Thursday, September 4, 2008

678. சந்தன தென்றலை




இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே

(இல்லை இல்லை சொல்ல)


இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிறொன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
என்தன் வாழ்க்கையே
உன்தன் விழி விளிம்பில்
என்னை துரத்தாதே
உயிர் கரை ஏறாதே

(இல்லை இல்லை சொல்ல)


விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே
இன்னும் தயக்கம் என்ன
என்னைப் புரியாதா
இது வாழ்வா சாவா


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மகாதேவன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam