Tuesday, September 30, 2008

731. பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)


படம்: ரன்
இசை: வித்யாசாகர்
பாடல்: அறிவுமதி
பாடியவர்: ஹரிஹரன்

730. வெண்ணிலவே வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)

படம்: மின்சார கனவு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

Monday, September 29, 2008

729. வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை


<p><a href="undefined?e">undefined</a></p>

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
வரிகள்: தாமரை

Sunday, September 28, 2008

728. ஆராரோ ஆராரோஆராரோ ஆராரோ
நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண்மூட

(ஆராரோ ஆராரோ)

தென்றல் வந்து சேர்ந்ததென்ன
எந்தன் முன்னே பார்த்ததென்ன
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கைதான் கெஞ்சத்தான்
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்
அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்

(ஆராரோ ஆராரோ)

மாலை சூடும் மாலை நேரம்
மலை போலக் கூடவேண்டும்
ஏதேதோ மோகம் தான்
என்னுள்ளே தாகம்தான்
எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க
மெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க

(ஆராரோ ஆராரோ)

படம்: ஆனந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: லதா மங்கேஷ்கர்

***

இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!

727. வளையோசை கலகலகலவென

இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)


உன்னைக் காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)


படம்: சத்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்

Friday, September 26, 2008

726நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்நான் தினமும் சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியை தவறாமல் கேட்பதுண்டு. இரண்டு தடவை ஒலிப்பரப்பிய ”நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்” இந்த காலஞ்சென்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் ஒலித்தொகுப்பு நிகழ்ச்சி என் மனதை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இளையவேள் திரு. எம்.ஆர்.ராதாரவி அவர்கள் தன் தந்தையின் நடிப்புப்பற்றியும் அவர் மற்றவர்களிடம் பழகினார் என்பதையும் விவரித்துள்ளார் இதில் ஓர் இடத்தில் என் தந்தை நடிகவேள் அவர்கள் எனக்கு தெரிந்த வரை சீர்த்திருத்த கருத்துக்கள் சினிமாவில் சொன்ன மாதிரி எந்த ஒரு நடிகரும் தைரியமாக சொல்லி நடித்ததில்லை என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும்” என்று சொன்னார். அவை முற்றிலும் உண்மை நீங்கள் இந்த நிகழ்ச்சியை முழுவதும் கேட்டீர்களானால் சரியாக் புரிந்து கொள்வீர்கள் என்று எனது நம்பிக்கை. ஆமாம் இசைப்பிரியர்களே தொடர்ந்து தேண்கிண்ணத்தில் பாடல்களாக கேட்டு வருகிறீர்கள் இது தங்களூக்கு ஓர் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கும் நான் கேட்டு ரசித்ததை இணைய நண்பர்களூக்காக உங்களூக்கும் வழங்குவதில் மிகவும் மகிழ்கின்றேன். ஆமாம் பாட்டுப்பிரியர்களே வழக்கம் போல் “டிஜ்ஜிடல் வாய்ஸ்” என்று கோவை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பெறும் வானோலி அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயணன் அவர்கள் நிகழ்ச்சி தொகுப்புடன் நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் நினைவுகளை இளையவேள் எம்.ஆர்.ராதா ரவி நமக்காக வழங்குகிறார். இந்த ஒலித்தொகுப்பை ஒலிக்கோப்புக்கள், ராதாரவி அவர்களீன் பேட்டி ஆகியவற்றை சேகரித்து சூரியன் எப்.எம் அவர்களூக்கு வழங்கிய எனது நண்பர்கள் சேலம் மாவட்டம் காசகாரணூர் திரு.ராஜ்குமார், பெரியநாயக்கன் பாளையம் ஜிடி ஜித்தன் மற்றும் பல்லடம். டி,எம்,எஸ் ஆடியோ வீடியோ கடை உரிமையாளர் டி.பழனிசாமி அவரக்ளுக்கு இதயங்கனிந்த நன்றி.
நீயே எனக்கு என்றும் நிகரானவன், புத்தி சிகாமணி பெத்தபிள்ளை போன்ற சில அமர்க்களமான பாடல்கள் உள்ளன. கேட்டு எம்.ஆர்.ஆர். போல் நீங்களூம் சில வரிகளாவது பேசபோகீறீர்கள், இது உண்மை. ஒலிக்கோப்பு இறக்குமதி வகையில் தரப்பட்டுள்ளது நேரம் கிடைக்கதவர்கள் இறக்குமதி செய்து கண்டிப்பாக கேட்டுவிடவும். அப்படியே நமது நண்பர்களூக்கும் வாழ்த்து சொல்லிவிடுங்கள். கோவை ரவி


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, September 25, 2008

725. பாடும் போது நான் தென்றல் காற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

படம்: நேற்று இன்று நாளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Tuesday, September 23, 2008

724. என்னைத் தெரியுமா?
என்னைத் தெரியுமா..... ?
என்னைத் தெரியுமா..
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
வாழ்வை சோலையாக்கலாம்..
இந்தக் காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
( என்னை )

படம்: குடியிருந்த கோவில்
இசை: MS விஸ்வநாதன்

ஒரு சிலையக் கண்டேனே
அது சிரிக்கக் கண்டேனே
இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே
வானிலே ஒரு நிலா.. நேரிலே இரு நிலா
காதல் அமுதைப் பொழியலாம்..
அவள் அருகில் வந்து பழக
நான் மெழுகைப் போல உருக
இதழ் பிழியப் பிழிய தேனை எடுத்து எனக்குத் தந்தாளே
கொடுத்ததை நினைக்கலாம்
கொடுத்தவள் மறக்கலாம்..
( என்னை )

படம்: குடியிருந்த கோவில்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: வாலி

723. அவள் ஒரு நவரச நாடகம்

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
(அவளொரு)

மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
(மரகத மலர்)
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம் அஹஹஹா
(அவளொரு)

அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
(அறுசுவை)
ஊடல் அவளது வாடிக்கை
(ஊடல்)
என்னைத் தந்தேன் காணிக்கை அஹஹஹா
(அவளொரு)

படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்பவர்கள்: புனிதா, ஸ்ரீமதி

Monday, September 22, 2008

722. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?


<p><a href="undefined?e">undefined</a></p>

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)

படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

Sunday, September 21, 2008

721. சத்யம் - என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேரில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீயாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

அத்தடி ஆசை அலைப்பாய
செய்துக்கோ மீசை கொடைசாய
குத்தடி கூட மழை பெய்ய
ஏத்துக்கோ அட உனக்காய
(அத்தடி..)
(என் அன்பே..)

தலை தொடும் மழை
சேவை டொடும் இசை
இடல் தொடும் சுவை
இனிப்பாயே
விழி தொடும் திசை
விரல் தொடும் கணை
உடல் தொடும் இடை
இணைவாயே
யாவும் நீயாய் மாறி போக நானும் நானில்லை
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லை
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

அத்தடி அசைதேன் போனாயா
அசையுள் விழுந்தேன் போனாயா
நக்கடி நழிந்தேன் போனாயா
காதலில் கரைந்தேன் போனாயா
அத்தடி அசைதேன் போனாயா
அசையுள் விழுந்தேன் போனாயா
நக்கடி நழிந்தேன் போனாயா
காதலில் கரைந்தேன் போனாயா
(என் அன்பே..)

கருநீல சிலை
அறுபது கலை
பரவச நிலை
பகல் நீயே
இலகிய பனி
எழுதிய கவி
சுவை மிக கனி
சுகம் நீயே
குடு பாவை வேக தொடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாக தொடு ஆசை மாத்திடுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

அத்தடி அசைதேன் போனாயா
அசையுள் விழுந்தேன் போனாயா
நக்கடி நழிந்தேன் போனாயா
காதலில் கரைந்தேன் போனாயா
அத்தடி அசைதேன் போனாயா
அசையுள் விழுந்தேன் போனாயா
நக்கடி நழிந்தேன் போனாயா
காதலில் கரைந்தேன் போனாயா
(என் அன்பே..)

படம்: சத்யம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சாதனா சர்கம்
வரிகள்: யுக பாரதி

720. நான் பேச நினைப்பதெல்லாம்


<p><a href="undefined?e">undefined</a></p>

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)

படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: ஸ்ரீ

719. நான் அவள் அது - காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே


<p><a href="undefined?e">undefined</a></p>

காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை

கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
அடிமனம் அதிலே ஆசைக்குள்ளே
மனசுக்குள் மனசே நுழைவது அழகே

காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம்
ஆடை என் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா?
காதல் என்ன வெண்மேகமா?
அதையும் தாண்டும் ஆகாயமா?
எல்லையற்ற ஒரு தாகமா என்ன?
அடி மனம் அதிலே ஆசைக்குள்ளே
காதல் என்றால் அது ஒரு கீதை

ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே
காதலியாக என் முன்னால்
காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்க்ள் பூத்திடுமே
நீயா?
காதல் பயணம்..
நாந்தான்..
காதல் உலகம்..

காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை

படம்: நான் அவள் அது
இசை: RP பத்நாயக்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நிஹால்

718. வாரணம் ஆயிரம் - ரகசியம் ஒன்று சொன்னான்ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று
எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும்
விழிகளுக்கு ஏன் இந்த புழுக்கம்
அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்

கன்னி பருவம் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்
தூக்கம் தொலைத்தாய்
(ரகசியம்..)

அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன்
காற்றில் கலந்த அவள் ஸ்வாசம் என்னை மட்டும் தீண்ட
கொள்ளை கொண்டு போனாள்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை கொடு

கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் கண்ணா
உன்னி புகுந்த தூக்கம் கொலை காரி
தூக்கம் தொலைத்தாய்

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

717. தாம் தூம் - திக்கு திக்கு திக்கு திக்குனு

திக்கு திக்கு திக்கு திக்குனு
மனசு அடிக்குதே எனக்கு ஆ..
சிக்கு சிக்கு சிக்கு சிக்குனு
அழகு வெடிக்குதே உனக்கு
நானே நானே நானா?
யாரோ யாரோ தானா?
தேனே கொஞ்சம் போனா சொர்கம் தானா
நீயும் நீயும் நீயா
நெஞ்சில் ஈர தீயா லோகம் மொத்தம் மாயா
மெய் சொல்வாயா?

தூம் தூம் வெட்கத்தை வீசு
தூம் தூம் முத்தத்தில் பேசு
தூம் தூம் மலரத்தை நீட்டு
தூம் தூம் மனசுக்கா பூட்டு? ஆ..

ஒரு கையில் பானம் கொண்டு
ஒரு கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று பறிமாறி கொள்வோம்
மது இங்கே மதுவை அருந்தியதே ஈ..ஆ..
போதைக்கு போதை ஏறியதே ஈ..ஆ..
உனை நீயே உணர மனம் உளர இரு வரம் தரும் திரவமே

தூம் தூம் நெஞ்சத்தை கொன்றாய்
தூம் தூம் எங்கேயோ சென்றாய்
தூம் தூம் நில்லாமல் நின்றாய்
தாம் தூம் போதாது என்றாய்

திக்கு திக்கு திக்கு திக்கு ஊ மனசு
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு ஊ அழகு

மனம் என்னும் கூடை பந்து
மதில் எல்லாம் தாண்டி சென்று
தரையோடு மோதிக்கொன்று
கரை தேடும் வந்து
குதிரைக்குள் குதிரை எறியாதே ஈ..
தேன் வண்டு மதுரம் ஊறியதே ஈ..
உரசாத இதயம் ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்குமா

ஹ்ம் ஹ்ம் நெஞ்சத்தை தொட்டு
ஹ்ம் ஹ்ம் உள்ளத்தை கொட்டு
ஹ்ம் ஹ்ம் அச்சத்தை விட்டு
ஹ்ம் ஹ்ம் உச்சத்தை எட்டு

திக்கு திக்கு திக்கு திக்கு நு
நானா ஏ நானா ஏ நானா ஆ..
சிக்கு சிக்கு சிக்கு சிக்கு நு
பன ஏ பன ஏ பானா

நானே நானே நானா?
ஆ.. யாரோ யாரோ தானா? ஓ

தேனே கொஞ்சம் போனா சொர்கம் தானா?
ஆ..ஆஆஹூஹா..
நீயும் நீயும் நீயா? ஓஹோ..

நெஞ்சில் ஈர தீயா ஓஹோ..
லோகம் மொத்தம் மாயா
மெய் சொல்வாயா?

தூம் தூம் வெட்கத்தை வீசு
தூம் தூம் முத்தத்தில் பேசு
தூம் தூம் மலரத்தை நீட்டு
தூம் தூம் மனசுக்கா பூட்டு?

தூம் தூம் வெட்கத்தை வீசு
தூம் தூம் முத்தத்தில் பேசு
தூம் தூம் மலரத்தை நீட்டு
தூம் தூம் மனசுக்கா பூட்டு?

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பென்னி தயாள், சயனோரா பிலிப்

716. குருவி - தேன் தேன் தேன்தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்

என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்

தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...

ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..

படம்: குருவி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், ஷ்ரேயா கோஷல்

Saturday, September 20, 2008

715. சரோஜா - கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
ஒய்யாரி..
ஏ அசந்து புடி
சிங்காரி..
நீ அழுத்தி பிடி
கொடியேத்தி..
தூக்கி பிடி இனி ரூட்டை கொஞ்சம் மாத்து

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி

குற்றாலத்து ஊத காத்து
கூத்தாடுது நேரம் பார்த்து
இப்போ சுதி ஏறுது தன்னாலே
அம்மாடி உன் ஆட்டம் பார்த்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே

ஏதோ தோணுது எதுவோ நோகுது உன்ன பார்த்ததாலே
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததாலே

விடாது இந்த மோகம் வேகம்
தொடாமல் தொட்டு சேறும்
தடால் தடால்ன்னு அடிக்கிற மனசு
வௌவாலு மேலே பாயும்
வராதது வந்தாச்சுடா கொண்டாடலாம்
இனி நம்ம நேரம்தானே

துட்டாலே நீ கட்டி போடு
தூங்காமல் தான் கானா பாட்டு
விட்டால் இது வித வித விளையாட்டு
எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
எப்போ சுகம் விடுமாடா

காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழ
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு
பொன்னால மாலை எப்போதும் போடு
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும்
விடாத கொஞ்சம் கேப்பு
எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாருக்கும்
இனி நம்ம நேரம் தானே

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
ஒய்யாரி..
ஏ அசந்து புடி
சிங்காரி..
நீ அழுத்தி பிடி
கொடியேத்தி..
தூக்கி பிடி இனி ரூட்டை கொஞ்சம் மாத்து

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லம், ரனினா, கவி

714. சரோஜா - Let's get Cheeky Cheeky>

Get on the floor
Haters this ain't no time for y'all
And for I don't talk for y'all
I am saying

அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு

இனி நாளைய உலகம் நம்பிடும்
Let's get Cheeky Cheeky
ஆள பாருங்கடா
அண்ட ஆவியும் அந்தமும் பெண்ணிடம்
Let's get Cheeky Cheeky
மாலை போடுங்கடா
இங்கும் பெண்களும் காலடி பதிவுகள்
அண்ட அந்தங்கள் யாவிதும் பதிவுகள்
ஏ ஓ ஏ ஓ எஹோ..
நல்ல சுவியெல்லாம் தேவைகள் எதையும்
இந்த ஜீவனும் முழுவதும் சிநேகமே
ஏ ஓ ஏ ஓ எஹோ..

Get cheeky all get cheeky all
Brother get cheeky all sister get cheeky all
get it get it get it
And for I don't talk for y'all

அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
Baby girl you're messed up ho-ho ha a move your body
Hold on girl, move a little faster you're so fine shortie

அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
அடிச்சா ஹார்ட்டுக்கு பீட்டு
குடிச்சா மேனுக்கு ஹீட்டு
Come on baby keep rising to the room now
Let's get Cheeky Cheeky
Feels like playing till 5
Gotta play us in the house nw getting naughty
Let's get cheeky cheeky take it even higher

புதுசா போட்டுக்கோ ரூட்டுக்கு
குடிச்சா ஊருக்கு வெட்டு
புதுசா போட்டுக்கோ ரூட்டுக்கு
குடிச்சா ஊருக்கு வெட்டு

ஓ ஓ ஓ ஓ
Baby girl you're messed up ho-ho ha a move your body
Hold on girl, move a little faster you're so fine shortie

இனி நாளைய உலகம் நம்பிடும்
Let's get Cheeky Cheeky
ஆள பாருங்கடா
அண்ட ஆவியும் அந்தமும் பெண்ணிடம்
Let's get Cheeky Cheeky
மாலை போடுங்கடா
இங்கும் பெண்களும் காலடி பதிவுகள்
அண்ட அந்தங்கள் யாவிதும் பதிவுகள்
ஏ ஓ ஏ ஓ எஹோ..
நல்ல சுவியெல்லாம் தேவைகள் எதையும்
இந்த ஜீவனும் முழுவதும் சிநேகமே
ஏ ஓ ஏ ஓ எஹோ..

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, மதில்டா, நிர்தயா

713. சரோஜா - மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

ஹேய் நண்பா பொண்ண பூ போல காப்பாத்து
கூஜாவத்தான் காலம் பூராவும் நீ தூக்கு

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

யார் மனதில் யாரென்று காணுவது எளிதன்று
சிதம்பர ரகசியமே
யார் கழுத்தில் யார் மாலை
கூறுவது யார் வேலை
இறைவனின் திருவுலமே

நேசம் இதை நெஞ்சில் போட்டாலும்
நாள் முழுதும் நீரை விட்டாலும்
நாற்று வர வேரிடம் சேறுமே
பெண்கள் இடம் விட்டு இடம் விட்டு பெயர்கிற பயிரடா

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

ஹேய் ஹேய் காதல் காதல் டைட்டானிக்
காதலுக்கு அது டானிக்
கடலையும் புயலையும் கடந்து நில் அஞ்சாதே
மனைவிக்கொரு மரியாதை
கொடுப்பதற்க்கு மறவாதே
போன பின் அவளுக்கு தாஜ் மகால் கட்டாதே

கொடுத்த வைத்த நண்பா நீ வாழ்க
கோல மயில் நிழலில் நலமாக
இன்று முதல் ஆயிரம் ஆண்டுகள்
தினம் எடு எடு இஅவினில்
சுகம் என்ற புதயலடா

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SPB சரண், ப்ரேம்ஜி அமரன், விஜய் ஜேசுதாஸ்

712. சரோஜா - நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது
உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதை விடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னேறு
(நிமிர்ந்து நில்..)

நேற்றுமில்லை நாளையில்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாற வேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கைகள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரம் இன்று பிறப்பதில்லை
வீரனாக ஆவதுண்டு
கோழை என்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போதுதான் சோதனை
(நிமிர்ந்து நில்..)

விழுவெதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாதே மோதி பாரு
முயன்று ஏறு முடிவில் உந்தன்
படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
மாண்டவர் யார் உலகம் சொல்லும்
நீயு முன்னாடியே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும்
உன் முன்னே தடைகள் இல்லை
(நிமிர்ந்து நில்..)

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

711. சரோஜா - தோஸ்து படா தோஸ்து

தோஸ்து படா தோஸ்து
தோஸ்துக்கு இல்லை வாஸ்து
சௌத்து முதல் நோர்த்து
சொல்லி கொடி ஏத்து

நண்பா வானம் அப்பவும்
இப்பவும் எப்பவும் க்லீன்தான்
ஆ.ஆ..
நாம் நாம்தான் ஒன்றுக்குள்
ஒன்றானால் ஒலிம்பிக் ரிங்தான்
ஆஆ..

குறையாது நம்ம சிநேகம்
குறையாது நம்ம வேகம்
குறையாது நம்ம ராகம்
(தோஸ்து படா..)

கனவுகளை காணலாம் காரியங்களை
கூடலாம் என்று
கலாம் கலாம் அப்துல் கலாம் சொன்ன
வார்த்தைக்கு ஓர் சலாம்
ஓ ஓ ஓ ஓ..

இலைய நதி திறந்து வருகிறோம்
இடையினில் தடைகள் இருந்தால் தகர்ப்போமே
ஒஜோன் என்ற வானில் கூட
ஓட்டை உண்டு
நமது வாழ்வில் ஓட்டை இல்லா
இல்ல கோட்டை ஒன்று
(தோஸ்ட்து படா..)

நமது விரல் கையே
தவழ்ந்து வரும் வெற்றியே
நாம் தொடும் யாதும் துவங்கிடும்
நம்ம ஜாதகம் அப்படி
கத்து கத்து கப்பில அடை மழை
நினைத்தால் வானத்தை பிடிக்கலாம்
(தோஸ்து படா..)

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரன், ராஹுல் நம்பியார், நவீன்

Friday, September 19, 2008

710. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்
(நெஞ்சினிலே)

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: S ஜானகி

விரும்பி கேட்டவர்: மங்கை

709. தக தய்ய தய்ய தய்யா தய்யா

காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா

தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

(நெஞ்சு)

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
(தக தய்ய)
(நெஞ்சு)
(அவள் கண்களோடு)
(தக தய்ய)
(தக தய்ய)

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுபா, சுக்விந்தர் சிங்

விரும்பி கேட்டவர்: சிவமுருகன்

Thursday, September 18, 2008

708. நீ மழை நான் இலைநீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்

விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காண கண்ணீரோ
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஓஹோஹோஹோ.....

படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுனிதா சாரதி

707. சட்டென நனைந்தது நெஞ்சம்

Sattena Nanaindhadhu - AR Rahman

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்

தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்


படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மின்மினி

706. மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

Wednesday, September 17, 2008

705 : பூங்காற்று உன் பேர் சொல்ல...!


பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்

(பூங்காற்று உன் பேர் சொல்ல...)

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்

வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
(பூங்காற்று உன் பேர் சொல்ல...)

704. பூமாலையே தோள் சேரவா

பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )

நான் உனை நினைக்காத நா…ளில்லையே
தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

703.ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு

ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு
தோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு
ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்தது
பெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்தது
வீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்தது
கூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது


(ஊரோரமா)


அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருது
இங்கே அது வந்தால் பெருங்குத்தம் வருது
அங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுது
இஙே பல பெட்டை விரல் பட்டால் சுடுது
கண்ணாடி மீனா பின்னாடி போனா
கண்ணாலே முறைப்பாளே
என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறைப்பாளே
நாள்தோறுமே உறவைக்காட்டும்
பண்பாடிடும் குருவி கூட்டம் நான் தான்


(ஊரோரமா)


அங்கே ஒரு சொர்கம் அது இங்கே வருமோ
இங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோ
எல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவை
கண்ணும் இளநெஞ்சும் அதில் காணும் உறவை
பெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும்
ஆண் வர்க்கம் அங்கேது
அம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கை
நம்மாலே ஆகாது
நாம்தான் ஒரு பறவை கூட்டம்
நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா வா


(ஊரோரமா)படம்: இதயக் கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

Tuesday, September 16, 2008

702 : காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே?காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)

கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!

பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

701. பாட்டுத் தலைவன் பாடினால்
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுதான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுதான்

சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே

(பாட்டுத் தலைவன் பாடினால் )

பாதி ஜாமம் சாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
ஊரைத் தூக்கம் ஆளும்போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நாந்தானே தாலாட்டும் நிலவு

(பாட்டுத் தலைவன் பாடினால்)


படம்: இதயக்கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

Monday, September 15, 2008

700. ராசாத்தி என் உசுரு என்னுதில்லை

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள

காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே
மஞ்சளை அறைக்கு முன்னே மனசை அறைச்சவளே
கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சிவளே
நல்ல களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு
போறவ போறவ தான் பொத்திகிட்டி போனவ தான்
கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு
போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு புட்டு
அரளிப் பூசூடி அழுதபடி போற புள்ள
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே
மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே
அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ
பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ
அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ
கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
(ராசாத்தி என் உசுரு என்னுதில்லை...)

படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமீட்

699. நிலாவே வா செல்லாதே வா

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

காவேரியா கானல் நீரா பெண்மை எது உண்மை
முள்வேலியா முல்லைப் பூவா சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட சந்தம் பாட
கூடாதென கூறும் பூவும் ஏது மண்ணின் மீது
ஒரேயொரு வார்த்தை சொன்னாலென்ன தேனே
ஒரேயொரு பார்வை தந்தாலென்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே
(நிலாவே வா செல்லாதே வா...)

படம்: மௌனராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Sunday, September 14, 2008

698. அந்திமழை மேகம் தங்க மழை தூவும்
அந்திமழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் வந்ததெனப் பாடும் பெருநாளாம்
ஓ இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
தேரோடும் திருநாளாகும்
நாள்தோறும் இந்த ஊர்கோலம்

(அந்திமழை மேகம்)

நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
மாடங்கள் கலைக்கூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்
நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

(அந்திமழை மேகம்)


பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்
ஊரெல்லாம் களியாட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்
வீடுதோறும் மங்களம் இன்று வந்தது
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

(அந்திமழை மேகம்)

படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடல்: புலமைப்பித்தன்
பாடியவர்கள்: டி.எல்.மகாராஜன், பி.சுசீலா

***

விரும்பிக் கேட்டவர்: ஜிரா

697. வளர்ந்த கலை மறந்து விட்டாள்...
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
[வளர்ந்த ..]
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
[குடும்பக் ..]

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
[வளர்ந்த...]

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

இங்க வாங்க வீடியோ பாக்கலாம்

படம் : காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

Friday, September 12, 2008

696. அன்பு நடமாடும் கலை கூடமே
அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே
(அன்பு)

மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே
(அன்பு)

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே
(அன்பு)

மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே
(அன்பு)

படம்: அவந்தான் மனிதன்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

Thursday, September 11, 2008

695. அமைதியான நதியினிலே ஓடும்
டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்..

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்

சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

டி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த

அந்த பெண்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

படம்: ஆண்டவன் கட்டளை
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

Wednesday, September 10, 2008

694. தென்னை மரத்துல தென்றல் அடிக்குது

thenna marathula_thendraladikuthu - suseela ilayaraja


தென்னை மரத்துல தென்றல் அடிக்குது
நந்தவனக் கிளியே அடியே
புன்னை வனக்குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
திகட்டாது பசிக்காது
சின்னமணிக் குயிலே அடியே
உன்னை நினைக்கையிலே

(தென்னை மரத்துல)

கன்னம் சிவக்குது எண்ணம் தவிக்குது
உன்னை நினைக்கையிலே இதமா
என்னை அணைக்கையிலே

கண்ணு சிமிட்டுது என்ன விரட்டுது
மெல்லச் சிரிக்கையிலே நீதான்
என்ன ரசிக்கையிலே

உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்குது
கட்டிப் புடிக்கையிலே நெசமா
கையைப் புடிக்கையிலே

இது அணைச்சாலும் குறையாது
அழிச்சாலும் மறையாது
சொல்லத் தெரிஞ்சிருந்தும் அதை நான்
சொல்ல முடியலையே

(தென்னை மரத்துல)

பட்டுக் கழுத்துல முத்து தெரியுது
பொண்ணு சிரிக்கையிலே அழகு
கண்ணைப் பறிக்கையிலே

தொட்டுத் தழுவுன்னு சொல்லி அழைக்குது
இந்த மனசினிலே ரெண்டும்
சின்ன வயசினிலே

விட்டு விலகுன்னு வெட்கம் தடுக்குது
போக முடியலையே எனக்கு
ஏதும் புரியலையே

நான் பாய் போட்டு படுத்தாலும்
பாலாகக் குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலயே எனக்கு
ஏதும் ருசிக்கலையே

(தென்னை மரத்துல)

சின்னஞ்சிறுசுக கொஞ்சிக் குலவுது
அந்திப் பொழுதினிலே ஊஞ்சல்
ஆல விழுதினிலே

கன்னி வயசுல பொண்ணு சிரிக்குது
என்ன சுகம் அதிலே நெனச்சு
ஏங்கித் தவிப்பதிலே

இன்ப நெனப்புல வெந்து தவிக்குது
பட்டப் பகலினிலே கொளுத்தும்
உச்சி வெயிலினிலே

இது தானாக ஆறாது
தழுவாம தீராது
ஒண்ணும் புரியலையே புரிஞ்சும்
சொல்லத் தெரியலையே

(தென்னை மரத்துல)


படம்:லட்சுமி
இசை: இளையராஜா
பாடல்: ஆலங்குடி சோமு
பாடியவர்கள்: இளையராஜா, பி.சுசீலா

***

விரும்பிக் கேட்டவர்: ஜிரா

693. மன்னவனே அழலாமா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும்
கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும்
உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல்
கலங்குவதும் நீயல்லவா

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால்
என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா ...

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க

படம்: கற்பகம்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Tuesday, September 9, 2008

692. அன்புள்ள மான் விழியே
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை !
அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன் !

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே
இளையகன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா
அன்புள்ள ம‌ன்ன‌வ‌னே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

உன‌க்கொரு பாட‌ம் சொல்ல‌ வ‌ந்தேன்
என‌க்கொரு பாட‌ம் கேட்டுக் கொண்டேன்
உன‌க்கொரு பாட‌ம் சொல்ல‌ வ‌ந்தேன்
என‌க்கொரு பாட‌ம் கேட்டுக் கொண்டேன்
ப‌ருவ‌ம் என்ப‌தே பாட‌ம் அல்ல‌வா
பார்வை என்ப‌தே ப‌ள்ளி அல்ல‌வா
ஒருவ‌ர் சொல்ல‌வும் ஒருவ‌ர் கேட்க‌வும்
இர‌வும் வ‌ந்தது நில‌வும் வ‌ந்த‌து

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதிவந்தேன்

படம்: குழந்தையும் தெய்வமும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

691. பாட வந்ததோ கானம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள் ஊறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

(பாட வந்ததோ)


ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்

அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி


(பாட வந்ததோ கானம்)


மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்

(பாட வந்ததோ கானம்)


படம்: இளமைக் காலங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்:பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல்: வாலி

Monday, September 8, 2008

690. அன்று வந்ததும் அதே நிலா

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா.. ஆஆஆஆ
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா.. ஆஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

படம்: பெரிய இடத்துப் பெண்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

689. நதியோரம் நாணல் ஒன்று

நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல


நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

( நதியோரம் )

வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல


( நதியோரம் )


தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

( நதியோரம் )


படம்: அன்னை ஓர் ஆலயம்
இசை: இளையராஜா
பாடியவர்கள். பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Sunday, September 7, 2008

688. மாளவிகா மாளவிகா

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

687. கண்ணனுக்கு என்ன வேண்டும் - தனம்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்

தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)

அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும்
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)


படம்: தனம்
இசை: இளையராஜா
பாடல்: விசாலி கண்ணதாசன்
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

686. சிறு பொன்மணி அசையும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளையானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

(சிறு பொன்மணி)


படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி

Saturday, September 6, 2008

685. கண்ணை கசக்கும் சூரியனோ

கண்ணை கசக்கும் சூரியனோ
Red! Red! Red! Red!
காணும் மண்ணில் சரி பாதி
Red! Red! Red! Red!
உடம்பில் ஓடும் செங்குருதி
Red! Red! Red! Red!
உளைக்கும் மக்கள் உள்ளங்கை
Red! Red! Red! Red!

நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!

பிள்ளை தமிழ் இனமே
எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய்
தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம்
தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே
நடு! நடு! நடு!

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்

சரியா? சரியா?
ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா?
ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!

குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
(குடிக்கும்...)
(கண்ணை கசக்கும்...)

என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்
இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உளைத்தே உண்ணுங்கள்

குழந்தாய்! குழந்தாய்!
இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு
பொண்ணே!
இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
(உலகத்தை...)
(கண்ணை கசக்கும்...)
(நிறத்துக்கு...)
(பிள்ளை...)

படம்: ரெட்
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

684. யாரோ யார் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்
வலை தேடி நீயே அதில் வீணாக
விழாதே நீ விழாதே

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ
எவர் நெஞ்சினில் தான் யாரோ

காதல் தேன் நானோ
காதல் மீன் நானோ
விடை சொல்பவர் தான் யாரோ

யாரோ யார் யாரோ
யாரோடு யாரோ..

படம்: உல்லாசம்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, பவதாரினி

683. பூந்தளிராட பொன்மலர் சூட

பூந்தளிராட பொன்மலர் சூட
சிந்தும் பனி வாடைக் காற்றைக்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள் - இனி
நாடும் சுபகாலங்கள்

(பூந்தளிராட பொன்மலர் சூட)

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனைப் பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே

கோடிகள் ஆசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

(பூந்தளிராட பொன்மலர் சூட)

பூமலர் தூவும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதே

பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

(பூந்தளிராட பொன்மலர் சூட)


படம்: பன்னீர் புஷ்பங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

Last 25 songs posted in Thenkinnam