சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மின்மினி
Thursday, September 18, 2008
707. சட்டென நனைந்தது நெஞ்சம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:40 AM
வகை 2000's, AR ரஹ்மான், மணிரத்னம், மின்மினி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Super Song. Thanks for Sharing Kappi. :-)
Post a Comment