Sunday, August 9, 2009

வாழ்வே மாயமா? வெறும்கதையா?

வாழ்வே மாயமா?
வெறும் கதையா? கடும் புயலா?
வெறும் கனவா நிஜமா?
நடந்தவை எல்லாம் வேஷங்களா?
நடப்பவை எல்லாம் மோசங்களா?
(வாழ்வே மாயமா?)

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒரு நாள் ஒளிகிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

சிரிப்பது போல முகமிருக்கும்
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போல கரமிருக்கும்
அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்
திரைபோட்டு நீ மறைத்தாலென்ன
தெரியாமல் போகுமா?
(வாழ்வே மாயமா?)

திரைப்படம் : காயத்ரி
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடலைப்பாடியவர்: B.S. சசிரேகா



7 Comments:

சென்ஷி said...

இந்தப் படம் சின்ன வயசுல பார்த்திருக்கேன். ஆனா இந்தப்பாடல் நினைவில் இல்லை. பகிர்விற்கு நன்றி அக்கா!

ஆயில்யன் said...

நல்ல பாட்டு

நானும் படம் பார்த்திருக்கேனே!!!!

ரஜினிக்கு இந்த படத்துல நெகடிவ் ரோல் ! செம கலக்கலா இருக்கும்!

சென்ஷி said...

//ரஜினிக்கு இந்த படத்துல நெகடிவ் ரோல் ! செம கலக்கலா இருக்கும்!//

ஓ. அதான் ரஜினி இந்த படத்துல கருப்பா இருக்காரா!?

ஆயில்யன் said...

// சென்ஷி said...

//ரஜினிக்கு இந்த படத்துல நெகடிவ் ரோல் ! செம கலக்கலா இருக்கும்!//

ஓ. அதான் ரஜினி இந்த படத்துல கருப்பா இருக்காரா!?//

சான்ஸே இல்ல எப்பூடீஈஈஈஈஈஈஈஈ!!!!

(படத்துல தலைவரு ஃபுல் மேக்கப்புல வெள்ளை வெளேர்ன்னு இருப்பாரு ஓய்!!!)

சென்ஷி said...

ப்ளாக் அண்ட் ஒயிட் படத்துல ஒருத்தங்க ஒயிட்டா மாத்திரம் தெரியறாங்கன்னா அது நிச்சயம் சந்தோசப்படுற விசயமா ஆயிலு?!

MyFriend said...

////ரஜினிக்கு இந்த படத்துல நெகடிவ் ரோல் ! செம கலக்கலா இருக்கும்!//

ஓ. அதான் ரஜினி இந்த படத்துல கருப்பா இருக்காரா!?//


ROTFL.. :-))

Unknown said...

yesterday i saw this song on sun music. very good song. The singer is sasireka or sailaja?

Last 25 songs posted in Thenkinnam