிகிறதே
அன்பென்ற தேன்மழையில் இப்போது
ஆன்மா நனைகிறதே
எந்நாளும் அன்பே அன்பே.. அன்பே அன்பே..

(அன்பே அன்பே....)

அன்னை இல்லை இல்லையென்று
என் அடிமனம் அழுததென்ன
என்னைவிட இளைய பெண்கள்
என் அன்னையென ஆனதென்ன
சின்னஞ்சிறு மழைத்துளி நான்
தன்னந்தனிமையில் கிடந்ததென்ன
சில துளி சேர்ந்ததனால்
நான் சமுத்திரம் ஆனதென்ன
இருதயம் சிறகடித்து
என் வாழ்வில் இதுவரை பார்த்ததில்லை
எந்நாளும் இருட்டுக்குள் வாழ்ந்திருந்தேன்
என் வானம் தெற்கு பக்கம் விடியக் கண்டேன்

(அன்பே அன்பே...)

வானகம் தாண்டிச் சென்றால்
சொர்க்கம் வருமென்று நினைத்திருந்தேன்
நானூறு மைல் தொலைவில்
என் சொர்க்கம் இங்கு அமையக்கண்டேன்
மலர் ஒன்று தேடி வந்தேன்
இன்று வனத்துக்குள் தொலைந்துவிட்டேன்
மலர் கொண்ட செடி எதுவோ
அன்பு மயக்கத்தில் மறந்துவிட்டேன்
குடும்பத்தின் வாசனையை
இவ்வீட்டின் கூரையில் நுகர்ந்து கொண்டேன்
என் வாழ்வில் இழந்ததை அடைந்துவிட்டேன்
கைமாறாய் இதயத்தை விருந்து வைத்தேன்

(அன்பே அன்பே... )

ஒத்த பனைமரம் போலே வாழ்ந்த நானும்
உறவினில் தோப்பானேன்
இந்த உறவுக்கு என்ன பேரு என்று
உயிருக்குள் அழுகின்றேன்
பால் கொண்ட காபியிலே
இப்போது பாசத்தை கலந்தது யார்
எந்நாளும் அன்பே அன்பே.. அன்பே அன்பே..

(அன்பே அன்பே..)

படம் :
கண்ணும் கண்ணும்
இசை : தீனா
பாடியவர் : தீனா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam